பள்ளிக் கல்வித் துறையில் உள்ள துறைத் தலைவர்களின் (JD, DD, CEO only) சொத்து, கடன் மற்றும் பொறுப்பு விவரங்களை 31.10.2026க்குள் IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

  

1352860

 பள்ளிக் கல்வித் துறையில் உள்ள துறைத் தலைவர்களின் (JD, DD, CEO only) சொத்து, கடன் மற்றும் பொறுப்பு விவரங்களை 31.10.2026க்குள் IFHRMS ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


 பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரியும் அனைத்து இணை இயக்குநர்கள் /துணை இயக்குநர்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மற்றும் கடன். பொறுப்புகள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளில் விதி 7(3)ல் வரையறை செய்யப்பட்டவாறு உரிய படிவத்தில், (படிவம் 1-5) பூர்த்தி செய்து, இவ்வியக்ககத்திற்கும் அனுப்பி வைக்கும்படி, பார்வை 2 இல் காணும் இவ்வியக்கக செயல்முறைகளில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.



 தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973 இல் விதி 7(3) இன்படி அசையும் /அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை. ஒருங்கிணைந்த மனித வள நிதி மேம்பாட்டுத்திட்டம் IFHRMS களஞ்சியம் செயலி வாயிலாக, 31.10.2026 என்ற க்குள் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது விவரத்தினை கனிவுடன் தெரிவித்துக்கொள்வதுடன், அக்கடித நகலினை இத்துடன் இணைத்தனுப்பி வைக்கிறேன். அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து இணை இயக்குநர்கள் /துணை இயக்குநர் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் IFHRMS ID Number / Password உபயோகித்து தத்தமது அசையும் /அசையா சொத்துக்கள் மற்றும் கடன் பொறுப்புகள் குறித்த விவரங்களை IFHRMS களஞ்சியம் செயலியில் 31.10.2026 க்குள் தவறாமல் உள்ளீடு செய்து அதன் விவரத்தினை இவ்வியக்கத்திற்கு தெரிவிக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

DSE - Submission of return of Assests and Liabilities by Govt. Servants through IFHRMS - Instructions.pdf

👇👇👇👇

Download here



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment