ஓய்வூதிய விண்ணப்பத்தை நவம்பர் முதல் இணைய வழியில்தான் சமர்ப்பிக்க வேண்டும்

  hindutamil-prod%2F2026-10-24%2F6zvtq4nm%2F15451212

அரசு ஊழியர்​களின் ஓய்​வூதிய விண்​ணப்​பங்​களை நவம்​பர் மாதம் முதல் இணைய வழி​யில் மட்​டுமே சமர்ப்​பிக்க வேண்​டும். அதன் பிறகு பெறப்​படும் காகித விண்​ணப்​பங்​கள் மீது எந்த நட​வடிக்​கையும் எடுக்​கப்​படாது என்று கரு​வூலக் கணக்​குத் துறை தெரி​வித்​துள்​ளது.

இது​தொடர்​பாக கரு​வூலக் கணக்​குத் துறை இயக்​குநர் டி.சாரு, துறைசார்ந்த அனைத்து அலு​வலர்​களுக்​கும் அனுப்​பியுள்ள சுற்​றறிக்​கை​: முன்​னர் அனுப்​பப்​பட்ட காகித வடி​வி​லான சில ஓய்​வூதிய விண்​ணப்​பங்​கள், அவற்​றுக்​கான இணை​ய​ வழி விண்​ணப்​பங்​கள் பெறப்​படுவதற்கு முன்பே தீர்க்​கப்​பட்டு விட்​ட​தாக தமிழ்​நாடு முதன்​மைக் கணக்​காயர் அலு​வல​கம் அனுப்​பிய கடிதத்​தில் தெரி​விக்​கப்​பட்​டிருந்​தது. இத​னால், ஓய்​வூதிய வழக்​கு​களைச் செயல்​படுத்​து​வதில் முரண்​பாடுகள் ஏற்​பட்​ட​தாகவும் அதில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து, ஓய்​வூதிய விண்​ணப்​பங்​களை விரைவாக செயல்​படுத்​த நவம்​பர் முதல் அனைத்துவிண்​ணப்​பங்​களும் இணை​ய​வழி ஓய்​வூதிய மற்​றும் வருங்​கால வைப்​புநிதி அங்​கீகார அமைப்பு (OPPAS) மூலமாக மட்​டுமே சமர்ப்​பிக்​கப்​பட வேண்​டும் என்று அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன் பிறகு பெறப்​படும் காகித விண்​ணப்​பங்​கள் மீது எந்த நட​வடிக்​கையும் எடுக்​கப்​படா​மல் உடனே திருப்பி அனுப்​பப்​படும். திருத்​திய ஓய்​வூதிய விண்​ணப்​பங்​களை​யும் இணைய வழி​யில் மட்​டுமே சமர்ப்​பிக்க வேண்​டும். தேவை​யான அனைத்து சான்​றுகளும் உரிய முறை​யில் இணைக்​கப்​பட வேண்​டும்.

ஓய்​வூதி​யப் பலன்​கள் உரிய காலத்​தில் வழங்​கப்​படுவதை உறுதிசெய்ய, தங்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள அனைத்து சம்​பள அலு​வலர்​களுக்​கும் இந்த அறி​வுறுத்​தல்​களை தெரி​வித்து, அவை கண்​டிப்​பாகப் பின்​பற்​றப்​படுவதை உறுதிசெய்ய வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment