நீட் மறுதேர்வு ஒத்திவைப்பா? – NTA விளக்கம்
நீட் மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாகப் பரவிவரும் வதந்திகளுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.
கடந்த மே 3 ஆம் தேதியில் இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து, நடந்து முடிந்த நீட் 2026தேர்வு ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூன் 21 ஆம் தேதியில் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஜூன் 21-ல் நடைபெறவுள்ள நீட் மறுதேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
ஆனால், நீட் மறுதேர்வு ஒத்திவைப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, "இளநிலை நீட் 2026 தேர்வுக்கு இன்னும் 3 நாள்களே உள்ளன. ஒவ்வொரு தேர்வரும் கடினமாக உழைத்தீர்கள். இப்போது நீங்கள் தயாராகி விட்டீர்கள். உங்கள் முயற்சியை நம்ப வேண்டிய நேரமிது.திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும். தேர்வு ஒத்திவைப்பு பற்றிய வதந்திகளால் திசைதிருப்பப்பட வேண்டாம். தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ தகவல்கலை மட்டுமே நம்புங்கள்.மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள், பாதுகாப்பு அமைப்புகளுடனான ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பான மற்றும் நியாயமான தேர்வுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளனர்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment