மேல்நிலை துணை தேர்வுகள்: தனித் தேர்வர்களுக்கு இன்று ஹால்டிக்கெட் வெளியீடு

 மேல்​நிலை துணைத் தேர்​வெழுதும் தனித் தேர்​வர்​களுக்கு ஹால்டிக்கெட் இணை​யதளத்​தில் இன்று பதிவேற்​றம் செய்​யப்​படும் என, அரசு தேர்​வுத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அரசு தேர்​வு​கள் இயக்​குநர் கே.சசிகலா நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: மேல்​நிலை இரண்​டாம் ஆண்டு மற்​றும் முதலாம் ஆண்டு (11 மற்​றும் 12-ம் வகுப்​பு) துணைத் தேர்வுகள் ஜூன் மற்​றும் ஜூலை மாதத்​தில் நடை​பெற உள்​ளன.

தேர்​வெழுத விண்​ணப்​பித்த தனித் தேர்​வர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் அரசு தேர்​வுத் துறை​யின் இணை​யதளத்​தில் (www.dge.tn.gov.in) இன்று (23-ம் தேதி) பதிவேற்​றம் செய்​யப்​படும். தேர்​வர்​கள் இன்று பிற்​பகல் முதல் இணை​யதளத்​தில் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம்.

தாங்​கள் எழுத வேண்​டிய பாடங்​கள் மற்​றும் தேர்வு நாட்​கள் சரி​யாக குறிப்​பிடப்​பட்​டுள்​ள​தாக என்​பதை தேர்​வர்​கள் சரி​பார்த்​துக் கொள்ள வேண்​டும். ஹால்​டிக்​கெட் இல்​லாமல் தேர்​வெழுத அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள்.

செய்​முறைத் தேர்வு தேதி குறித்த விவரங்​களை தங்​களுக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்ள தேர்வு மையத்​தின் முதன்மை கண்​காணிப்​பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்ளார்.

இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment