அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய டிப்ளமா படிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 32 அரசு உதவிபெறும் பாலிடெக்னிக்குகளும், 400-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும் உள்ளன.
இவற்றில் 25 விதமான டிப்ளமா படிப்புகள் வழங்கப்படுகின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய வேலைவாய்ப்புச் சூழலை கருத்தில் கொண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பேக்கேஜிங் டெக்னாலஜி, பெட்ரோகெமிக்கல் இன்ஜினியரிங், ஃபுட்வேர் டெக்னாலஜி, லெதர் மற்றும் ஃபேஷன் டெக்னாலஜி, ஃபேஷன் மற்றும் குளோத்திங் டெக்னாலஜி ஆகிய 5 புதிய டிப்ளமா படிப்புகளை அறிமுகப்படுத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது.
அவற்றுக்கான வரைவு பாடத்திட்டம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளத்தில் (https://dte.tn.gov.in/) வெளியிடப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான கருத்துகளை curriculumspecial2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜூன் 30-ம் தேதி வரை அனுப்பலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் கூறியுள்ளார்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment