அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலியிடங்கள் எத்தனை? - பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுப்பு

 அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள இடைநிலை ஆசிரியர், பட்​ட​தாரி ஆசிரியர் பணி​யிடங்​களின் விவரங்​களை அனுப்​பக் கோரி பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதுதொடர்​பாக பள்​ளிக்​கல்வி இணை இயக்​குநர் (பணி​யாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்​மை கல்வி அதி​காரி​களுக்கு அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை​: அரசு, நகராட்​சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்​ளி​களில் 31.5.2025 நில​வரப்​படி, அனைத்​துப் பாட பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் இடைநிலை ஆசிரியர்​களின் நிரப்​பத் தகுந்த காலிப்​பணி​யிடங்​களை மே 20-க்குள் பள்​ளிக்​கல்வி இயக்​குநர் அலு​வல​கத்​துக்கு அனுப்ப வேண்​டும்.

அவ்​வாறு காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்லாமல் உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது.


அதேபோல், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


மேலும், காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலியிடங்கள் என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் ஐஎப்எச்ஆர்எம்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்

0 Comments:

Post a Comment