தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது.
இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. இதனால், பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவித்தபடி மே 8-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியீடு சற்று தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து, தேர்வுத் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, “பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீடு முடிக்கப்பட்டு, மாணவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment