துறைத் தேர்வு - மே-2026 க்கான அறிவிக்கை வெளியீடு

 


499406

துறைத் தேர்வு - மே-2026 க்கான அறிவிக்கை வெளியீடு!

துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் முன் விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்களை ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் பதிய வேண்டும். விண்ணப்பதாரர்களும் ஆதார் எண்ணை கட்டாயமாக துறைத்தேர்வுக்கான ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவுடன் இணைக்க வேண்டும். பெயர், தலைப்பெழுத்து, தகப்பனாரின் பெயர், பிறந்த தேதி, பணிபுரியும் மாவட்டம் போன்றவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்படின், முதலில் ஒருமுறைப் பதிவு / நிரந்தரப் பதிவில் மாற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் வரை, விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை திருத்த அனுமதிக்கப்படுவர். இந்நிலையில், ஏதேனும் ஒரு அல்லது பல தேர்வு குறியீட்டு எண்ணிற்கு விண்ணப்பதாரர் விண்ணப்ப தொகையை செலுத்தியிருந்தால், அந்த தேர்வு குறியீட்டு எண் அல்லது எண்களை அவர் நீக்கும் பட்சத்தில், அதற்குரிய தேர்வுக்கட்டணம் திருப்பித்தரமாட்டாது. மேலும், விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிப்பது யாதெனில், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இறுதி நாளிற்கு பின்னர் தேர்வுக் குறியீட்டெண்/ தேர்வு மையம்/ பெயர் தந்தை பெயர்/ வயது / பிறந்த தேதியில் திருத்தம் போன்ற கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. எனவே. விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.


துறைத்தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பிற வகைகளில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருந்தாலும் நிராகரிக்கப்படும்.


TNPSC - Department Exam    May 2026 - Notification - Download here



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment