மத்திய அரசு அறிக்கையின்படி தமிழகத்தில் 82.5% பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்: நாட்டிலேயே முதலிடம் என தமிழக அரசு பெருமிதம்

 


 

hindutamil-prod%2F2026-03-26%2Fianawwsg%2F8

தமிழகத்​தில் 82.5 சதவீத பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறைகள் அமைக்​கப்​பட்​டு, நாட்​டிலேயே தமிழகம் முதலிடத்​தில் உள்​ள​தாக மத்​திய அரசின் அறிக்​கையை சுட்​டிக்​காட்டி தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த 2024-25-ம் ஆண்​டுக்​கான மத்​திய அரசின் ஒருங்​கிணைந்த மாவட்​டக் கல்வி ஆய்வு அறிக்கை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, தமிழகத்​தில் 82.5 சதவீத அரசுப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்பறைகள் அமைந்​துள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறை​களை கொண்​டுள்​ள​தில் தமிழகம் இந்​தி​யா​வில் முதலிடம் பிடித்து சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பாஜக ஆட்சி செய்​யும் மாநிலங்​களில் உள்ள பள்​ளி​களில், திறன்​மிகு வகுப்​பறை​கள் எண்​ணிக்கை மிக மிகக் குறை​வாகவே இருப்​பதை இந்த அறிக்கை வெளிப்​படுத்​தி​யுள்​ளது.

அதாவது, குஜ​ராத்​தில் 57.1 சதவீதம், மத்​தி​யப் பிரதேசத்​தில் 7.6 சதவீதம், மகா​ராஷ்டி​ரா​வில் 4.6 சதவீதம், உத்​தரப் பிரதேசத்​தில் 3.6 சதவீதம் பள்​ளி​களில் மட்​டுமே திறன்​மிகு வகுப்​பறை​கள் உள்​ளன.

திமுக ஆட்சி 2021-ல் பொறுப்​பேற்ற நிலை​யில், தமிழகத்​தில் 43.5 சதவீத பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் இருந்​தன. தற்​போது 99 சதவீத பள்​ளி​களில் இணை​யதள வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

2024-25-ல் 82.5 சதவீத பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் அமைந்​துள்​ளன. மத்​திய அரசு வெளி​யிட்டு வரும் ஆய்​வறிக்​கைகள் தமிழகம் முதலிடத்தில் இருப்பதை தொடர்ந்து வெளிப்​படுத்தி வரு​கின்​றன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment