6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வு: இன்று தொடங்கி ஏப்.16-ம் தேதி வரை நடைபெறுகிறது

 

தமிழகத்​தில் 6 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான முழு ஆண்​டுத் தேர்​வு​கள் இன்று தொடங்கி வரும் 16-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

தமிழக பள்​ளிக் கல்வி பாடத் திட்​டத்​தில் 11, 12-ம் வகுப்பு தேர்​வு​கள் நிறைவு பெற்​று​விட்​டன. தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி முதல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இத்​தேர்வு வரும் 6-ம் தேதி​யுடன் முடிவடைகிறது.

அதே​போல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்​களுக்​கான முழு ஆண்டு தேர்​வு​கள் வரும் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்​தப்​படும் என பள்​ளிக் கல்​வித் துறை வெளி​யிட்ட வரு​டாந்​திர நாட்​காட்​டி​யில் முன்​னர் தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.


வாக்குச்சாவடி மையங்கள்: இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதன் வாக்குச்சாவடி மையங்களாக பள்ளிகள் செயல்பட இருக்கின்றன. இதையடுத்து, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் முன்கூட்டியே ஏப்ரல் 1 முதல் 16-ம் தேதி வரை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் இன்று (1-ம் தேதி) முதல் தொடங்குகின்றன.

இதைத் தொடர்ந்து, 4, 5-ம் வகுப்புகளுக்கு வரும் 6-ம் தேதியும், 1, 2, 3-ம் வகுப்புகளுக்கு வரும் 8-ம் தேதியும் இறுதி பருவத் தேர்வுகள் தொடங்கி நடைபெறவுள்ளன. காலை, மதியம் என இருவேளைகளாக நடத்தப்படும் இத்தேர்வுகள் ஒட்டுமொத்தமாக, வரும் 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகின்றன.

அதன் பின்​னர், 1 முதல் 9-ம் வகுப்​பு​களுக்​கான கோடை விடு​முறை வரும் 17-ம் தேதி முதல் தொடங்​கும். எனினும், ஆசிரியர்​கள் பள்ளி இறுதி வேலை​நாள் வரை பணிக்கு வரவேண்​டும். விடு​முறை முடிந்து மீண்​டும் பள்​ளி​களை ஜூன் 4-ம் தேதி திறப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு வரு​வ​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர்​.




இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment