சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும். இதுவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும் என்பதால் சர்க்கரை ஆற்றலாகும் சூழல் குறைந்து, சர்க்கரை அளவு ரத்தத்தில் உயர்கிறது.
நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கையும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க மிக எளிமையான ஒரு உடற்பயிற்சி உள்ளது. அதை அன்றாடம் செய்து வந்தால் நீரிழிவு நோயாளிகளுக்கும், நீரிழிவுக்கு முந்தைய நிலையிலுள்ளவர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவு சீராக நிர்ணயிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள். அது என்ன பயிற்சி தெரியுமா? நடைப்பயிற்சிதான் அது. நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைப்பதற்கும், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் நடைப்பயிற்சி சிறப்பாக உதவுவதாக சொல்கின்றனர் நிபுணர்கள். அது எப்படி, ஏன் என்பது பற்றிதான் இங்கே பார்க்கப்போகிறோம்.
நமது உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருவது நாம் உண்ணும் உணவிலுள்ள சர்க்கரை (எ) குளுக்கோஸ்தான். இந்தச் சர்க்கரையை ரத்தத்திலிருந்து பிரித்து, உடலின் செல்களுக்குள் கொண்டு செல்லும் ஒரு 'சாவி' போல இன்சுலின் செயல்படும். அங்கிருந்து சர்க்கரை ஆற்றலாக மாறும்.
இன்னொருபுறம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்கும். இது இன்சுலின் உணர்திறன் குறைபாடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் செல்கள் இன்சுலினுக்கு எதிர்ப்பாகி விடுவதால், சர்க்கரையானது ஆற்றலாக மாறாமல் அப்படியே சேர்ந்துவிடும். இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் உயரத் தொடங்குகின்றன. இதுவே அன்றாடம் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு அவர்களின் தசைகள் ரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை எரிபொருளாக எடுத்துக் கொள்ளும். இதனால் உடனடியாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது தடுக்கப்படும். இதனால்தான் நடைப்பயிற்சி மேற்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயிற்சியாக பார்க்கப்படுகிறது.
எப்போது நடப்பது சிறந்தது? சாப்பாட்டுக்குப் பிறகு சுமார் 15-30 நிமிடங்கள் நடப்பது, குளுக்கோஸ் அதிகரிப்பைக் குறைக்கிறது. 10 நிமிடங்கள் நடந்தால்கூட இது நடக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு உணவுக்குப் பின் உயர்வது தடுக்கப்படுகிறது.
இதேபோல நடைப்பயிற்சியின்போது உடல் தனது ஆற்றல் திறனை அதிகம் பயன்படுத்துவதால், நாள்படும்போது எடைக்குறைப்பு நிகழும். எடை அதிகம் இருப்பது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம். ஆனால் நடைப்பயிற்சியானது எடை குறைப்பை சாத்தியப்படுத்தி, நீரிழிவுக்கான வாய்ப்பைத் தடுக்கும்.
நடக்க வேண்டும் என்பதற்காக எடுத்தவுடன் 40 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடக்க வேண்டாம். 10 நிமிடங்கள் என தொடங்கி பின் அதை நீட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் அளவுக்கு அதிகமாக நடக்கிறீர்கள் என்பதை உணர்த்த சில அறிகுறிகளும் உள்ளன. அதில் குறிப்பாக தொடர்ச்சியாக சோர்வு அல்லது கால்களில் கனமான உணர்வு, வலி போன்றவை ஏற்படும். இப்படி அதிகம் நடைப்பயிற்சி மேற்கொண்டால், தசைகளுக்கு போதுமான அளவு ஓய்வு கிடைக்காமல் அவை எளிதாக காயமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நேரத்திற்கு சமமற்ற மேற்பரப்புகளில் நடக்கும் பொழுது இடுப்பு குறிப்பாக முட்டி மற்றும் கால்கள் அதிகமாக வலிக்கும். எனவே உங்களால் முடிந்த அளவிற்கு மட்டும் நடங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தையும் நேரத்தையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.
Click here for more Health Tip
Home »
Health Tip
» நீரிழிவு நோயாளிகளே.. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, தினமும் இந்தவொரு உடற்பயிற்சியை செய்ங்க!
0 Comments:
Post a Comment