Guest Lecturer Jobs: ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை!! முதுகலை பட்டதாரிகளே - வாய்ப்பை தவற விடாதீர்கள்...

 தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில், விரைவில் கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் வாய்ப்பு பெறவுள்ளனர்.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Ph.D, அல்லது UGC NET / SLET / SET ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பொதுப் பிரிவினருக்கு 55% மதிப்பெண்கள், மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50% மதிப்பெண்கள் பெற்றிருப்பது போதுமானது.


வயது வரம்பு 01.07.2025 தேதியின்படி அதிகபட்சம் 57 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுகள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், மற்றும் கல்வித் தகுதிகளை கருத்தில் கொண்டு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, அதற்கேற்ப https://tngasa.org/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் ரூ.200 ஆகும். SC/ST பிரிவினருக்கு ரூ.100 மட்டுமே கட்டணமாகவே செலுத்த வேண்டும். கட்டணம் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க துவங்கிய தேதி 21.07.2025 ஆகும். கடைசி தேதி 04.08.2025 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் பொழுது, விண்ணப்பதாரர்கள் தங்களுக்குப் அருகாமை மண்டலங்களையும், அதற்குள் அதிகபட்சமாக 3 மாவட்டங்களையும் தேர்வு செய்யலாம். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்ஆகிய மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களை ‘Vacancy Positions’ பகுதியில் சென்று சரிபார்க்கலாம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter

0 Comments:

Post a Comment