தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர்.
தற்போது TNUSRB SI தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் SSC CGL,SSC CHSL, SSC MTS, RRB NTPC, RRB TECHNICIAN பணிக்காலியிட அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான ஒன்றிய அரசுப் போட்டித் தேர்வு முகமைகளால் அதிக அளவிலான தேர்வு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
அதிக அளவிலான தமிழக மாணவர்கள் பயனடையும் வகையில் மத்திய மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பு போட்டித் தேர்வு முகமைகளால் வெளியிடப்படும் அனைத்து போட்டித் தேர்விற்கும் பொதுவாக உள்ள பாடங்களான பொது அறிவு (வரலாறு, புவியியல், பொருளாதா ரம், அறிவியல், அரசியல் அறிவியல்.) நுண்ணறிவு, திறனறிவு. காரணவியல், மொழி அறிவு (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தொடர்ச்சியாக தினமும் பயிற்சி வகுப்புகளை நடத் தினமும் திட திட்டமிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 30.07.2025 (புதன்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை ஆகிய வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடைபெறவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத் தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-வழிகாட் 237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) ) பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!New Remuneration to the BLOs and BLO Supervisors - Election Commission Letter
0 Comments:
Post a Comment