தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வுக்கான (Group 2 & 2A) அறிவிப்பு கடந்த ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான இந்தத் தேர்வுக்கு, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இத்தேர்வுக்கான தயாரிப்பை இலவசமாக மேற்கொள்ள, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆகஸ்ட் 1 முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. இது, அரசு வேலைக்கான தேடல்களில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு மிக முக்கியமான வாய்ப்பாகும்.
பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.பயிற்சி வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் சேர விரும்புவோர், தாங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த application form copy, ஆதார் அட்டை நகல், மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் கொண்டு நேரிலேயே சென்னை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும்.
இந்த இலவசப் பயிற்சி திட்டம் மூலம், தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், பேச்சுத்திறன் மேம்பாடு, நேர்காணல் பயிற்சி உள்ளிட்ட முழுமையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். பயிற்சியாளர்கள் தேர்வை வெற்றிகரமாக முடிக்க தேவையான ஆயத்தங்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.
Home »
TNPSC GROUP 2
» TNPSC தேர்வாளர்களே நோட் பண்ணிகோங்க!! சென்னையில் இலவச பயிற்சி தொடக்கம்...
0 Comments:
Post a Comment