Agneepath recruitment 2025 : ராணுவத்தில் பணியாற்ற விருப்பமா ? உடனடியா அப்ளை பண்ணுங்க..!

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் இத்திட்டத்திற்கான விண்ணப்ப தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்தது இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய ராணுவத்தில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாகவும் அக்னிவீர் என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ராணுவ அதிகாரிகள் அல்லாத படைவீரர்களை ஆயுதப்படையில் சேர்த்துக் கொள்வதற்காக இந்தியப் பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்திய திட்டமே அக்னிவீர் திட்டமாகும்

இந்த அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் ஆண்டுக்கு 2 முறை நடைபெறும். இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் ராணவ வீரர்கள் 4 ஆண்டுகள் பணியாற்றுவார்கள். அதற்காக இவர்களுக்கு 6 மாத பயிற்சி வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் ஆட் சேர்க்கை முகம் நடைபெற உள்ளது. எனவே, விருப்பம் உள்ள ஆண்கள் பெண்கள் என இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் பதிவு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு கட்டணம் ரூ.250 ஆகும். தகுதியுள்ள ஆண்கள், பெண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆட்சேர்ப்பு ஆன்லைன் மூலம் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வு (சி.இ.இ.) உடல் தகுதி மற்றும் மருத்துவத் தேர்வுகள் அடிப்படையில் நடைபெறும். விண்ணப்பிப்பதற்கு முன், www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவான தகுதி மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை படித்துப்பார்த்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment