எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு 3-வது முறையாக நீட்டிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)

    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

1373026

தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https://tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத்​துறை இணை​யதளத்​தில் கடந்த ஜூலை 30-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்​கியது.


கடந்த 4-ம் தேதி வரை இணை​யதளத்​தில் பதிவு செய்து கல்​லூரி​களை தேர்வு செய்ய அவகாசம் வழங்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அது கடந்த 6-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டது. இதனை தொடர்ந்து கடந்த 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது 16-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்​கப்​பட்​டுள்​ளது.


நெல்லை மாணவருக்கு... இதற்கிடையே, அகில இந்திய முதல் சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்றவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. நீட் தேர்வில் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று தமிழக தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த திருநெல்வேலி மாணவர் எஸ்.சூர்ய நாராயணன், அகில இந்திய அளவில் 27-வது இடம் பெற்றிருந்தார். அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்ற அவருக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.




Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment