போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகள், கல்வி உதவித்தொகை பெற, டிச.,31க்குள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும் என, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுகளில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழிற்படிப்பு, தொழிற் மேற்படிப்பு மற்றும் இதர படிப்புகள் படிப்போர், நடப்பாண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப, டிச.,31 கடைசி நாள். விண்ணப்பத்துடன், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள், பே சிலிப் மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இணைத்து அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news
No comments:
Post a Comment