குரூப் 4 தேர்வர்களுக்கு TNPSC இன்று ( 7.11.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு. - Agri Info

Adding Green to your Life

November 7, 2024

குரூப் 4 தேர்வர்களுக்கு TNPSC இன்று ( 7.11.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.

 IMG_20241107_201032_wm

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- IV ( தொகுதி- IV பணிகள் ) ன் தேர்வு முடிவுகள் , தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 28.10.2024 அன்று தேர்வாணைய வெளியிடப்பட்டன.

 கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ( Onscreen Certificate Verification ) மதிப்பெண்கள் , ஒட்டுமொத்த தரவரிசை எண் , இட ஒதுக்கீட்டு விதி , காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் 07.11.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ( 6 ) ஆறு வேலை நாட்களில் இப்பட்டியல் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 09.11.2024 முதல் 21.11.2024 வரை தேர்வாணைய இணைய தளத்தின் ஒரு முறைப் பதிவு பிரிவின் ( One Time Registration Platform ) மூலம் பதிவேற்றம் செய்யலாம் .

BAN077722

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

No comments:

Post a Comment