Search

சென்னையில் அரசு வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம் ரூ.42,000/-

 ICAR – Central Institute of Brackishwater Aquaculture ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional-II பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR-CIBA காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional – II பணிக்கென ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ICAR-CIBA கல்வி தகுதி:

Biotechnology / life sciences, M.Sc visual communication பாடங்களில் M.Sc / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி சார்ந்த செயல்பாடுகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Young Professional வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு அதிகமாட்சமாக ரூ.42,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR-CIBA தேர்வு செய்யப்படும் முறை:

1. Short Listing
2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து p.mahalakshmi@icar.gov.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 10.06.2024 அன்றுக்குள் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIBA Chennai Notification PDF


🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news 

0 Comments:

Post a Comment