சென்னையில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இர்கான் (IRCON) நிறுவனத்தில் சிவில் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2024Works Engineer/Civil
காலியிடங்களின் எண்ணிக்கை : 4
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree
in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 36,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 07.05.2024
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Ircon International Limited 2 nd Floor, Plot No 7(Adjacent to
Qmax Systems), Rukmini Nagar, 4th Street, Poonamallie, Chennai - 600056
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.ircon.org/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment