9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TRUST தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

1271394

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991.1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2026.2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 2111.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டிற்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2026-2027 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள (சென்னை தவிர்த்து) ஊரக பகுதியில் கிராம பஞ்சாயத்து மற்றும் TOWNSHIP பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் தேர்வுக் கட்டணத் தொகை 1.10/ செலுத்தி 07.10.2026(பிற்பகல்) முதல் 13.10.2026 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனையை ஊக்​கு​விக்கும் திட்​டத்தை மத்திய நிதித் துறை உரு​வாக்​கி​யுள்​ளது. எனவே, பள்​ளி​களின் பல்​வேறு நிதி நடவடிக்​கை​களில் டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறையை ஊக்​குவிக்க வேண்​டும்.

அதன்​படி, பள்​ளிக் கட்​ட​ணம், உணவகம், நூல​கம் உள்​ளிட்ட சேவை​களுக்​கான கட்​ட​ணங்​களைச் செலுத்த யுபிஐ போன்ற டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறை​களைச் செயல்​படுத்​தலாம். இணை​யதள இணைப்பு குறை​வாக உள்ள பகு​தி​களில் செயல்​படும் பள்​ளி​கள், யுபிஐ லைட் போன்ற முறை​களைப் பயன்​படுத்​தலாம். மேலும், பாது​காப்​பான மற்​றும் எளிமை​யான முறை​யில் கட்​ட​ணம் வசூலிக்க, பாரத் பில் பேமென்ட் சிஸ்​டம் தளத்​தில் பள்​ளி​கள் இணை​ய​லாம்.
பாது​காப்​பாக டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறை​களைப் பயன்​படுத்​து​வது குறித்து பெற்​றோருக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். பள்ளி நிகழ்ச்​சிகள் மற்​றும் பெற்​றோர் - ஆசிரியர் சந்​திப்​பு​களின்​போது இதுதொடர்​பான விழிப்​புணர்வு இயக்​கங்​களை நடத்​தலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி

1271388

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். 

அவரது அறிக்கை: பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2026-27-ம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கொண்ட கல்வி நிறுவனங்களில் (100 சதவீத தேர்ச்சி) 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.inமூலம் சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் மாணவியருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விவரங்களை உறுதி செய்து புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பத்தை இம்மாதம் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கடைசி தேதி தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அறிவிக்கப்படும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை அரியர்ஸ் கிடைக்குமா?

Untitled-196

8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தைப் பொறுத்து சில ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் நிலுவைத் தொகை கிடைக்கலாம் என்ற கணக்கீடுகள் வெளியாகியுள்ளன. 

ரூ.18 லட்சம் எப்படி கிடைக்கும்?

லெவல்-8 ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.47,600. 8-வது ஊதியக்குழுவில் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டால், இது ரூ.1,22,332 ஆக உயரலாம். இதன்படி மாத அடிப்படை ஊதியத்தில் ரூ.74,732 வித்தியாசம் ஏற்படும்.

இந்த மாற்றம் 24 மாதங்கள் தாமதமாக அமல்படுத்தப்பட்டதாகக் கருதி கணக்கிட்டால், ரூ.74,732 × 24 என்ற அடிப்படையில் ரூ.17,93,568 வரை அரியர்ஸ் வரலாம். 

எல்லோருக்கும் ஒரே தொகை கிடையாது

இது அரசு அறிவித்துள்ள உறுதியான தொகை அல்ல. 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர், 24 மாத தாமதம் போன்ற அனுமானங்களை வைத்து செய்யப்பட்ட கணக்கீடு மட்டுமே.

மேலும், உண்மையான அரியர்ஸ் தொகை ஊழியரின் பே லெவல், இறுதியாக நிர்ணயிக்கப்படும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் அமலாக்க காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 

8-வது ஊதியக்குழுவின் நிலை என்ன?

8-வது ஊதியக்குழு தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகளுடன் பல்வேறு நகரங்களில் ஆலோசனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் அக்டோபர் 7, 8 தேதிகளில் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஊதியக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறையின்படி, அறிக்கையை மே 2027-க்குள் சமர்ப்பிக்க முடியும். அதன் பிறகு மத்திய அரசு பரிசீலித்து, இறுதி முடிவை அறிவிக்கும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-யில் இருந்து விலக்கு: ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்

 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் இலையுதிர் கால கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு கோரும் முக்கிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திருமதி. சகீனா இட்டூ இந்த தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"01.01.2019-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்த அவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."

பின்னணி:

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்ச்சி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை நிலவி வருகிறது.

தமிழ்நாடு அரசும் கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விவாதத்தில், இது முக்கியமான விஷயம் என்பதால் விரிவாக விவாதிக்க வேண்டும் என அமைச்சர் கோரியதை அடுத்து, சபாநாயகர் வியாழக்கிழமை வரை சபையை ஒத்திவைத்தார்.

இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ஜம்மு காஷ்மீரில் 2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பி.லிட் மற்றும் பி.எட்உயர்கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்ய due notice அனுப்பாமல் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - DEE Proceedings

1209677

பி.லிட் மற்றும் பி.எட்உயர்கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்ய due notice அனுப்பாமல் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் பிரிவு  17 (அ) விளக்கம் அளிக்க உத்தரவு.

* தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவுக்கு எதிராக விளக்கம் கேட்கப்படாமல் தற்போதும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆணை வழங்குவது BEO க்கு தான் பாதிப்பை தரக்கூடும் .

* தர ஊதியம் 5400 மற்றும் இதர பாடங்கள் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையில் சில மாவட்டங்களில் ஊதிய மறுநிர்ணய ஆணை வழங்க  தற்போது வழங்கப்பட்டு வருகின்றது

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறையை பார்வை உதவிய திரு சண்முகம் பட்டதாரிஆசிரியர் குண்டடம் நன்றி

Google drive மூலம்  open செய்து படிக்கலாம்

https://drive.google.com/file/d/1jYR8z4HEBMgF1w0Ak_TuGUF5lQG5j5NC/view?usp=drivesdk

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

Dengue Fever Instuctions - DSE Instructions

1211351

 பள்ளிக் கல்வி பொது சுகாதாரம் டெங்கு காய்ச்சல் பரவுதல் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டக் கல்வி அலுவலக வளாகம், வட்டாரக் கல்வி அலுவலக வளாகம் மற்றும் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணிகள் மற்றும் கொசு உற்பத்தித் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - புதன்கிழமை தோறும் சிறப்பு தூய்மைப் பணி (Mission Mode Mass Clean-up) அரசு அலுவலக வளாகங்களில் மேற்கொள்ளுதல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

DSE - Dengue Fever Instuctions - Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வகுப்பு 1&2 க்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை

மதிப்பெண்கள் கணக்கிடும் முறை

வகுப்பு 1&2

 மதிப்பெண்கள்=

நானே செய்வேன்-1 +

நானே செய்வேன் 2 +திறனறி மதிப்பீடு(50)

திறனறி மதிப்பீடு CBA (50)=

வாய்மொழி(10)+எழுத்துவழி(40)

நானே செய்வேன் 1(25)

வாய்மொழி மதிப்பீடு (10)+

செயல்திட்டம்(10)+

எழுத்துவழி(5)

நானே செய்வேன் 2 (25)

வாய்மொழி மதிப்பீடு (10)+

செயல்திட்டம்(10)+

எழுத்துவழி(5)

வகுப்பு 3

நானே செய்வேன்1(20)

வாய்மொழி5+செயல்திட்டம்(10)+ எழுத்துவழி (5)

நானே செய்வேன் 2 (20)

வாய்மொழி (5)+செயல்திட்டம்(10)+

எழுத்துவழி(5)

 மதிப்பெண்கள்=

நானே செய்வேன்1(20)+நானே செய்வேன்2(20)+திறனறி மதிப்பீடு(60)

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

வங்கிகளின் விடுமுறை மற்றும் Strike ஒட்டி *மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் தாரர்களுக்கும் இந்த* மாத சம்பளத்தை 25ஆம் தேதி வரவு வைக்க உத்தரவு...

வங்கிகளின் விடுமுறை மற்றும்  Strike ஒட்டி  *மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் தாரர்களுக்கும் இந்த* மாத சம்பளத்தை 25ஆம் தேதி வரவு வைக்க உத்தரவு...

1212401

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செய்தி

காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி இல்லை - பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சல் வழிச் செய்தியை மேற்கோள் காட்டி பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!
1212455

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2027 - மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

1204561

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் - 2027 - மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - SSLC NR Preparation - Proceedings

👇👇👇👇

Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசுப்பள்ளி ஊழியர்களுக்கு EMIS முலம் பணியிட மாற்றம்-பள்ளிக்கல்வித்துறை.

.com/

அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-இல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை ஆணை.

அரசுப் பள்ளிகளின் அலுவலக பணியாளர்களின் விவரங்களை EMIS-ல் பதிவு செய்ய வேண்டும்; இனிமேல் பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்தும் EMIS மூலமாகவே மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே EMIS-ல் பதிவு செய்தவர்களின் விவரங்களில் மாற்றம், திருத்தம் இருந்தால் புதுப்பிக்க உத்தரவு.

பதவி உயர்வு, பணியிட மாற்றம் உள்ளிட்ட மாற்றங்கள் இருந்தாலும் EMIS-ல் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.