இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant வேலை! Any Degree போதும் - 250 காலியிடங்கள்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் Junior Court Assistant பணிக்கு 250 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Any Degree படித்தவர்கள், கணினியில் குறைந்தபட்சம் 35 w.p.m. ஆங்கில தட்டச்சு வேகம் கொண்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹35,400 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 07.10.2026 முதல் 28.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்

நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம்
வகை மத்திய அரசு வேலை
அறிவிப்பு எண் F.6/2026-SC (RC)
பதவி Junior Court Assistant
காலியிடங்கள் 250
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 07.10.2026
கடைசி நாள் 28.10.2026
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பதவி: Junior Court Assistant

சம்பளம்: மாதம் Rs.35,400/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 250

கல்வி தகுதி:Bachelor’s degree of a recognized University
Minimum speed of 35 w.p.m. in English Typing on Computer
Knowledge of Computer operation

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: SC / ST – 5 ஆண்டுகள்
OBC – 3 ஆண்டுகள்
PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்: 

ST/ SC/ Ex-s/ PWD – Rs.750/-

General/ OBC – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:Written Exam (Objective Type Test)
Typing Speed Test on Computer
Written Test (Descriptive)
Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2026

விண்ணப்பிக்கும் முறை:முதலில் Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.

Recruitment பகுதியைத் தேர்வு செய்யவும்.
Junior Court Assistant Recruitment 2026 என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், Email ID உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து Registration செய்யவும்.
கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரியாக உள்ளிடவும்.
Photo, Signature மற்றும் தேவையான Certificates-ஐ அறிவுறுத்தப்பட்ட அளவு/வடிவத்தில் Upload செய்யவும்.
தேர்வு மையங்களை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தவும்.
அனைத்து விவரங்களையும் ஒருமுறை சரிபார்த்து Submit செய்யவும்.
இறுதியாக Application Form / Registration Number-ஐ Save அல்லது Print செய்து வைத்துக்கொள்ளவும். விண்ணப்பத்தின் Printout-ஐ Supreme Court-க்கு அனுப்ப வேண்டியதில்லை.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.10.2026 
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மாணவர் பஸ் பாஸ் விவரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும்: தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

hindutamil-prod%2F2026-10-03%2Fvrayjkyr%2F1542122

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணஅட்டை வழங்கும் வகையில் எமிஸ் தளத்தில் உரிய விவரங்களை அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்ற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான முன்னேற் பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.‘எமிஸ்’ தளம் இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘‘பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கு ஏதுவாக இதுவரை பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் சுயவிவரம், புகைப்படம் மற்றும் புதியதாக சேர்க்கை பெற்ற மாணவர்கள் பேருந்து பயண அட்டை பெற விருப்பம், விருப்பமின்மை விவரங்களை எமிஸ் தளத்தில் அக்.15-க்குள் பதிவேற்றம் செய்ய அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்’’என்று அதில் கூறப் பட்டுள்ளது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

அரசு பள்ளிக்கு ரூ.4 கோடி நிதி - முன்னாள் மாணவர் வாஞ்சிநாதனுக்கு மக்கள் பாராட்டு

  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே, தான் படித்த அரசுப் பள்ளிக்கு ரூ.4 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை முன்னாள் மாணவர் செய்து தந்துள்ளார்.

ஒரத்தநாடு அருகேயுள்ள ஆம்பலாப்பட்டு இலுப்பை தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் வாஞ்சிநாதன் (42). இவர், தான் படித்த இலுப்பைதோப்பு அரசு மேல்நிலைப் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.4 கோடி நிதி வழங்கியுள்ளார்.

அந்த நிதியில் முதற்கட்டமாக ரூ.65 லட்சத்தில் மேற்கூரையுடன் கூடிய கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது. எஞ்சிய நிதியில் வகுப்பறைகள், ஸ்மார்ட் கிளாஸுக்கு தேவையான சாதனங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வாஞ்சிநாதனை அக்கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற அப்பள்ளி ஆசிரியர் ராமலிங்கம் கூறியது: பள்ளியில் தற்போது 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் முன்னாள் மாணவர்கள் ஏராளமான உதவிகளைச் செய்துள்ளனர்.

பள்ளிக்கு மாணவர் களை அழைத்து வர வாகன வசதி, கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறை கட்ட நிலம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், வாஞ்சிநாதன் தான் படித்த பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மேம்படுத்தும் நோக்கில் ரூ.4 கோடி வழங்கியுள்ளார். முதற்கட்டமாக கலையரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

அதைத்தொடர்ந்து, கிராமப்புற மாண வர்களின் வசதிக்காக பேருந்து வாங்கவும், 4 அறைகள் கொண்ட கூடுதல் வகுப்பறை கள் கட்டவும், அனைத்து வகுப்புகளுக்கும் ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தவும் திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலரும், பள்ளிக்கு உதவி செய்துள்ளனர். பள்ளி வளர்ச்சி அடைந்து, மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

களஞ்சியம் App-ல் சொத்து விபரங்கள் சார்ந்து பதிவேற்ற வேண்டிய விபரங்கள்:

  களஞ்சியம் App-ல் சொத்து விபரங்கள் சார்ந்து பதிவேற்ற வேண்டிய விபரங்கள்:

 அட்டவணை – I

அரசுப் பணியாளரிடம் உள்ள சொத்துகள், கடன்கள் மற்றும் பிற பொறுப்புகளின் ஆண்டு அறிக்கை

31 டிசம்பர் 2025 அன்று உள்ள நிலவரப்படி

I. அசையா சொத்துகள் (IMMOVABLE PROPERTIES)

இந்தப் பகுதியில் கீழ்க்கண்ட விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன:

வரிசை எண்

அசையா சொத்தின் விவரம்

சொத்து அமைந்துள்ள துல்லியமான இடம்

மாவட்டம், கோட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண்

நிலத்தின் பரப்பளவு

நிலத்தின் தன்மை

சொத்தில் உள்ள உரிமைப் பங்கு

வேறு நபரின் பெயரில் வாங்கப்பட்டிருந்தால், அந்த நபரின் பெயர் மற்றும் அரசு ஊழியருடனான உறவு

வாங்கிய தேதி

சொத்து எவ்வாறு பெறப்பட்டது – வாங்குதல் / அடமானம் / குத்தகை / பரம்பரை / பரிசு போன்றவை

சொத்தின் மதிப்பு

வருமானத்தின் மூலம்

உரிய அதிகாரியின் அனுமதி விவரம்

அசையா சொத்திலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம்

II. அசையும் சொத்துகள் (MOVABLE PROPERTIES)

இதில்:

வரிசை எண்

அசையும் சொத்தின் விவரம்

சொத்து பெறப்பட்ட நபர் / நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி

சொத்தின் மதிப்பு

வேறு நபரின் பெயரில் வாங்கப்பட்டிருந்தால் அந்த நபரின் பெயர் மற்றும் அரசு ஊழியருடனான உறவு

சொத்து வாங்கியதற்கான வருவாய் மூலம்

அதிலிருந்து கிடைக்கும் ஆண்டு வருமானம்

III. கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள்

இதில்:

கடன் / பொறுப்பு ஏற்பட்ட தேதி

கடன் அல்லது பொறுப்பின் மொத்தத் தொகை

கடன் வழங்கியவரின் பெயர் மற்றும் முகவரி

பரிவர்த்தனை விவரம்

ஏற்கனவே செலுத்தி முடிக்கப்பட்ட கடன் தொகை

நடப்பு ஆண்டில் செலுத்திய தொகை

தற்போது நிலுவையில் உள்ள கடன் / பொறுப்புத் தொகை

இறுதியில் உறுதிமொழி (DECLARATION)

“தமிழ்நாடு அரசு பணியாளர்களின் நடத்தை விதிகள், 1973-ன் விதி 7-ன் துணை விதி (3)-ன் கீழ், 31 டிசம்பர் 2025 நிலவரப்படி நான் சமர்ப்பித்துள்ள மேற்கண்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் அனைத்தும், எனது அறிவு மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் முழுமையானவை, உண்மையானவை மற்றும் சரியானவை என இதன் மூலம் உறுதியளிக்கிறேன்.”என்று App- ல் சமர்பிக்க வேண்டும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TRUST தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு!

1271394

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 1991.1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2026.2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 2111.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வில் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு (ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 50 மாணவர்கள் மற்றும் 50 மாணவிகள்) ஆண்டிற்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2026-2027 கல்வியாண்டில் தமிழ்நாட்டிலுள்ள (சென்னை தவிர்த்து) ஊரக பகுதியில் கிராம பஞ்சாயத்து மற்றும் TOWNSHIP பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் தேர்வுக் கட்டணத் தொகை 1.10/ செலுத்தி 07.10.2026(பிற்பகல்) முதல் 13.10.2026 வரை விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

சிபிஎஸ்இ பள்ளிகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை

மத்​திய இடைநிலைக் கல்வி வாரி​யம் (சிபிஎஸ்இ) வெளியிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனையை ஊக்​கு​விக்கும் திட்​டத்தை மத்திய நிதித் துறை உரு​வாக்​கி​யுள்​ளது. எனவே, பள்​ளி​களின் பல்​வேறு நிதி நடவடிக்​கை​களில் டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறையை ஊக்​குவிக்க வேண்​டும்.

அதன்​படி, பள்​ளிக் கட்​ட​ணம், உணவகம், நூல​கம் உள்​ளிட்ட சேவை​களுக்​கான கட்​ட​ணங்​களைச் செலுத்த யுபிஐ போன்ற டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறை​களைச் செயல்​படுத்​தலாம். இணை​யதள இணைப்பு குறை​வாக உள்ள பகு​தி​களில் செயல்​படும் பள்​ளி​கள், யுபிஐ லைட் போன்ற முறை​களைப் பயன்​படுத்​தலாம். மேலும், பாது​காப்​பான மற்​றும் எளிமை​யான முறை​யில் கட்​ட​ணம் வசூலிக்க, பாரத் பில் பேமென்ட் சிஸ்​டம் தளத்​தில் பள்​ளி​கள் இணை​ய​லாம்.
பாது​காப்​பாக டிஜிட்​டல் பணப்​பரிவர்த்​தனை முறை​களைப் பயன்​படுத்​து​வது குறித்து பெற்​றோருக்கு விழிப்​புணர்வு ஏற்​படுத்த வேண்​டும். பள்ளி நிகழ்ச்​சிகள் மற்​றும் பெற்​றோர் - ஆசிரியர் சந்​திப்​பு​களின்​போது இதுதொடர்​பான விழிப்​புணர்வு இயக்​கங்​களை நடத்​தலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி

1271388

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவியர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். 

அவரது அறிக்கை: பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2026-27-ம் கல்வியாண்டில், தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சிறந்த செயல்பாடு கொண்ட கல்வி நிறுவனங்களில் (100 சதவீத தேர்ச்சி) 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் https://scholarships.gov.inமூலம் சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.75 ஆயிரமும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் மாணவியருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மாணவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்கள், தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விவரங்களை உறுதி செய்து புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பத்தை இம்மாதம் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

பள்ளித் தலைமை ஆசிரியர்கள், நவம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சரிபார்க்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கடைசி தேதி தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் அறிவிக்கப்படும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.18 லட்சம் வரை அரியர்ஸ் கிடைக்குமா?

Untitled-196

8-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் எப்போது அமலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மத்திய அரசு ஊழியர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், அமல்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தைப் பொறுத்து சில ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் நிலுவைத் தொகை கிடைக்கலாம் என்ற கணக்கீடுகள் வெளியாகியுள்ளன. 

ரூ.18 லட்சம் எப்படி கிடைக்கும்?

லெவல்-8 ஊழியரின் தற்போதைய அடிப்படை ஊதியம் ரூ.47,600. 8-வது ஊதியக்குழுவில் 2.57 ஃபிட்மென்ட் ஃபேக்டர் பயன்படுத்தப்பட்டால், இது ரூ.1,22,332 ஆக உயரலாம். இதன்படி மாத அடிப்படை ஊதியத்தில் ரூ.74,732 வித்தியாசம் ஏற்படும்.

இந்த மாற்றம் 24 மாதங்கள் தாமதமாக அமல்படுத்தப்பட்டதாகக் கருதி கணக்கிட்டால், ரூ.74,732 × 24 என்ற அடிப்படையில் ரூ.17,93,568 வரை அரியர்ஸ் வரலாம். 

எல்லோருக்கும் ஒரே தொகை கிடையாது

இது அரசு அறிவித்துள்ள உறுதியான தொகை அல்ல. 2.57 என்ற ஃபிட்மென்ட் ஃபேக்டர், 24 மாத தாமதம் போன்ற அனுமானங்களை வைத்து செய்யப்பட்ட கணக்கீடு மட்டுமே.

மேலும், உண்மையான அரியர்ஸ் தொகை ஊழியரின் பே லெவல், இறுதியாக நிர்ணயிக்கப்படும் ஃபிட்மென்ட் ஃபேக்டர் மற்றும் அமலாக்க காலம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். 

8-வது ஊதியக்குழுவின் நிலை என்ன?

8-வது ஊதியக்குழு தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பிரதிநிதிகளுடன் பல்வேறு நகரங்களில் ஆலோசனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் அக்டோபர் 7, 8 தேதிகளில் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.

ஊதியக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறையின்படி, அறிக்கையை மே 2027-க்குள் சமர்ப்பிக்க முடியும். அதன் பிறகு மத்திய அரசு பரிசீலித்து, இறுதி முடிவை அறிவிக்கும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET-யில் இருந்து விலக்கு: ஜம்மு காஷ்மீரில் தீர்மானம்

 ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் இலையுதிர் கால கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு கோரும் முக்கிய தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திருமதி. சகீனா இட்டூ இந்த தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்தார்.

தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

"01.01.2019-க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் தேவையான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என இந்த அவை ஒருமனதாக வலியுறுத்துகிறது."

பின்னணி:

கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், TET தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் 2028 ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்ச்சி பெறாவிட்டால் கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நாடு முழுவதும் ஆசிரியர்கள் மத்தியில் கவலை நிலவி வருகிறது.

தமிழ்நாடு அரசும் கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய விவாதத்தில், இது முக்கியமான விஷயம் என்பதால் விரிவாக விவாதிக்க வேண்டும் என அமைச்சர் கோரியதை அடுத்து, சபாநாயகர் வியாழக்கிழமை வரை சபையை ஒத்திவைத்தார்.

இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், ஜம்மு காஷ்மீரில் 2019-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

பி.லிட் மற்றும் பி.எட்உயர்கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்ய due notice அனுப்பாமல் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - DEE Proceedings

1209677

பி.லிட் மற்றும் பி.எட்உயர்கல்வி ஊக்க ஊதியம் பிடித்தம் செய்ய due notice அனுப்பாமல் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர்கள் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் பிரிவு  17 (அ) விளக்கம் அளிக்க உத்தரவு.

* தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவுக்கு எதிராக விளக்கம் கேட்கப்படாமல் தற்போதும் வட்டார கல்வி அலுவலர்கள் ஆணை வழங்குவது BEO க்கு தான் பாதிப்பை தரக்கூடும் .

* தர ஊதியம் 5400 மற்றும் இதர பாடங்கள் உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ள நிலையில் சில மாவட்டங்களில் ஊதிய மறுநிர்ணய ஆணை வழங்க  தற்போது வழங்கப்பட்டு வருகின்றது

தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறையை பார்வை உதவிய திரு சண்முகம் பட்டதாரிஆசிரியர் குண்டடம் நன்றி

Google drive மூலம்  open செய்து படிக்கலாம்

https://drive.google.com/file/d/1jYR8z4HEBMgF1w0Ak_TuGUF5lQG5j5NC/view?usp=drivesdk