தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் : புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்பு

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் : புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்பு. Tamil Nadu Pension Scheme: Possibility of pension being announced under a new name.

தமிழ் நாடு ஓய்வூதியத் திட்டம் (TN PENSION SCHEME):

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கும் வகையில், 'தமிழக ஓய்வூதியத் திட்டம் (TN PENSION SCHEME)' என்ற புதிய பெயரில் ஓய்வூதியம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் சலுகைகள் பின்வருமாறு:

முக்கிய அம்சங்கள் (எதிர்பார்க்கப்படுபவை):

அதிகபட்ச ஓய்வூதியம்: ஓய்வுபெறும் ஊழியர்/ஆசிரியர் தனது கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 40% வரை ஓய்வூதியமாகப் பெற வாய்ப்புள்ளது.

இது, ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பின்னரும் நிலையான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும்.

பணிக்கொடை (Gratuity) சலுகைகள்:

20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோர்க்கு: இவர்களுக்கு ரூபாய் 15 இலட்சம் வரை பணிக்கொடையாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.

10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தோர்க்கு: இவர்கள் கடைசி ஊதியத்தில் 35% ஓய்வூதியமாகவும், ரூபாய் 10 இலட்சம் பணிக்கொடையாகவும் பெறலாம்.

10 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணிபுரிந்தோர்க்கு: இவர்கள் கடைசி ஊதியத்தில் 20% ஓய்வூதியமாகவும், ரூபாய் 5 இலட்சம் பணிக்கொடையாகவும் பெற வாய்ப்புள்ளது.

CPS (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) தொகை:

இதுவரை CPS திட்டத்தில் ஊழியர்களால் செலுத்தப்பட்ட சொந்தப் பங்களிப்புத் தொகையானது, அதற்கான வட்டியுடன் சேர்த்து ஓய்வுபெறும் போது முழுமையாகத் திரும்ப வழங்கப்படும்.

குடும்ப ஓய்வூதியம் (Family Pension):

ஊழியரின் மறைவுக்குப் பிறகு, குடும்ப ஓய்வூதியமானது ஊழியர் பெற்ற ஓய்வூதியத்தில் பாதி சதவிகிதமாக (50%) கிடைக்க வாய்ப்புள்ளது. இது குடும்பத்தின் எதிர்காலப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.

பொதுவான மனநிலை:

இந்த அறிவிப்பானது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல வருடங்களாக ஒன்றுபட்டுப் போராடியதன் விளைவாகக் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற நம்பிக்கை பரவி வருகிறது. இந்தச் செய்தியானது தற்போது வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகக் குழுக்களில் தீவிரமாகப் பரவி வருகிறது.

எதிர்பார்ப்பு:

இந்தச் சலுகைகள் மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் பட்சத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறும் என்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நன்மை நடந்தால் அது மிகவும் வரவேற்கத்தக்க ஒரு மாற்றமாக இருக்கும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விவரங்களை TNSED App-ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

டிசம்பர் 10 - சர்வதேச மனித உரிமைகள் தினம் - உறுதிமொழி

IMG_20251210_063908_wm

மனித உரிமைகள் உறுதி மொழி 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் , இந்தியாவில் செயல்படுத்தக்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் , பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன் . எவ்வித வேறுபாடுமின்றி , அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் , மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் , நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன் . என்னுடைய எண்ணம் , சொல் அல்லது செயல் மூலம் , பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் , நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன் . மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு , நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் . 

( அணைவரும் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம் )

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

புதிய பாடப்புத்தகத்திலும் எண்ணும் எழுத்து திட்டம் - ஆசிரியர்களிடம் கருத்துக்கேட்குமா தயாரிப்பு குழு

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

புதிய பாடப்புத்தகத்திலும் எண்ணும் எழுத்து திட்டம் -  ஆசிரியர்களிடம் கருத்துக்கேட்குமா தயாரிப்பு குழு...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Future Ready 1- 5th Std Questions - December 2025 ( TM & E/M )

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

FutureReadyGenericCover

மதிப்பீட்டு புலம் - Future Ready 1- 5 வகுப்பு

💧அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும்  பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்கள் இந்த மாதம் PDF வடிவில்  வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்திட வேண்டும் .

💧 பள்ளியில் உள்ள Smart Board ல் future Ready வினாத்தாளைக் காண்பித்து  மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.

Future Ready Dir Instructions - Download here

Future Ready Questions 

Future Ready 1 Std Questions - December 2025 - TM - Download here

Future Ready 1 Std Questions - December 2025 - EM - Download here

Future Ready 2 Std Questions - December 2025 - TM - Download here

Future Ready 2 Std Questions - December 2025 - EM - Download here

Future Ready 3 Std Questions - December 2025 - TM - Download here

Future Ready 3 Std Questions - December 2025 - EM - Download here

Future Ready 4 Std Questions - December 2025 - TM - Download here

Future Ready 4 Std Questions - December 2025 - EM - Download here

Future Ready 5 Std Questions - December 2025 - TM - Download here

Future Ready 5 Std Questions - December 2025 - EM - Download here

அனைத்து அரசு தொடக்க,நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்  உள்ள 1- 5 வகுப்பு மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்கள்  பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழக அரசுப் பள்ளிகளில் ஐடிஐ மையங்கள் அமைக்க திட்டம்!

     Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழக அரசுப் பள்ளிகளில் தொழில் துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பதற்கு பள்ளிக் கல்வித் துறை தற்போது முடிவு செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநருடன் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பள்ளிகளிடம் இருந்து சில கூடுதல் விவரங்கள் தற்போது தேவைப்படுகின்றன. இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் ஐடிஐ அமைப்பதற்கு குறைந்தபட்ச தேவையாக 0.5 ஏக்கர் (50 சென்ட்) நிலம் இருக்க வேண்டும்.

ஏற்கெனவே உள்ள கட்டிடங்கள் பயன்பாடின்றி அல்லது குறைந்த பயன்பாட்டில் இருந்தால் அத்தகைய பள்ளிகளை தேர்வு செய்யலாம்.

ஐடிஐ இல்லாத பகுதிகளில் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதுதவிர தொழில் மண்டலங்கள், தொழில் துறை பகுதிகளுக்கு அருகிலுள்ள பள்ளிகளுக்கு முன்னுரிமை தரப்படும்.

இதன்மூலம் தொழில் தொடர்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தப்படும். இந்த விதிகளின் கீழ் வரும் அரசுப் பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஜனவரி 25-ல் சிமேட் தேர்வு: என்டிஏ அறிவிப்பு

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நாடு முழு​வதும் உள்ள மத்​திய உயர்​கல்வி நிறு​வனங்​கள் மற்​றும் அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்வி குழு​மத்​தின் (ஏஐசிடிஇ) கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் மேலாண்மை படிப்​பு​களில் சேர, பொது நிர்​வாக நுழைவுத் தேர்​வில் (சிமேட்) கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும்.

ஆண்​டு​தோறும் இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) கணினி வழியில் நடத்​துகிறது. இந்த ஆண்டு சிமேட் தேர்​வுக்​கான அறி​விப்​பாணை கடந்த அக்​டோபரில் வெளி​யானது.

அதை தொடர்ந்​து, இணை​யதள விண்​ணப்ப பதிவு அக்​டோபர் 17 முதல் நவம்​பர் 25-ம் தேதி வரை நடை​பெற்​றது. நாடு முழு​வதும் சுமார் 75 ஆயிரம் பேர் வரை விண்​ணப்​பித்​தனர்.

இந்நிலையில், தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 25-ம் தேதி சிமேட் தேர்வு நடைபெற உள்ளது.

தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட் வெளி​யீடு உள்​ளிட்ட கூடு​தல் விவரங்​களை www.nta.ac.in எனும் இணை​யதளத்​தில் அறியலாம்.

ஏதேனும் சந்​தேகம் இருந்​தால் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்​லது cmat@nta.ac.in மின்​னஞ்​சல் வாயி​லாக தொடர்பு கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ தெரி​வித்​துள்​ளது

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது - உச்சநீதிமன்றம் 

பி.எப் நிதிக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது; ஊழியர் இறந்த நிலையில், நிதியை அவரது மனைவி, பெற்றோருக்கு சமமாக பிரித்து வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலி!!!

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும், 1,289 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இப்பள்ளிகளில், மத்திய அரசுப் பணியில் இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோரின் குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

புதிய பள்ளிகள்

இதனால், கூடுதலாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை திறக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளிகள் திறக்கப்படும் என, மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படாததால், கற்பித்தல் பணிகள் தொய்வடைந்துள்ளன. இதனால், பல்வேறு மாநில கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் சரிந்துள்ளது.

அதாவது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் ஓய்வுபெறுவது, இடமாறுதல்களுக்கு உடன்படாத ஆசிரியர்கள் ராஜினாமா செய்வது, கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெறுவது உள்ளிட்ட காரணங்களால், படிப்படியாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 56,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

ஆனாலும் தற்போது, 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும், 1,500க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத பணியிடங்களும் காலியாக உள்ளன.

அதேநேரம், காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப, ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனாலும், 2 லட்சம் மாணவர்கள் படித்த நிலையில் தற்போது, 1.35 லட்சம் மாணவர்களே படிக்கின்றனர். இதற்கு, ஆசிரியர் பற்றாக்குறையும் ஒரு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

குழப்பங்கள்

இதுகுறித்து, இப்பள்ளி மாணவர்கள் கூறிய தாவது:

கே.வி., பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள், தேர்வு நெருங்கும்போது விடுப்பு எடுக்கின்றனர். அதனால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப் படுகின்றனர்.

இரண்டு ஆசிரியர்களிடம் ஒரே பாடத்தைப் படிக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், இருவருக்கும் இடையில் கற்பித்தலில் வேறுபாடு ஏற்படுகிறது. இதனால், பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால், பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நாமக்கல் ராசிபுரம் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – டிசம்பர் 20! 10,000+ Jobs Waiting

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில்,
ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரியில்
டிசம்பர் 20 (சனிக்கிழமை) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

யார் யார் பங்கேற்கலாம்?

👉 5ஆம் வகுப்பு முதல் Plus Two வரை
👉 பட்டயப்படிப்பு, ITI
👉 UG / PG பட்டதாரிகள்
👉 பொறியியல் பட்டதாரிகள்
👉 தையல் பயிற்சி, நர்சிங் பயிற்சி, மற்ற தொழில்பயிற்சி பெற்றவர்கள்

எந்த தகுதியானாலும் – வேலை தேடும் அனைவரும் பங்கேற்கலாம்!

🏢 இந்த முகாமில் என்னென்ன?

  • 150+ நிறுவனங்கள் நேரடியாக பங்கேற்கின்றன
  • 10,000+ காலிப்பணியிடங்கள்
  • வேலைதேடுபவர்கள், நேரடியாக நிறுவனங்களிடம் நேர்காணல்
  • முற்றிலும் இலவசம் – எந்த கட்டணமும் இல்லை

📌 கண்டிப்பாக எடுத்துவர வேண்டிய ஆவணங்கள்

✔️ சுயவிவரம் (Resume)
✔️ கல்விச்சான்றுகள் நகல்கள்
✔️ Aadhaar கார்டு
✔️ பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

🌐 Online Registration (வேலைநாடுனர்கள் & நிறுவனங்கள் இருவரும் செய்யவேண்டும்)

👉 www.tnprivatejobs.tn.gov.in

📞 நிறுவனங்கள் பங்கேற்பதற்கான முன்பதிவு

  • 04286-222260
  • 63803 69124

முகாம் நடைபெறும் இடம்

ராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை & அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம்

🗓 தேதி: 20.12.2025
⏰ நேரம்: காலை 9 – மதியம் 3

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

TNPSC December-2025 துறைத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG_20251208_220526

TNPSC December-2025 துறைத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு

👇👇👇

https://apply.tnpscexams.in/public/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==

விண்ணப்பித்தோர் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!