School Morning Prayer Activities - 10.06.2024

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10.06.2024


திருக்குறள் 

பால் : பொருட்பால்

அதிகாரம்:கல்வி

கற்க கசடறக் கற்பவை; கற்றபின்

நிற்க அதற்குத் தக.

பொருள்:கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

பழமொழி :

The face is index of the mind

அகத்தின் அழகு முகத்திலே தெரியும்.

இரண்டொழுக்க பண்புகள் :

*புதிய வகுப்பில் புதிய நண்பர்களோடு நன்கு பழகுவேன்.

*கல்வி ஒன்றே என்னை  உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

பொன்மொழி :

உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி. --நெல்சன் மண்டேலா

பொது அறிவு : 

1)தேசிய கீதத்தை எழுதியவர் யார்? 

ரவீந்திரநாத் தாகூர் 

 2) தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை எழுதியவர் யார்?

 மனோன்மணீயம் பெ. சுந்தரனார்

English words & meanings :

 Appease- சமாதானம், 

Conciliate-சமரசம்

வேளாண்மையும் வாழ்வும்: 

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்"

இந்த குறள் உழவின் மேன்மையை நமக்கு உணர்த்துகிறது. தினமும் ஒரு செய்தி நாம் வேளாண்மைக் குறித்து காண்போம்

ஜூன் - 10 இன்று

சுந்தர் பிச்சை அவர்களின் பிறந்தநாள்

சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பிறப்பு: சூன் 10, 1972), இந்திய அமெரிக்க வாழ் கணினி தொழில் நுட்ப மேலாளர் ஆவார். இவர் அல்பபெட் (Alphabet Inc.) மற்றும் அதன் துணை நிறுவனமான கூகுள் முதன்மை செயல் அலுவலர் ஆவார். சுந்தர் பிச்சை 2004 ஆம் ஆண்டு கூகுள்இல் இணைந்தார். இவர் கூகிள் வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில்

முக்கிய பங்கு வகித்தார். தற்போது கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுகிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார்.

நீதிக்கதை

 கண்ணன் மாடி குடியிருப்பில் வசித்து வந்தான். அவன் தங்கியிருக்கும் வீட்டிற்கு மேல் வேறு வீடு இல்லை. ஆதலால் வெப்பம் கீழிறங்கியது. கண்ணனுக்கு அந்த வீட்டில்  மிகவும் வியர்வை அதிகமாக இருந்தது. வேறு வீடு மாறலாம் என்றாலும் எங்கு சென்றாலும் இதே நிலைமைதான். கண்ணனின் பெற்றோர் கிராமத்தில் வசித்து வந்தனர். அவனுக்கு கிராமத்திற்கு சென்று வர வேண்டும் என்று தோன்றியதால் விடுப்பு எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்றான். அப்போது அவன் பெற்றோரிடம் அவன் இருக்கும் வீட்டையும் வெயிலையும் பற்றி எடுத்துச் சொன்னான். கிராமத்தில் அவன் இருக்கும் வீட்டின் பின் புறத்தில் பெரிய தோப்பு இருந்தது. முழுவதும் தென்னை மரம் , பனை மரம் என்று வெயில் இருப்பதே தெரியாது. 

எதனால் இந்த காலத்தில் வெப்பம் இவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று யோசித்தான். பருவம் மாறியுள்ளதையும் சிந்தித்தான். நம் வீட்டில் இருப்பது போல் நகரங்களில் மரங்கள் அதிகமாக கிடையாது. அப்படியே வளர்ந்தாலும் அதை வெட்டி அங்கு ஒரு வீடு கட்டி விற்பனை செய்து விடுகின்றனர். இதனால் பூமியில் வெப்பம் அதிகரித்து பனி மலைகள் உருக ஆரம்பித்து விட்டன. மழை பெய்வதும் குறைந்து விட்டது.

பருவத்தில் பெய்யும் மழையே அமிழ்தமாகும். அந்த காலத்தில் அந்த அமிழ்தத்தை நம் முன்னோர்கள் சுவைத்தனர். நாமும் இனி மரம் வளர்த்து உரிய காலத்தில் மழை பெறுவோம்.புவி வெப்பமாவதைக் குறைப்போம்!!

இன்றைய செய்திகள் - 10.06.2024

* அரசுப் பணிக்கான குரூப் 4 தேர்வு நேற்று (ஜூன் 9) நடைபெற்றது. வினாத்தாளில் தமிழ் பகுதி தவிர்த்து இதர கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

* சைபர் கிரைம் விசாரணையில் கோவை மாநகர காவல் துறையினர் மாநிலத்தில் முதலிடம்.

* தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.

* பிரதமர் மோடி பதவியேற்பு விழா: 7 நாட்டுத் தலைவர்கள் டெல்லி வருகை.

* நார்வே செஸ் தொடர்: பிரக்ஞானந்தாவுக்கு 3-வது இடம்.

* இந்தியாவின் கோலியும், பும்ராவும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் வல்லவர்கள் என பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

* Group 4 exam for government jobs was held yesterday (June 9).  The candidates said that apart from the  Tamil language   other questions were easy.

 * Coimbatore police ranks first in our state in the cybercrime investigation.

* New Medical Insurance Scheme Guidelines for Tamil Nadu Government Employees and Pensioners were released.

 * PM Modi Inauguration Ceremony:  Chiefs of seven countries came to Delhi

 * Norway Chess Series: 3rd place for Pragnananda.

 * Pakistan all-rounder Fawad Alam said that India's Kohli and Bumrah are capable of changing the course of the game.


 Prepared by

Covai women ICT_போதிமரம்



இணையவழியில் ஜூன் 14, 15-ல் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஜூன் 14, 15-ம் தேதிகளில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: “உயர்நீதிமன்ற தீர்ப்பாணையை செயல்படுத்தும் வகையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு கல்வி தகவல் மேலாண்மை முகமை(எமிஸ்) மூலமாக ஜூனில் நடைபெறும்.

அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நடப்பாண்டு மட்டும் மாநில முன்னுரிமையின்படி கலந்தாய்வு நடத்தப்படும். இந்த கலந்தாய்வு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி செயல்பட வேண்டும்.

அதன்படி பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை ஆசிரியர் பயிற்றுநர்கள் ஜூன் 10-ம் தேதி மாலை 6 மணிக்குள் எமிஸ் தளம் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றப்பட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ஜூன் 11-ம் தேதி ஒப்புதல் வழங்க வேண்டும்.

அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமை பட்டியல், காலிப் பணியிட விவரம் ஜூன் 12-ல் வெளியிட வேண்டும். தொடர்ந்து முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம், முறையீடுகள் ஏதும் இருப்பின் அதை ஜூன் 13-ம் தேதி சரி செய்து இறுதி முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் வேண்டும்.

அதன்பின் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான மாறுதல் வருவாய் மாவட்டத்துக்குள் ஜூன் 14-ம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஜூன் 15-ம் தேதியும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.






பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடவேளை அறிமுகம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!!

 தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 10ஆம் தேதி நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் விதமாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை சிறார் இதழ்கள் வாசித்தல் என்ற பாடவேளை , இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாட்டு பாட வேலை மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் என மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாட வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

School Working & Holidays List 2024 - 2025 - Single Page

 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி - School Academic & Training Calendar  - Single Page

Schoo%20calendar%202024%20-25%20Single%20Page%20copy_wm


பள்ளிகளில் அறிமுகமாகும் 2 முக்கிய திட்டம்

 பள்ளிகளில் அறிமுகமாகும் 2 முக்கிய திட்டம் :


தமிழகம் முழுவதும் ஜூன் 10 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன . நடப்பு கல்வி ஆண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படவுள்ளன . இதில் ஒன்று முதல் 3 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பும் , 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேளையும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது . இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அதிகரிக்கும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது




TNPSC Group 4 Exam 2024 Answer Key with Question Paper

 TNPSC Group 4 Exam 2024 Answer Key with Question Paper

6 - 10th Science Monthly Wise Syllabus

6-10 அறிவியல் மாதவாரியாக பாடத்திட்டம் (தோராயமாக)

6 - 10th Science Monthly Wise Syllabus 👇


Download here



2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!

 பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒரு கல்வியாண்டிற்கான மொத்த வேலை நாட்கள் 210லிருந்து 220ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது!!!



* Model Time table  available for Classes 1-12 

2024-2025ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!

👇👇👇👇

Academic & Training calendar 2024 -25 |

 Download here


பள்ளி வேலை நாள் அதிகரிப்பு !

 நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது . பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது . மொத்த வேலை நாள் 210 லிருந்து 220 ஆக அதிகரிப்பு






மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு MKU-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.06.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

🔻🔻🔻
Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news