தொடக்கக் கல்வி - 2026-27ஆம் கல்வியாண்டு - தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கால அட்டவணை - பாடவேளை மற்றும் நேர ஒதுக்கீடு - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
விளையாட்டு, கலை மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக தினமும் ஒரு பிரிவேளை ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை செயல்படுத்துவதற்கு ஏதுவாக வெளியிடப்பட்ட திருத்திய கால அட்டவணையில் பள்ளியின் தேவைக்கு ஏற்ப தினசரி ஒரு பாடவேளையை "உடற்கல்வி பாடவேளை / இசை / கலை (ம) கைவினை / சமூக மனவெழுச்சி கற்றல் / பள்ளி இணைச் செயல்பாடுகள் / கூடுதல் இணைச் செயல்பாடுகள் பாடவேளை" ஒதுக்கீடு செய்து நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
நடுநிலைப் பள்ளிகள் செயல்படும் வளாகங்களில் 1-5ஆம் வகுப்பு கற்கும் மாணவர்களுக்கும் 6-8ஆம் வகுப்பு கற்கும் மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடவேளை தொடங்கும் போது ஒலிக்கப்படும் மணியோசை அம்மாணவர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் ஒரே வகையான கால இடைவெளியில் கற்றல் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக இணைப்பில் கண்டுள்ள மாதிரி கால அட்டவணை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அனுப்பலாகிறது.
இக்கால அட்டவணையை பின்பற்றி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் கற்றல் - கற்பித்தல் செயல்பாட்டினை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு : மாதிரி கால அட்டவணை
(i) வகுப்பு 1 & 2 (1) வகுப்பு 3-5 (ii) வகுப்பு 6-8
Time Table 2026-2027 | Elementary and Middle Schools | DEE Proceedings
👇👇👇👇
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment