சிறப்பு டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் பணிச்சான்று - ஆசிரியர்கள் அதிருப்தி

  



hindutamil%2Fimport%2Fhindu%2Fuploads%2Fnews%2F2025%2F09%2F09%2Fxlarge%2F1375838

சிறப்பு டெட் தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணிச்சான்று கேட்பதால் அதிருப்தியடைந்துள்ளனர். பழைய பணிச்சான்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி கல்வித்துறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ல் நடந்தது.

அக்.12-ல் முடிவுகள் வெளியானதில், 2.17 லட்சம் பேரில் 1.10 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. இதனிடையே தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு டிச. 20-ம் தேதி காலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கு பிற்பகலில் தாள்-1 தேர்வும் நடைபெறுகிறது

இத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அக். 27 முதல் நவ. 19-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் விண்ணப்பிக்கும்போது புதிதாக பணிச்சான்று பெற்று பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிதாக பணிச்சான்று பெற காலதாமதம் ஏற்படும் என்பதால் ஏற்கெனவே பெற்ற சான்றையே பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் வி.கணேசன் கூறியதாவது: புதிதாக பணிச்சான்று பெற வேண்டும் என்பதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். ஜூலையில் நடந்த சிறப்பு டெட் தேர்வுக்கு பெற்ற பணிச்சான்றையே மீண்டும் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

மேலும், டெட் தேர்வில் தமிழ்-30, ஆங்கிலம்- 30, சமூக அறிவியல்- 60, உளவியல்- 30 என மொத்தம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழாசிரியர் தமிழ்ப்பாடத்தை தவிர வேறு பாடம் நடத்தக்கூடாது என விதியிருக்கும்போது தமிழ்ப்பாட ஆசிரியர் சமூக அறிவியல் பாடத்திலிருந்து 60 மதிப்பெண்ணுக்கு ஏன் தேர்வு எழுத வேண்டும்.

அதனை தவிர்த்துவிட்டு தமிழ்ப்பாடத்தில் 30 மதிப்பெண் என்பதை 60 மதிப்பெண் என திருத்தலாம். அதேபோல், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களுக்கும் இதேபோல் அவர்களது பாடங்களில் கூடுதல் மதிப்பெண் வைத்து தேர்வு நடத்தினால் எளிதில் தேர்ச்சி பெறுவர். இதனை ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார்.



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

0 Comments:

Post a Comment