இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் ஜெ.எஸ். டாரதி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழம் (இக்னோ) தொலைதூரக் கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது.
தற்போது தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இக்னோவின் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க

0 Comments:
Post a Comment