தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு ஏப்.20-ம் தேதி தொடங்குகிறது

 ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ், தனி​யார் பள்​ளி​களில் இலவச மாணவர் சேர்க்​கைக்​கான விண்​ணப்​பப் பதிவு வரும் 20-ம் தேதி முதல் தொடங்​கு​கிறது.

இலவச கட்​டாயக் கல்வி உரிமைச் சட்​டத்​தின்​படி (ஆர்​டிஇ), தனி​யார் பள்​ளி​களில் 25 சதவீத இடங்​களில் ஏழைக் குழந்​தைகள் சேர்க்​கப்​படு​வார்​கள். மாநிலம் முழு​வதுள்ள 7 ஆயிரத்​துக்​கும் மேலான தனி​யார் பள்​ளி​களில் 1 லட்​சம் இடங்​கள் உள்​ளன. இந்த திட்​டத்​தில், எல்​கேஜி அல்​லது 1-ம் வகுப்​பில் சேருபவர்​கள் 8-ம் வகுப்பு வரை கட்​ட​ணம் செலுத்​தாமல் இலவச​மாக படிக்​கலாம். தமிழகத்​தில் 2013-ல் அமலான இந்த ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ், இது​வரை சுமார் 5.7 லட்​சம் குழந்​தைகள் தனி​யார் பள்​ளி​களில் படித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், வரும் கல்​வி​யாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்​கைக்​கான இணை​ய​வழி விண்​ணப்​பப் பதிவு வரும் 20 முதல் மே 18-ம் தேதி வரை நடை​பெறுகிறது. இதற்​கான அறி​விப்பை தனி​யார் பள்​ளி​கள் இயக்​குநரகம் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, ஆர்​டிஇ திட்​டத்​தின் கீழ் சிறு​பான்மை அந்​தஸ்து பெறாத அனைத்து தனி​யார் நர்​சரி, பிரைமரி, மெட்​ரிக், ஐசிஎஸ்இ மற்​றும் சிபிஎஸ்இ பள்​ளி​களில் இலவச​மாக மாணவர் சேர்க்கை பெற முடி​யும். இந்த திட்​டத்​தின் கீழ், வாய்ப்பு மறுக்​கப்​பட்ட நபர்​கள் மற்​றும் பொருளா​தா​ரத்​தில் நலிந்த பிரி​வினர் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்பிப்பது அவசியமாகும். பெற்றோர்கள் rte.tnschools.gov.in எனும் வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பம் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Comments:

Post a Comment