தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு சூரிய மின்பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர் (Solar Panel Installation Technician) பயிற்சி வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் தாட்கோ பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக 45 நாட்கள் கொண்ட இந்த தொழில்நுட்ப பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, தொழிற்பயிற்சி, பட்டயப்படிப்பு, பொறியியல் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
பயிற்சியை முழுமையாக நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். மேலும், வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, ஆரம்ப மாத ஊதியமாக ரூ.18,000 முதல் ரூ.30,000 வரை பெற வழிவகை செய்யப்படும். வேலைவாய்ப்பை விரும்பாதவர்கள் சுயதொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு விடுதி மற்றும் உணவுச் செலவினத்தை டாக்டர் ரெட்டி நிறுவனம் ஏற்க உள்ளது. தகுதியான இளைஞர்கள் www.tahdco.com இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
0 Comments:
Post a Comment