SIR - சிறப்பு தீவிர திருத்தம் - வழிமுறைகள்

    Education News (கல்விச் செய்திகள்)    


Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)




1. *BLO எனப்படும் பூத் அதிகாரி* வாக்காளர் அனைவரது இல்லங்களுக்கும் வந்து, குடும்பத்தில் உள்ள, *ஒவ்வொரு வாக்காளருக்கும் தனி தனியாக*, வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் & புகைப்படத்துடன் கூடிய *Enumuration Form - கணக்கெடுப்பு படிவத்தை* வழங்குவார்.

2. ஒரு வாக்காளருக்கு இரண்டு படிவம் வழங்குவார். அதில் ஒன்றை நிரப்பி கொடுத்தால் போதும். தவறு ஏதும் எழுதியிருந்தால், இன்னொரு படிவத்தை நிரப்பி கொடுக்க வேண்டும்.


3. ⁠படிவத்தில், தங்களுடைய பெயர், தந்தை பெயர், தாயார் பெயர், கணவர் பெயர் அல்லது மனைவி பெயர் உள்ளிட்ட தகவல்களை எழுத வேண்டும். ஆதார்கார்டு எண் இருந்தால், அதை எழுத வேண்டும்.


4. ⁠அதற்கு அடுத்த கட்டத்தில், *2002 வாக்காளர் பட்டியலில்*, தங்களது ( சம்பந்தப்பட்ட வாக்காளர் ) *பெயர் இருப்பின்*, அந்த பட்டியலில் உள்ள வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.


5. ⁠தங்களது பெயர் 2002 வாக்காளர் பட்டியலில் *இல்லை என்றால்,* தங்களுடைய ( வாக்காளரது ) தந்தை அல்லது தாய், உறவினர் பெயர் இருப்பின், அவர்களது வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை தெளிவாக எழுதவேண்டும்.

6. ⁠2002 வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் அல்லது தாய், தந்தை பெயர் *இருக்கிறதா என்பதை, BLO அதிகாரி வைத்திருக்கும் Mobile App ன்*, வழியாக பார்த்துகொள்ளலாம். அதில் உள்ள, தகவலின் அடிப்படையில், வாக்களர் வரிசை எண், பாகம் எண், தொகுதி ஆகியவற்றை படிவத்தில் நிரப்பி கொள்ளலாம்.


7. தங்களுக்கு 2002 ல் வாக்காளர் பெயர் இல்லையென்றால் அந்த கட்டத்தில் *இல்லை என்று எழுதவேண்டும்.* தங்களது தாய்,தந்தை ஆகியோருக்கும் இல்லை என்றாலும், அடுத்த Box ல், *இல்லை என்று* எழுதவேண்டும்.


8. ⁠பின்பு படிவத்தில் Sign செய்து கொடுக்க வேண்டும்.


9. ⁠2002 என்பது, மீண்டும் வாக்குகளை பெறுவதற்கான *ஒரு Additional Benefits தானே* தவிர, அதில் இல்லாதவர்களுக்கு, *வாக்குரிமை வராது என்பதல்ல*.

10. ⁠நிரப்பிய படிவத்தை BLO அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment