Education News (கல்விச் செய்திகள்)
Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
Salary Account Insurance
கடலூர் செல்லங்குப்பம் பன்னீர்செல்வம் மகன் கஜா என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூர்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்தவர், அரியலூர் அருகே வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவலர் கஜா பாரத ஸ்டேட் வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் (PSP) அக்கவுண்ட் வைத்திருந்ததார். போலீஸ் சேலரி பேக்கேஜ் வைத்திருக்கும் காவலர் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் காவலர்களுக்கு 1 கோடி இன்சூரன்ஸ் தொகை அவரது குடும்பத்தாருக்கு வழங்கி வருகிறார்கள். வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழந்த கஜா அவரது தந்தை பன்னீர்செல்வம், அவரது மனைவி பிரவீனா வயது 28, மகன் அதியன் வயது 2 1/2 குடும்பத்தாரிடம் ரூபாய் 1 கோடி காசோலையை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்கள் வழங்கினார். பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் மண்டல மேலாளர் திரு. நட்ராஜ் , தலைமை மேலாளர் திரு. பரணிதரன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
Click here to join WhatsApp group for Daily employment news
Click here to join TNkalvinews whatsapp group
Click here to join TNPSC STUDY whatsapp group
(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )
0 Comments:
Post a Comment