UPSC பொறியாளர்கள் தேர்வு அறிவிப்பு வெளியீடு; 474 காலிப்பணியிடங்கள் - அக்டோபர் 16-ம் தேதியே கடைசி நாள்

 மத்திய அரசின் பொறியாளர்கள் சேவை, பல்துறைகளில் உள்ள பொறியியல் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி பொறியாளர் சேவைத் தேர்வு 2025 அறிவிப்பு 474 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பொறியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

யுபிஎஸ்சி பொறியாளர் சேவை தேர்வு 2025

2025-ம் ஆண்டில் மொத்தம் 474 காலிப்பணியிடங்கள் நிரப்ப இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 26 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது. மத்திய அரசில் உள்ள குரூப் ஏ, பி சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

முதல்நிலைத் தேர்வு , முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக தேர்வு நடைபெறும். அந்த வகையில், தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

வயது வரம்பு

இத்தேர்வை எழுத 2026 ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். அதே போன்று, அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.1996 தேதிக்கு முன்னரும், 01.01.2005 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. அரசு அதிகாரிகளுக்கு 35 வயது வரை தளர்வு உள்ளது. இவைமட்டுமின்றி, ஒபிசி 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

மத்திய, மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையாக கல்வித்தகுதி குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

தேர்வு முறை

  • யுபிஎஸ்சி பொறியாளர்கள் சேவை தேர்வு, 3 கட்டமாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். முதல் தாள் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு 2 மணி நேரத்திற்கு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் தாள் அந்தந்த பொறியியல் பிரிவிற்கான 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களும் என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.
  • முதன்மைத் தேர்வும் 2 தாள்கள் கொண்டு நடத்தப்படும். இரண்டுமே பாடம் சார்ந்ததாக இருக்கும். மொத்தம் 3 மணி நேரத்திற்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
  • இதில் தேர்ச்சில் பெறுபவர்கள் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள். நேர்காணல் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
  • சென்னை மற்றும் மதுரையில் முதல்நிலைத் தேர்வு மையமும், சென்னையில் முதன்மைத் தேர்வு மையமும் அமைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
யுபிஎஸ்சி பொறியாளர் சேவை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் அக்டோபர் 16-ம் தேதி வரை பெறப்படுகிறது. அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்
விவரம்தேதிகள்
விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள்26.09.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்16.10.2025 மாலை 6 மணி வரை
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்
மத்திய அரசு துறைகளில் பொறியாளர்களாக விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் பயிற்சி - டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியலில் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு முதல் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தொழிற்பயிற்சியின் விவரங்கள்

பதவியின் பெயர்காலிப்பணியிடங்கள்
பொறியியல் பட்டப்படிப்பு18
பொறியியல் டிப்ளமோ61
மொத்தம்79

வயது வரம்பு
தொழிற்பயிற்சி சட்டம் 1973-ம் ஆண்டின்படியின், வயது வரம்பு பின்பற்றப்படும்.

கல்வித்தகுதி

  • தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் உள்ள தொழிற்பயிற்சி இடங்களில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முழு நேரக் கல்வியில் பயின்றிருக்க வேண்டும்.
  • 2021, 2022, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை உதவித்தொகை
  • மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 பயிற்சி காலத்தில் வழங்கப்படும்.
  • டிப்ளமோ பட்டதாரிகளுக்கு மாதம் ரூ. 8,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
தொழிற்பயிற்சி இடங்களில் எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதியின் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களின் இமெயில் முஅக்வரிக்கு சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். சென்னையில் நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை
தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு சொந்த செலவில் வர வேண்டும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி கிடையாது. விண்ணப்பங்கள் செப்டம்பர் இரண்டாம் வாரம் தொடங்கப்பட்ட நிலையில், அக்டோபர் 16 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் அக்டோபர் 25-ம் தேதி வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் மாதம் நடைபெறும். அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பெங்களூருவில் பெல் நிறுவனத்தில் 610 காலிப்பணியிடங்கள்; இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வேலை

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு.. பெங்களூரில் அமைந்துள்ள பெல் நிறுவன கிளையில் தற்காலிக அடிப்படையில் 610 காலிப்பணியிடங்கள் நிரப்பப்ப்பட உள்ளன. இதில் 488 காலிப்பணியிடங்கள் பெங்களூரிலும், 122 காலிப்பணியிடங்கள் தேசிய அளவிலும் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

பொறியியல் டிரைய்னி - I 610

இதில் எலெக்ட்ரிக்கல் - 301, மெக்கானிக்கல் - 186, எலெக்ட்ரிக்கல் - 79, கணினி அறிவியல் - 44 என நிரப்பப்படுகிறது. இவை பொதுப்பிரிவு - 247, பொருளாதாரத்தில் பின்தங்கியவர் - 61, ஒபிசி - 165, எஸ்சி - 81, எஸ்டி - 46 என இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.

வயது வரம்பு

பொறியியல் டிரைய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் அதிகபடியாக 28 வயதைக் கடந்திருக்கக்கூடாது. ஒபிசி 3 ஆண்டுகள் வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையும் தளர்வு வழங்கப்படுகிறது.

கல்வித்தகுதி

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல் ஆகியவற்றில் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு (BE/B.Tech/B.Sc) ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும். அந்தந்த முதன்மை பொறியியல் பிரிவிற்கு சம்மந்தமான பாடப்பிரிவுகளில் பொறியியல் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம்

இப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். முதல் ஆண்டு மாதம் ரூ.30 ஆயிரம், இரண்டாம் ஆண்டு ரூ,.35,000, மூன்றாம் ஆண்டு ரூ.40,000 என சம்பளம் வழங்கப்படும். இவையில்லாமல் வருடத்திற்கு ரூ.12,000 மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை
இப்பணியிடங்களுக்கு தகுதியானவக்ரள் எழுத்துத் தேர்வின் மூலம் தகுதி அடைவார்கள். விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கான அழைப்பு எஸ்.எம்.எஸ் மற்றும் இமெயில் மூலம் விடுக்கப்படும். எழுத்துத் தேர்வு 85 மதிப்பெண்களுக்கு 90 நிமிடங்கள் நடத்தப்படும். தொழில்நுட்பம் மற்றும் நுண்ணறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். இதில் 0.25 நெகட்டிங் மதிப்பெண்கள் உள்ளன. தேர்வு பெங்களூரில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
பெல் நிறுவனப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொறியியல் பட்டதாரிகள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு கட்டணமாக ரூ.177 செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உள்ளது. செப்டம்பர் 24-ம் தேதி முதல் விண்ணப்பம் தொடங்கிய நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்டோபர் மாதம் தேர்வு நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்

விண்ணப்பம் தொடங்கப்பட்ட நாள் 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி நாள் 07.10.2025

எழுத்துத் தேர்வு 25,26 அக்டோபர் 2025

விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆவடி கனரக தொழிற்சாலையில் ஜூனியர் மேனேஜர் வேலை; டிகிரி போதும் - அக்டோபர் 11-ம் வரை விண்ணப்பிக்கலாம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஆவடி தொழிற்சாலை
ஆவடியை தலைமை இடமாக கொண்டு ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் (AVNL) செயல்படுகிறது. மொத்தம் 5 உற்பத்தில் யூனிட்களில் சுமார் 12,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ராணுவத்தின் T-72, T-90, MBT அர்ஜூன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதன் கனரக வாகன தொழிற்சாலையில் Integrated Material Management பிரிவில் உள்ள 20 ஜூனியர் மேனேஜர் பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

கனரக வாகன தொழிற்சாலை ஜூனியர் மேனேஜர் 20

இவை பொதுப்பிரிவு - 10, ஒபிசி - 5, எஸ்சி - 3, எஸ்டி - 1, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 1 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். மத்திய அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி

ஜூனியர் மேனேஜர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல்/ தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் அல்லாத ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் 2 ஆண்டு எம்பிஏ முடித்திருக்க வேண்டும். ஏதெனும் ஒரு பிரிவில் எம்பிஏ தேர்ச்சி போதுமானது.

சம்பள விவரம்
ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் உள்ள இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படும் காரணத்தினால், விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணல் மூலம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதார்களின் கல்வித்தகுதியில் 85 சதவீதம், நேர்காணலில் 15 சதவீத மதிப்பெண்கள் என வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் நபர்கள் 1 வருடத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு குழு நிர்ணம் செய்வதே இறுதி முடிவாகும். தெரிவு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிட்பட்டு, நேர்காணல் அழைப்பு கடிதம் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரிகள் https://ddpdoo.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து, சாதரண தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.300 SBI Collect => PSU (Public Sector Undertaking) மூலம் ஆன்லைன் வழியாக நிறுவனத்தை தேர்வு செய்து செலுத்த வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதையும் இணைக்க வேண்டும். விண்ணப்பித்து கவர் மீது பதவியின் பெயர் மற்றும் Post Bag No. 01 என்பதை குறிப்பிட வேண்டும். விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி
Chief General Manager,
Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600 054

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
தபால் சென்றடைய வேண்டிய கடைசி நாள்11.10.2025
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்

விண்ணப்பதார்களின் முழுமையான நிரப்பப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். எனவே, வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொடர்பு விவரங்கள் ஆகியவற்றை முறையாக அளிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20250930-WA0014

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2025ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு அக்.12ம் தேதி நடத்தப்பட உள்ளது.

இத்தேர்வினை எழுத 236,530 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது-ஆசிரியர் தேர்வு வாரியம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

EL SURRENDER UPDATE - களஞ்சியம் மொபைல் ஆப் அல்லது Self Service Portal மூலம் சரண்டர் லீவ் (SLS) விண்ணப்பிப்பது எப்படி?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

EL%20SURRENDER

 EL SURRENDER UPDATE

களஞ்சியம் மொபைல் ஆப் அல்லது Self Service Portal மூலம் சரண்டர் லீவ் (SLS) விண்ணப்பிப்பது குறித்து

அனைத்து பணியாளர்களும் அறிந்திருக்க வேண்டியது என்னவெனில், 01.10.2025 முதல் Earned Leave Surrender (சரண்டர் லீவ்) விண்ணப்பங்கள் களஞ்சியம் மொபைல் ஆப்பின் மூலமாகவும் (மேலும் Self Service Portal மூலமாகவும்) சமர்ப்பிக்கலாம். பணியாளர்கள் குறிப்பிட்ட கால எல்லைக்குள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

DDO-க்களுக்கு அறிவுறுத்தல்கள்:

அனைத்து பணியாளர்களின் விடுப்பு இருப்பு (Leave Balance) முறையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளதைக் உறுதி செய்ய வேண்டும்.

2020 ஏப்ரல் மாதத்திற்கு முன் பணியாளர்கள் பெற்ற சரண்டர் லீவ் விவரங்களை, தேவையான இடங்களில், eSR Part I-ல் பதிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு விண்ணப்பமும் தகுந்த அங்கீகரிப்பு அதிகாரிகளிடம் தாமதமின்றி செல்ல Approval Group-ஐ சரியாக Map செய்ய வேண்டும்.

பணியாளர் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அங்கீகார நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சிஸ்டம் உருவாக்கும் அனுமதி ஆணையை (Sanction Order) பயன்படுத்தி பில் தயாரித்து, அதன்பின் சரண்டர் லீவ் தொகையை விடுவிக்க வேண்டும்.

அனைவரும் மேற்கண்ட வழிமுறைகளை கடைப்பிடித்து, சரண்டர் லீவ் விண்ணப்பங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டுகிறோம்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இணைவதற்கான கால அவகாசம் 30.11.2025 வரை நீட்டிப்பு!

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) இணைவதற்கான கால அவகாசம் 30.11.2025 வரை நீட்டிப்பு!

IMG_20250930_230753

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதுகலை ஆசிரியர் தேர்வு திட்டமிட்டபடி அக். 12 அன்று நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1. தமிழகத்தில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்ப ஜூலை 10 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டது.

2. ஆன்லைன் விண்ணப்பங்கள் ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரை பெறப்பட்டன.

3. கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதால், தேர்வை 3 வாரம் தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

7267 ஆசிரியர்கள் தேவை; மத்திய அரசுப் பணி; தமிழ்நாட்டிலும் வாய்ப்பு; விண்ணப்பிக்க தயாரா?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பழங்குடியினருக்கான ஏக்லவ்யா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; 7267 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்; தேர்வு முறை இதுதான்!

பழங்குடியின மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம் (NESTS) ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான EMRS ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் செயல்படும் 400 ஏக்லவ்யா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகளில் (EMRS) 7267 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23 ஆகும்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 225

கல்வித் தகுதி: Master’s Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். மேலும் 12 வருட பணி அனுபவம் அவசியம்

வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 78,800 - 2,09,200

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் Bachelor Degree மற்றும் B.Ed. degree படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/recSys2025/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFZ5JDNNIP7I8JbNwGOl976uPeIvr9X7G7iVESmo7y1L6 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025

விண்ணப்பக் கட்டணம்: முதல்வர் – ரூ. 2000, ஆசிரியர் – ரூ. 1500. ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் – ரூ. 1000

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பொறியியல் படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதுள்ள ஐஐடி உட்பட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) எனும் தேசிய நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியர்களை தேர்வு செய்கின்றன.

மேலும், கணிசமான தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண் செல்லும். அதன்படி 2026-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 7, 8 மற்றும் 14, 15-ம் தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது.

இந்த முறை கேட் தேர்வை குவாஹாட்டி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஆகஸ்ட் 28-ல் தொடங்கி செப்டம்பர் 28-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://gate2026.iitg.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதனுடன் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முடிவுகள் மார்ச் 19-ல் வெளியிடப்படும். மேலும், கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத் தளத்தில் சென்று பட்டதாரிகள் அறிந்து கொள்ளலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் அனுமதி

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்களின் கல்வி சுற்றுலாவிற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்ய மாமன்ற கூட்டத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
3 நாட்கள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் ஆசிரியர்களுக்கு மொத்தம் ரூ.38.72 லட்சம் செலவீனத் தொகை முன்மொழியப்பட்டுள்ளது. 2025 - 26ஆம் கல்வியாண்டின் விடுமுறை நாட்களில் திருச்சி-IIM, NIT ஆகிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்