மத்திய அரசின் பொறியாளர்கள் சேவை, பல்துறைகளில் உள்ள பொறியியல் பணியிடங்களுக்கு யுபிஎஸ்சி பொறியாளர் சேவைத் தேர்வு 2025 அறிவிப்பு 474 காலிப்பணியிடங்கள் வெளியாகியுள்ளது. சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் பொறியியல் ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி பொறியாளர் சேவை தேர்வு 2025
2025-ம் ஆண்டில் மொத்தம் 474 காலிப்பணியிடங்கள் நிரப்ப இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 26 காலிப்பணியிடங்கள் உள்ளன. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது. மத்திய அரசில் உள்ள குரூப் ஏ, பி சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.
முதல்நிலைத் தேர்வு , முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக தேர்வு நடைபெறும். அந்த வகையில், தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
வயது வரம்பு
இத்தேர்வை எழுத 2026 ஜனவரி 1-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயது இருக்க வேண்டும். அதே போன்று, அதிகபடியாக 30 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 02.01.1996 தேதிக்கு முன்னரும், 01.01.2005 தேதிக்கு பின்னர் பிறந்திருக்கக்கூடாது. அரசு அதிகாரிகளுக்கு 35 வயது வரை தளர்வு உள்ளது. இவைமட்டுமின்றி, ஒபிசி 3 வருடங்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி
மத்திய, மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். முழுமையாக கல்வித்தகுதி குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.
தேர்வு முறை
- யுபிஎஸ்சி பொறியாளர்கள் சேவை தேர்வு, 3 கட்டமாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். முதல் தாள் பொது அறிவு மற்றும் நுண்ணறிவு 2 மணி நேரத்திற்கு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் தாள் அந்தந்த பொறியியல் பிரிவிற்கான 3 மணி நேரத்திற்கு 300 மதிப்பெண்களும் என மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் முதன்மைத் தேர்விற்கு தகுதி அடைவார்கள்.
- முதன்மைத் தேர்வும் 2 தாள்கள் கொண்டு நடத்தப்படும். இரண்டுமே பாடம் சார்ந்ததாக இருக்கும். மொத்தம் 3 மணி நேரத்திற்கு 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
- இதில் தேர்ச்சில் பெறுபவர்கள் நேர்காணலுக்கு தகுதி பெறுவார்கள். நேர்காணல் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
- சென்னை மற்றும் மதுரையில் முதல்நிலைத் தேர்வு மையமும், சென்னையில் முதன்மைத் தேர்வு மையமும் அமைக்கப்படும்.
யுபிஎஸ்சி பொறியாளர் சேவை தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். விண்ணப்பங்கள் அக்டோபர் 16-ம் தேதி வரை பெறப்படுகிறது. அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்மத்திய அரசு துறைகளில் பொறியாளர்களாக விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன.
0 Comments:
Post a Comment