முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!

   Education News (கல்விச் செய்திகள்)
    Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
 முதன் முறையாக வேலைக்கு போறீங்களா.? EPFO- மூலம் ரூ.15000 ஊக்கத்தொகை உங்களுக்கு கன்பார்ம்!!


இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.


இது, வேலைவாய்ப்பு உருவாக்குதல், வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. "Employment Linked Incentive (ELI) Scheme" என்ற ஒரு புதிய திட்டத்தை ஜூலை 1, 2025 அன்று அறிவித்துள்ளது. இந்தத் திட்டம், பிரதமர் நரேந்திர மோடியின் "பிரதம மந்திரி ரோஜ்கர் மேளா" திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டத்திற்காக ரூ.99,446 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.ELI திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:இந்த ELI திட்டம், இரு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.



முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு ₹1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். பணியாளர் EPFO-வில் சேர்ந்த பிறகு, தொடர்ந்து 6 மாதங்கள் வேலை செய்த பின்னர் முதல் தவனை வழங்கப்படும். 12 மாதங்கள் வேலை செய்த பின்னர், ஒரு கட்டாய நிதி கல்வியறிவு படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் புதிய ஊழியர்களை முறைசார்ந்த வேலைவாய்ப்புக்குள் கொண்டு வந்து, அவர்களுக்கு ஆரம்பகால நிதி ஊக்கத்தை அளிப்பதையும், நிதி சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1.92 கோடி புதிய ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

0 Comments:

Post a Comment