எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு. எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி அறிவிப்பு.

 IMG_20250604_181855

2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது . பார்வையில் காணும் அரசாணையின்படி , 2025-2027 ஆம் கல்வியாண்டு வரை எண்ணும் எழுத்தும் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , எண்ணும் எழுத்தும் சார்ந்து 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடங்களுக்கு ( 1 முதல் 3 ஆம் வகுப்பு ) தமிழ் , ஆங்கிலம் , கணிதம் , அறிவியல் , மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களுக்கு ( 4 மற்றும் 5 ஆம் வகுப்பு ) முதல் பருவத்திற்கான பாடப்பொருள் ருவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்துள்ளது.


 இந்நிலையில் 2025 2026 ஆம் கல்வியாண்டில் , 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணும் எழுத்தும் பாடப்பொருள் சார்ந்து முதல் பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சியினை 09.06.2025 முதல் 13.06.2025 முடிய நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது .

எண்ணும் எழுத்தும் பயிற்சி - வட்டார அளவிலான பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 04-06-2025

👇👇👇

Ennum Ezhuthum Block level Training - Reg - Download here

0 Comments:

Post a Comment