Search

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) கள உதவியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Field Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பில் வேளாண்மை அல்லது அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

Data Entry person

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : BA/BSc/BCom  படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000

வயதுத் தகுதி: 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும். 

முகவரி : Institute of Animal Nutrition, Near Potheri railway station, Kattankolathur Post, Kattupakkam – 603 203, Chengalpattu District

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 30.05.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

0 Comments:

Post a Comment