SMC மறுகட்டமைப்பு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ள 24 உறுப்பினர்கள் யார் யார்? - விபரம்

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு: 24 உறுப்பினர்களுக்கான தேர்வு விதிமுறைகள் மற்றும் முன்னுரிமை விவரங்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) அமைப்பதற்கான 24 உறுப்பினர்களின் விவரங்கள், பொறுப்புகள் மற்றும் அவர்களுக்கான முன்னுரிமை விதிமுறைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

தலைவர் மற்றும் துணைத் தலைவர்:

  • தலைவர்: பெற்றோர் பிரதிநிதிகளில் ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்; இவர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்.
  • துணைத் தலைவர்: பெற்றோர் பிரதிநிதிகளில் ஒருவர் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.சிறப்பு பெற்றோர் பிரதிநிதிகளுக்கான முன்னுரிமை:

    பின்வரும் பிரிவுகளைச் சேர்ந்த பெற்றோர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்குத் துணைத் தலைவர் அல்லது முக்கியப் பொறுப்புகளில் முன்னுரிமை அளிக்கப்படும்:

    • மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர்
    • தூய்மைப் பணியாளர்களின் பெற்றோர்
    • SC/ST வகுப்பைச் சேர்ந்த குழந்தையின் பெற்றோர்
    • எச்.ஐ.வி (HIV) தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்
    • மாணவர்களின் பாதுகாவலராக உள்ள திருநங்கைகள்

    பள்ளி மற்றும் ஆசிரியர் தரப்பு உறுப்பினர்கள்:
    ஒருங்கிணைப்பாளர் (Convenor): பள்ளித் தலைமையாசிரியர் (1 நபர்) ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார்.

    ஆசிரியர் பிரதிநிதி: பள்ளியிலிருந்து 1 ஆசிரியர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

    குறிப்பு: தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதி ஆகிய இருவரில் ஒருவர் கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும்.
    பெற்றோர் பிரதிநிதிகள் (12 நபர்கள்):

    • வாய்ப்பு மறுக்கப்பட்ட (SC, ST) மற்றும் நலிவடைந்த பிரிவினர் உட்பட 12 பெற்றோர் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
    • இவர்களில் குறைந்தபட்சம் 7 பேர் பெண்களாக இருக்க வேண்டும்

    உள்ளாட்சி & கல்வித்துறை சார்ந்த உறுப்பினர்கள்:

    • உள்ளாட்சிப் பிரதிநிதிகள்: 2 நபர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் (அதில் குறைந்தபட்சம் 1 பெண் இருக்க வேண்டும்).
    • கல்வியாளர் பிரதிநிதி (1 நபர்): ஓய்வு பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர், ஆஷா பணியாளர் (ASHA), துணைச் செவிலியர் (ANM) அல்லது அங்கன்வாடி பணியாளர்களில் ஒருவர் உறுப்பினராக சேர்க்கப்படுவார் (இப்பிரிவில் முன்னாள் மாணவருக்கு முன்னுரிமை).

      சுய உதவிக்குழு & முன்னாள் மாணவர்கள்:

      • சுய உதவிக்குழு உறுப்பினர்: பெற்றோர் அமைப்பைச் சேர்ந்த 1 உறுப்பினர் (பெண்) சேர்க்கப்படுவார்.
      • முன்னாள் மாணவர் (பெற்றோர்): 3 நபர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் (இதில் 2 பேர் பெண்களாக இருக்க வேண்டும்).
      • முன்னாள் மாணவர் (பொது): 1 நபர் உறுப்பினராகச் சேர்க்கப்படுவார்.

      மொத்த உறுப்பினர்கள்: பள்ளி மேலாண்மைக் குழுவில் மொத்தம் 24 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* எவ்வாறு பதிவு செய்வது - காணொளி

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு  நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி இது.

மறுகட்டமைப்பு நிறைவடைந்த பள்ளிகள் உறுப்பினர் பதிவினை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் *18.09.2026 (வெள்ளிக்கிழமை)* ஆகும்.

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TN SPARK | Term 1 | Assessment

TN SPARK Term 1 Assessment

Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a schedule on their time availability from today until October 1st week. 

CEO

TNSPARK Assessment for term1 is active from today.All supervisors can communicate to schools to plan for conducting the Assessment in their available schedule and ensure the completion of entry before october-9

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC மறு கட்டமைப்பு - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை - CEO Proceedings

 பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு (2026–2028) – பார்வையாளர்களின் பணிகள் & முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நிகழ்விற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை முன்கூட்டியே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  

கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.  

மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தயாராக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.  

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிக்கு மட்டுமே பார்வையாளராகச் செல்ல வேண்டும்.  

நிகழ்வின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

  • நிகழ்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  
  • நிகழ்வு உரிய நேரத்தில் தொடங்க உதவிட வேண்டும் மற்றும் நிகழ்வு முடியும் வரை பள்ளியிலேயே இருக்க வேண்டும்.  
  • எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல், நடுநிலையோடு நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.  
  • பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  
  • பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைமையாசிரியருக்குச் சார்பற்ற முறையில் தீர்வு காண ஆலோசனை வழங்க வேண்டும்.  

    நிகழ்விற்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

    • படிவங்கள் 1 முதல் 7 வரையிலான ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.  
    • பார்வையாளர்களுக்கான Google Form அறிக்கையை நிகழ்வு நடைபெறும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.  

      கட்டாயம் செய்ய வேண்டியவை:

      • அரசு வழிகாட்டுதல்களையும் சுற்றறிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.  
      • மாணவர் நலன் மற்றும் பள்ளி வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.  
      • ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட/வட்டாரப் பார்வையாளர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். 

        கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:

        • தங்களுக்குத் தெரிந்த நபர்களை உறுப்பினராகத் தேர்வு செய்ய தலைமையாசிரியருக்கு அழுத்தம் கொடுப்பதோ பரிந்துரைப்பதோ கூடாது. 
        • தேர்வு முடிவுகளை மாற்ற முயற்சி செய்யக் கூடாது.  
        • தலைமையாசிரியரின் மறுகட்டமைப்பு நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறவோ கூடாது.  
        • ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பார்வையாளராகப் பங்கேற்கக் கூடாது. 

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 1183332

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Non-Teaching Staff Details - Entry into EMIS - New Entry and Corrections.pdf

👇👇👇

Download here

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

1162884

உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் - 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ் நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்..!!

பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில் மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் இம்மதிப்பீட்டு தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலர்கள்

இணைப்பு:

EMIS இணையதளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு மேற்கொள்ள இணையதள முகவரி👇👇👇

https://exams.tnschools.gov.in/login

District 8th Assessment CEO Letter.pdf

👇👇👇👇