SMC புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* எவ்வாறு பதிவு செய்வது - காணொளி

 

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு  நிறைவு செய்துள்ள பள்ளிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் விவரங்களை *Member Registration* விருப்பத்தைத் தேர்வு செய்து எவ்வாறு பதிவு செய்வது என்பதற்கான செயல்முறை காணொளி இது.


மறுகட்டமைப்பு நிறைவடைந்த பள்ளிகள் உறுப்பினர் பதிவினை நிறைவு செய்வதற்கான கடைசி நாள் *18.09.2026 (வெள்ளிக்கிழமை)* ஆகும்.





 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

TN SPARK | Term 1 | Assessment

 

 

TN SPARK Term 1 Assessment

Questions are uploaded in teacher login and will be enabled today. The schools can do the assessments making a schedule on their time availability from today until October 1st week. 

CEO

TNSPARK Assessment for term1 is active from today.All supervisors can communicate to schools to plan for conducting the Assessment in their available schedule and ensure the completion of entry before october-9


 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

SMC மறு கட்டமைப்பு - பள்ளிகளில் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை - CEO Proceedings

 பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு (2026–2028) – பார்வையாளர்களின் பணிகள் & முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

நிகழ்விற்கு முன் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை முன்கூட்டியே தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.  

கூட்டம் நடைபெறும் நாள், நேரம் மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.  

மறுகட்டமைப்புக்குத் தேவையான படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தயாராக உள்ளதா எனச் சரிபார்க்க வேண்டும்.  

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிக்கு மட்டுமே பார்வையாளராகச் செல்ல வேண்டும்.  

நிகழ்வின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

  • நிகழ்வு தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே ஒதுக்கப்பட்ட பள்ளிக்குச் செல்ல வேண்டும்.  
  • நிகழ்வு உரிய நேரத்தில் தொடங்க உதவிட வேண்டும் மற்றும் நிகழ்வு முடியும் வரை பள்ளியிலேயே இருக்க வேண்டும்.  
  • எவ்விதக் குறுக்கீடும் செய்யாமல், நடுநிலையோடு நிகழ்வுகளைக் கவனிக்க வேண்டும்.  
  • பெண்களுக்கு முன்னுரிமை உள்ளிட்ட இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  
  • பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், தலைமையாசிரியருக்குச் சார்பற்ற முறையில் தீர்வு காண ஆலோசனை வழங்க வேண்டும்.  

    நிகழ்விற்குப் பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள்:

    • படிவங்கள் 1 முதல் 7 வரையிலான ஆவணங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.  
    • பார்வையாளர்களுக்கான Google Form அறிக்கையை நிகழ்வு நடைபெறும் அதே நாளில் மாலை 6 மணிக்குள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.  

      கட்டாயம் செய்ய வேண்டியவை:

      • அரசு வழிகாட்டுதல்களையும் சுற்றறிக்கைகளையும் முழுமையாகப் பின்பற்றி நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.  
      • மாணவர் நலன் மற்றும் பள்ளி வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும்.  
      • ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட/வட்டாரப் பார்வையாளர் குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். 

        கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:

        • தங்களுக்குத் தெரிந்த நபர்களை உறுப்பினராகத் தேர்வு செய்ய தலைமையாசிரியருக்கு அழுத்தம் கொடுப்பதோ பரிந்துரைப்பதோ கூடாது. 
        • தேர்வு முடிவுகளை மாற்ற முயற்சி செய்யக் கூடாது.  
        • தலைமையாசிரியரின் மறுகட்டமைப்பு நடைமுறைகளில் தேவையின்றி தலையிடவோ, ஆதாரமற்ற கருத்துக்களைக் கூறவோ கூடாது.  
        • ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பள்ளிகளில் பார்வையாளராகப் பங்கேற்கக் கூடாது. 

 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

 1183332

3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதல் - விவரங்களை முழுமையாக EMIS தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

DSE - Non-Teaching Staff Details - Entry into EMIS - New Entry and Corrections.pdf

👇👇👇

Download here




 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.

 

1162884

உயர்கல்வி வழிகாட்டித் திட்டம் - 2026-2027 ஆம் கல்வியாண்டில் பயிற்சி பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கான மதிப்பீடு தேர்வு (Assessment) நடைபெறுதல் வழிகாட்டி நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து தமிழ் நாடு மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்..!!

பார்வையில் காணும் இவ்வலுவலக செயல்முறைகளில் மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள், EMIS இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்த ஆசிரியர்களால் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது, மாவட்ட அளவில் பயிற்சிப் பெற்ற ஆசிரியர்கள், சார்ந்த பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் பள்ளி அளவில் பயிற்சி வழங்குவதால், இம்மதிப்பீட்டுத் தேர்வினை மாவட்ட மற்றும் பள்ளி அளவில் பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களும் 21.09.2026 முதல் 30.09.2026 வரை EMIS இணையதளத்தில் இம்மதிப்பீட்டு தேர்வினை தவறாது மேற்கொள்ள சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலர்கள்


இணைப்பு:


EMIS இணையதளத்தில் மதிப்பீட்டுத் தேர்வு மேற்கொள்ள இணையதள முகவரி👇👇👇

https://exams.tnschools.gov.in/login


District 8th Assessment CEO Letter.pdf

👇👇👇👇

Download here



 இன்று வெளியான  செய்திகள் | Latest Education News in Tamil  Today

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க

RTE நடைமுறைக்கு வந்த பிறகு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் அனைத்தும் செல்லாது – அரசு தரப்பு வாதம்: RTE நடைமுறைக்கு வந்த பிறகு வழங்கப்

1168002

RTE நடைமுறைக்கு வந்த பிறகு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள் அனைத்தும் செல்லாது – அரசு தரப்பு வாதம்:


ஒரு ஆசிரியர் 10.10.2011 அன்று பட்டதாரி ஆசிரியராக (BT) நியமிக்கப்பட்டார். பின்னர் 03.10.2017 அன்று பதவி உயர்வு மூலம் முதுகலை ஆசிரியராக (PG Assistant) நியமிக்கப்பட்டார்.


TET தேர்ச்சி இல்லாத நிலையில், தமக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை உறுதி செய்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க வேண்டும் எனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஆசிரியருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.


மேல்முறையீட்டில் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதம்:


- G.O.Ms.No.181 அமல்படுத்தப்பட்ட தேதி 15.11.2011.


- சம்பந்தப்பட்ட ஆசிரியர் 10.10.2011 அன்று BT ஆசிரியராக நியமிக்கப்பட்டதால், G.O.181 அமலுக்கு வருவதற்கு முன்பே அவரது பணி நியமனம் நடைபெற்றுள்ளது.


- எனவே, நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அவரது ஆரம்ப பணி நியமனம் (Appointment) பாதுகாக்கப்படுகிறது.

- ஆனால் அவர் PG Assistant ஆக 03.10.2017 அன்று பெற்ற பதவி உயர்வு, G.O.181 அமலுக்கு வந்த பிறகு வழங்கப்பட்டது.


- எனவே, அந்த Promotion-ஐ அதே பாதுகாப்பின் கீழ் கொண்டு வர முடியாது என்றும், அந்தப் பதவி உயர்வு சட்டப்படி பாதுகாக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

- ஆகவே, அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தரப்பு கோரியது.


மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் 05.11.2025 அன்று TET தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழையும் மேல்முறையீட்டு வழக்கில் சமர்ப்பித்திருந்தார்.

இருப்பினும், மாண்புமிகு நீதிமன்றம், 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய TET தீர்ப்பின் அடிப்படையிலும், அரசாங்கத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின் அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் எனக் கூறி, ரிட் மனுவை ஏற்றுக்கொண்டு, அரசாங்கம் சட்ட விதிகளின்படி (in accordance with law) உரிய முடிவை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.


இதில் குறிப்பிடத்தக்க முக்கிய அம்சம்:


G.O.Ms.No.181 அமல்படுத்தப்பட்ட பிறகு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், G.O.181-க்கு முந்தைய நியமனத்தின் அடிப்படையில் தானாகவே சட்டப் பாதுகாப்பைப் பெறாது என்ற வாதத்தை அரசு தரப்பே நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.


எனவே, “நியமனம் பாதுகாக்கப்படுகிறது” என்பதும் “அதன் பின்னர் வழங்கப்பட்ட பதவி உயர்வும் பாதுகாக்கப்படுகிறது” என்பதும் இரு வேறு சட்ட நிலைப்பாடுகள் என்பதை இந்த வழக்கில் அரசு தரப்பின் வாதம் தெளிவுபடுத்துகிறது.

PROMOTION INVALID JUDGEMENT.pdf

👇👇👇👇

Download here

மக்கள்தொகை கணக்கெடுப்பு: பயிற்சிப் படி, தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம் :

 

census

மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கான பயிற்சிப் படி, மதிப்பூதியம் கிடைக்காததால் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

2027 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி, வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு என இரு பிரதான கட்டங்களாக நடத்தப்படும் என மத்திய அரசு சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சிப் படி, மதிப்பூதியம் வழங்குவது குறித்து 2025 டிச. 29- ஆம் தேதி அரசாணையும் வெளியிடப்பட்டது.


இதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வீட்டுப் பட்டியல் சேகரிக்கும் பணி கடந்த ஆக. 1-ஆம் தேதிமுதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கணக்கெடுப்புப் பணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில் 90 சதவீதத்துக்கும் மேல் அரசுப் பள்ளி ஆசிரியர்களே ஈடுபடுத்தப்பட்டனர். கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர் என இரு நிலைகளில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பயிற்சியும் வட்டார அளவில் நடத்தப்பட்டது. கடந்த ஜூலை 2-ஆவது வாரம் இந்தப் பயிற்சி 3 நாள்கள் நடத்தப்பட்டது.

இந்தப் பயிற்சிக்கான படியாக நபருக்கு நாளொன்றுக்கு ரூ.600 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் பயிற்சி செலவினமாக நபருக்கு தலா ரூ.200 வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதேபோல, வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு கணக்கெடுப்பாளர், மேற்பார்வையாளர்களுக்கு மதிப்பூதியமாக ரூ.9,000 வழங்கப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கான பணி நிறைவடைந்து இரு வாரங்களாகியும், பயிற்சிப் படி, கணக்கெடுப்பாளர்களுக்கான மதிப்பூதியம் இதுவரை வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. சில வட்டாரங்களில் பயிற்சிப் படியாக ரூ.1,200 வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கான பயிற்சிப் படியை வழங்க வேண்டும் என அனைத்து வட்டாரங்களிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, பயிற்சிப் படி வழங்கும் பணி முழுமையாக நிறுத்தப்பட்டது. பயிற்சிப் படி, மதிப்பூதியம் என மொத்தம் ரூ.10,200 கணக்கெடுப்பாளர்களுக்கும், மேற்பார்வையாளர்களுக்கும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாலும் உரிய பதில் கிடைக்காததால், கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆசிரியர் பயிற்சிகள்

பயிற்சிப் படி, மதிப்பூதியம் சுமார் ரூ.102 கோடி: இதுதொடர்பாக கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசியர்கள் கூறியதாவது: வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புக்கு, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்காமல், வெவ்வேறு ஊர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதனால், அனைத்து ஆசிரியர்களும் அலைக்கழிக்கப்பட்டதுடன், ஆசிரியைகள் மனரீதியான துன்புறுத்தலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியைப் போன்றே, தேர்தல் பணிகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வாக்குப் பதிவு நாளில் மின்னணு இயந்திரங்களை வாக்குச் சாவடியிலிருந்து எடுத்துச் செல்லும்போதே மதிப்பூதியம் வழங்கப்பட்டுவிடும். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்பு நிறைவடைந்து 2 வாரங்களாகியும் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.

ஒருவருக்கு ரூ.10,200 வீதம் கணக்கீடு செய்தால், சுமார் ஒரு லட்சம் பேருக்கு ரூ.102 கோடி வரை பயிற்சிப் படியும், மதிப்பூதியமும் வழங்கப்படாமல் உள்ளது. பயிற்சிப் படி, மதிப்பூதியத்தை உடனடியாக வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.

தாமதம் ஏன்? அதிகாரிகள் விளக்கம்

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கான ஊதியம் கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது:

மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான நிதியை தவணை முறையில் அந்தந்த மாநில வருவாய் நிர்வாகப் பிரிவு ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. அங்கிருந்து சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு நிதி அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு மாவட்ட வருவாய் பிரிவினர் அளிக்கும் தகவல் அடிப்படையில் பணியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குக்கே ஊதியமாக வழங்கப்படும் தொகை செலுத்தப்படும். ஆகவே, இடையில் யாரும் ஊதிய நிதியை நிறுத்த முடியாது.

பணியில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் சரியாக உள்ளதா எனப் பலமுறை சோதித்த பிறகே அவர்களுக்கான ஊதிய நிதி வழங்கப்படவுள்ளது. பணியாளர் விவர சேகரிப்புக்கு தாமதம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஊதியம் சரியாகவே வழங்கப்படுகிறது என்றனர்.

"மாவட்ட மக்கள்தொகை கையேடு தயாரிப்புப் பணி நவம்பரில் தொடங்கும்'

தமிழகத்தில் மாவட்ட மக்கள்தொகை கையேடுக்கான தகவல் சேகரிப்புப் பணி வரும் நவம்பரில் தொடங்கப்படும் என மாநில மக்கள்தொகை கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குநர் எம். சுந்தரேஷ்பாபு தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை சென்னையில் கூறியதாவது: 2027-ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியானது கடந்த ஜூலை 17-ஆம் தேதி தொடங்கியது.

மக்கள் தங்களது குடும்ப விவரங்களை அவர்களே மக்கள்தொகை கணக்கெடுப்பில் சுயமாகப் பதிவிடும் பணியைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டில் வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 1.50 லட்சம் பேர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதனடிப்படையில் வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. ஆனாலும், ராணுவத்தினர் குடியிருப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட வகை குடியிருப்புகளில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிகள் அத்துறைகளின் அதிகாரிகள் அனுமதி பெற்றே நடைபெறவுள்ளது. அதேபோல வீடுகள் கட்டி குடியிராமல் சாலையோரம் குடியிருப்போர் குடும்ப விவரங்களும் சேகரிக்கப்படவுள்ளன.

வீடுகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நிறைவுறும் நிலையில், வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027, பிப்ரவரியில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாக கிராமங்கள் வாரியாக, நகராட்சி, மாநகராட்சி வாரியாக மக்கள்தொகை, அவற்றின் அமைவிட வரைபடம், வீடுகள் விவரம், தெருக்கள் விவரம், அங்குள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், தெருக்கள், போக்குவரத்து சாலைகள், கடைகள், நிலங்கள் விவரம் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படவுள்ளன. அதற்கான அலுவலர்கள், களப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான பயிற்சி வரும் அக்டோபரில் தொடங்கப்படும். அதையடுத்து நவம்பரில் மாவட்ட மக்கள்தொகை கையேடு தயாரிப்புப் பணி தொடங்கும்.

கடந்த 2011-ஆம் ஆண்டில் மாவட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு கையேடுக்கான தகவல்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது கூடுதல் விவரங்களுடன் கையேடு தயாரிக்கும் வகையிலான தகவல்கள் கோரப்படவுள்ளன. ஏற்கெனவே உள்ள அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சேகரித்துள்ள தகவல்களுடன் கூடுதல் விவரங்கள் சேர்க்கப்படவுள்ளன. அப்பணியில் வருவாய் கிராமத்துக்கு ஒருவர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிக்கு நியமிக்கப்படுவோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification

📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்

TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்

TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests

Miss பண்ணாதீங்க