காமராஜரின் 2 நிமிட பேச்சு | 2 Minute Speech About Kamarajar in Tamil | தமிழில் காமராஜர் பற்றி 2 நிமிட பேச்சு
நாம் நிறைய தலைவர்களை பற்றி கேள்வி பட்டிருப்போம். அவர்கள் செய்த சாதனை மற்றும் தொன்றுகளை பற்றி அதிகமாக படித்து இருப்போம். இத்தகைய வகையில் எண்ணற்ற தலைவர்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட ஒரு சில தலைவர்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினை பிடித்து உள்ளார்கள். இவ்வாறு பார்க்கும் போதும் ஒரு தலைவருக்கும் சிறப்பு பெயர்கள் என்று இருக்கும். அவருடைய சொந்த பெயரை விட இத்தகைய சிறப்பு பெயர் தான் அனைவர் மனத்திலும் படிந்த ஒன்றாக இருக்கும். அந்த வகையில் கரமவீரர் என்றாலும், பெருந்தலைவர் என்றாலும் நாம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது காமராஜர் தான். அதுமட்டும் இல்லாமல் வரும் ஜூலை 15-ஆம் தேதி அன்று காமராஜர் பிறந்தநாள் வரவிருக்கிறது. ஆகவே அதனை சிறப்புக்கும் வகையில் இன்றைய பதிவில் காமராஜர் பற்றிய பேச்சினை வெறும் 2 நிமிடத்தில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மையாருக்கு மகனாக 1903-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15-ஆம் தேதி அன்று அனைவராலும் புகழந்து பேசப்படும் காமராஜர் பிறந்தார்.
இவரது பெற்றோர் இவருக்கு வைத்த காமாட்சி என்ற பெயரை பின்பு காலத்தினாலும் இவர் செய்த பல சாதனைகளும் காலப்போக்கில் காமராஜர் என்று மாற்றி வைத்து கொண்டார்.
காமராஜர் தந்தை இறந்து போன காரணத்தினால் ஏழ்மையான குடும்பத்தின் சூழ்நிலையினை கருதி பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார். ஆனால் இவர் செய்த சாதனைகளும், பணிகளும் இவருக்கு படிக்காத மேதை என்ற படத்தினை அளித்தது.
இதனை தொடர்ந்து 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு வரை கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்தார். இத்தகைய முதலமைச்சர் பணியில் இருக்கும் போது கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடம் மற்றும் ஏழை எளிய குழந்தைகளின் நலன் கருதி மதிய உணவு திட்டத்தினையும் அறிமுகம் செய்தார்.Biographies & Quotations
அதுமட்டும் இல்லாமல் தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் அணைகளையும் மக்களின் நலன் கருதி நடைமுறைக்கு கொண்டு வந்தார்.Time & Calendars
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி செய்த அத்தகைய காலம் ஆனது மக்களுக்கு எண்ணற்ற சாதகமான பலன்கள் கிடைத்ததால் அவை அனைத்தும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததோடு மட்டுமில்லாமல் காமராஜர் ஆட்சி செய்த காலம் தமிழகத்தின் பொற்காலம் என்று மக்கள் அனைவராலும் புகழப்பட்டது.
இவர் தான் முழுவதையும் மக்களுக்காக மட்டுமே அர்ப்பணிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடைசி வரை திருமணம் என்ற ஒன்றை செய்து கொள்ளாமலே வாழ்ந்தார். மேலும் இவர் கர்மவீரர், தென்னாட்டு காந்தி, பெருந்தலைவர் மற்றும் படிக்காத மேதை என்று அழைக்கப்பட்டார்.
1953-ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார். கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார். தன்னுடைய முதல் பணியாக குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு, மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.
17000-த்திற்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏறுபடுத்தினார்.
இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.
1975-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி அன்று அவரது 72-வது வயதில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார்.
2 Minute Speech About Kamarajar in Tamil |தமிழில் காமராஜர் பற்றி 2 நிமிட பேச்சு:
நாட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர்களில் காமராஜரும் ஒருவர். நாளை ஜூலை 15-ம் தேதி காமராஜரின் பிறந்த நாள். இவரது பிறந்த நாளை தான் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுகிறோம். இவர் தனது நாட்டிற்காக செயல்களை சொல்ல வேண்டுமென்றால் சொல்லி கொண்டே போகலாம். இந்த பதிவில் காமராஜரை பற்றிய பாடல் வரிகளை பற்றி காண்போம்.
உன்னை போல் தலைவர் உண்டோ பாடல் வரிகள்:
உன்னை போல் தலைவர் உண்டோ?
உழைப்பாலே உயர்ந்தவரே!!
அன்னை சிவகாமி பெற்ற
ஆசியாவின் திருவிளக்கே!!!
அன்பிலே ஆழ்ந்த நிலை
ஆற்றலிலே இமயமலை!!
ஆதரவும் நிலைபெறவே ஆலமரம் போன்றவரே
எத்தனையோ தலைவர் உண்டு
இருந்தாலும் உமக்கு இணையோ
ஏழைக்கு என பிறந்தவரே
“எங்கள் குல நாயகரே”
நீரின்றி உலகு இல்லை
நீரின்றி நம் குலம் இல்லை
ஏழைக்கு என பிறந்தவரே
உத்தமரே “காமராஜா”
மக்கள் சுகம் வேண்டியால்லோ
மனம் முடிக்க மறந்தவரே
உன் புகழை பார்த்தாலே உனக்கு நிகர்
ஒரு புலவன் இல்லை
எழுத்தாலே வடித்து எடுக்க ஏழைகளும் போதவில்லை
சொத்து சுகம் உமக்கு இல்லை
சொந்த வீடும் உமக்கு இல்லை மக்கள் மனசே வீடு என்று குடி புகுந்த எம் தலைவா…
இன்று நாடார்களின் குலதெய்வமாய் ஆனாய்
எங்கள் ஐயா
வாழ்க நாடார் குலம்!!!!!!!!
வளர்க நாடார் குலம் !!!!
குழந்தை பாட்டு:
அன்பு உள்ளம் கொண்டவர்
அருமை காமராஜராம்
எல்லாரும் படிக்கவே
ஏற்ற வழி செய்தவர்.
பள்ளி செல்லும் பிள்ளைகள்
கால் வலிக்க நடக்காமல்
பக்கத்திலே படித்திட
பள்ளிகளைத் திறந்தவர்.
படிக்கும் நல்ல பிள்ளைக்கு
மதிய உணவு தந்தவர்
ஒரே நிறத்தில் சீருடை
ஒன்றாய் அணியச் சொன்னவர்.
காந்தி வழி நின்றவர்
உத்தமராம் காமராஜர்
நினைவை என்றும் போற்றுவோம்
பிள்ளைகளே வாருங்கள்!
காமராஜர் பாடல் வரிகள்:
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்
இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பள்ளி அறியாத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானம்மா
அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானம்மா
மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானம்மா
இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன் தானம்மா
வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார்
பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே
நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானம்மா
தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானம்மா
ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானம்மா
அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து விளக்கேற்றி வைத்தானம்மா
தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பயிற்சி அளிக்க, ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீட்டில் ஆசிரியர்களுக்கு முதல்முறையாகப் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன
பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரின் பத்திரிகைச் செய்தி!
குறிப்பு: அனைத்து மாவட்டத்திற்கும் பொருந்தும்....
பிறப்புப் பதிவு - குழந்தையின் முதல் உரிமை. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ வயது குறித்த ஆதாரம், குடியுரிமைக்கான ஆதாரம் ஆகும். குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றுதான் முழுமை பெற்ற சான்றிதழ் ஆகும்.
குழந்தையை பள்ளியில் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெற. ஓட்டுநர் உரிமம்பெற, அரசுப் பணிகளில் சேர. கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்க குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச்சான்று இன்றியமையாத ஆவணமாகும்.
ஒரு குழந்தையின் பிறப்பு பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருந்தால் அப்பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாத காலத்திற்குள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளரிடம் சமர்ப்பித்து குழந்தையின் பெயரினை தாமத கட்டணமின்றி பதிவுசெய்து கொள்ளலாம்.
12 மாதங்களுக்கு பின் குழந்தையின் பெயரினை 15 வருடத்திற்குள் காலதாமத கட்டணம் ரூ.200 செலுத்தி, உரிய அலுவலரின் அனுமதி பெற்று பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு 15 வருடத்திற்கு மேற்பட்ட மற்றும் 2011-ஆம் ஆண்டுக்கு முன்னர் எப்போது பிறந்திருந்தாலும் குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பிறப்புகளுக்கு வரும் 26.09.2026 வரை பெயர் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.குழந்தையின் பெயரினை இதுவரை பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யாதோர் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து குழந்தையின் பெயரினை பதிவுசெய்து கொள்ளலாம்.பிறப்புச் சான்றில் குழந்தையின் பெயரினை ஒருமுறை பதிவு செய்த பின்னர் எக்காரணம் கொண்டும் பெயரினை மாற்றம் செய்ய இயலாது. எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 26.09.2026-க்குள் குழந்தையின் பெயரினை பிறப்புச் சான்றில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட பிறப்பு (ம) இறப்பு பதிவாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பராஜகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
StartupTN CEO Recruitment 2026: தமிழ்நாடு அரசின் உயர்நிலை பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசின் Tamil Nadu Startup and Innovation Mission – StartupTN அமைப்பில் காலியாக உள்ள Chief Executive Officer – CEO பதவியை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Startup மற்றும் Innovation துறையில் நீண்டகால தலைமை அனுபவம் கொண்ட தகுதியான இந்தியர்களிடமிருந்து Online விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்23 ஜூலை 2026 மாலை 5 மணிஆகும்.
StartupTN CEO Recruitment 2026 – Quick Info
விவரம்
தகவல்
நிறுவனம்
Tamil Nadu Startup and Innovation Mission
பிராண்ட் பெயர்
StartupTN
பதவியின் பெயர்
Chief Executive Officer – CEO
காலிப்பணியிடம்
1
பணியிடம்
சென்னை, தமிழ்நாடு
வேலை வகை
ஒப்பந்த அடிப்படையிலான பணி
ஒப்பந்த காலம்
3 ஆண்டுகள்
சம்பளம்
அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குட்பட்டது
விண்ணப்பக் கட்டணம்
அறிவிப்பின்படி கட்டணம் இல்லை
விண்ணப்ப முறை
Online
கடைசி நாள்
23 ஜூலை 2026
கடைசி நேரம்
மாலை 5 மணி – IST
அதிகாரப்பூர்வ இணையதளம்
startuptn.in/careers
StartupTN என்றால் என்ன?
கல்வித் தகுதி
StartupTN CEO பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் Bachelor’s Degree பெற்றிருக்க வேண்டும்.
Management அல்லது Business Administration பிரிவில் Postgraduate Degree பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படலாம்.
விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ Detailed Notification-இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி விவரங்களை முழுமையாகச் சரிபார்க்க வேண்டும்.
தேவையான பணி அனுபவம்
இந்தப் பதவி சாதாரண ஆரம்பநிலை வேலைவாய்ப்பு அல்ல. Startup, Innovation, Business Leadership மற்றும் முதலீட்டு சூழல் தொடர்பாக அதிக அனுபவம் கொண்டவர்களுக்கான உயர்நிலை நிர்வாகப் பதவியாகும்.
குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் Senior Leadership அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Startup அல்லது Innovation Ecosystem அமைப்பில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் Senior Role அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Venture Funding, Seed Funding, Mentorship, Incubation அல்லது Acceleration போன்ற பிரிவுகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Venture Capital நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி அமைப்புகள் மற்றும் சர்வதேச Innovation அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவராக இருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு
StartupTN CEO பணிக்கு விண்ணப்பிக்கும் நபரின் வயது 55 ஆண்டுகளுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்று வெளியாகியுள்ள விரிவான வேலைவாய்ப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயது கணக்கிடப்படும் தேதி மற்றும் வயது தளர்வு தொடர்பான விதிமுறைகளை அதிகாரப்பூர்வ Notification மூலம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
யாருக்கு முன்னுரிமை கிடைக்கலாம்?
பின்வரும் அனுபவங்களைக் கொண்டவர்கள் இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர்களாகக் கருதப்படலாம்:
Startup Mentor ஆகப் பணியாற்றியவர்கள்
தொழில்முனைவோர் அல்லது Startup Founder
Startup Investor அல்லது Venture Capital அனுபவம் கொண்டவர்கள்
Startup Promotion அமைப்பில் CEO அல்லது Senior Executive ஆக இருந்தவர்கள்
Incubation மற்றும் Acceleration Program-களை வழிநடத்தியவர்கள்
அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்ட தலைமை அனுபவம் கொண்டவர்கள்
மொழித் திறன்
விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்தில் சிறந்த பேச்சு மற்றும் எழுத்துத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், தமிழில் பணியாற்றக்கூடிய அளவிலான Working Knowledge இருப்பதும் இந்தப் பதவிக்கு தேவையான முக்கிய தகுதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
CEO பதவியின் முக்கியப் பொறுப்புகள்
தேர்வு செய்யப்படும் Chief Executive Officer, தமிழ்நாட்டின் Startup மற்றும் Innovation Ecosystem-ஐ வழிநடத்தும் முக்கியப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
முக்கியப் பணிகள்:
தமிழ்நாட்டிற்கான Startup வளர்ச்சி உத்திகளை உருவாக்குதல்
Incubation மற்றும் Acceleration திட்டங்களை வலுப்படுத்துதல்
முதலீட்டாளர்கள் மற்றும் Startup நிறுவனங்களை இணைத்தல்
Venture Capital நிறுவனங்களுடன் கூட்டாண்மை உருவாக்குதல்
கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்
சர்வதேச Innovation அமைப்புகளுடன் தொடர்புகளை உருவாக்குதல்
புதிய Startup Support Program-களை வடிவமைத்துச் செயல்படுத்துதல்
StartupTN Branding, Outreach மற்றும் Social Media நடவடிக்கைகளை வழிநடத்துதல்
Startup நிறுவனங்களுக்கு சட்ட மற்றும் நிதி ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல்
இந்தப் பதவி தமிழ்நாட்டின் Startup வளர்ச்சித் திட்டங்களை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னெடுத்துச் செல்லும் முக்கியத் தலைமைப் பொறுப்பாகும்.
சம்பள விவரம்
StartupTN CEO பதவிக்கான நிர்ணயிக்கப்பட்ட சம்பளத் தொகை வேலைவாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பதாரரின்:
முந்தைய பணி அனுபவம்
Startup Ecosystem Exposure
தலைமைத்துவத் திறன்
நிர்வாக அனுபவம்
தொழில்முறை தகுதிகள்
ஆகியவற்றின் அடிப்படையில் சம்பளம் பேச்சுவார்த்தை மூலம் நிர்ணயிக்கப்படலாம்.
பணி ஒப்பந்த காலம்
இப்பதவி நிரந்தர அரசுப் பணி அல்ல. ஆரம்பத்தில் 3 ஆண்டுகள் Fixed-Term Contract அடிப்படையில் நியமனம் வழங்கப்படலாம்.
பணியாளரின் Performance அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படலாம். அமைப்பின் தேவை மற்றும் பணித்திறன் அடிப்படையில் ஒப்பந்தக் காலம் மேலும் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் Leadership Profile அடிப்படையில் தகுதியானவர்கள் Shortlist செய்யப்படலாம்.
அதன்பிறகு:
விண்ணப்பங்கள் பரிசீலனை
தகுதியானவர்கள் Shortlisting
Interview அல்லது நேர்முக மதிப்பீடு
ஆவணங்கள் சரிபார்ப்பு
இறுதித் தேர்வு மற்றும் நியமனம்
போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படலாம்.
தேர்வின்போது விண்ணப்பதாரர்கள் அசல் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
Online விண்ணப்பம் செய்வதற்கு முன்பு கீழ்காணும் ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ளலாம்:
Updated Resume அல்லது Curriculum Vitae
சமீபத்திய Passport Size Photo
பிறந்த தேதி சான்று
Bachelor’s Degree Certificate
Postgraduate Degree Certificate, பொருந்தினால்
அனைத்து பணி அனுபவச் சான்றிதழ்கள்
தற்போதைய நிறுவனத்தின் Appointment அல்லது Employment விவரங்கள்
Startup மற்றும் Innovation துறை அனுபவச் சான்றுகள்
ஆதார் அல்லது அடையாளச் சான்று
கையொப்பம்
தேவையான Supporting Documents
அதிகாரப்பூர்வ விண்ணப்பப் பக்கத்தில் கோரப்படும் File Format மற்றும் File Size அளவுகளைப் பின்பற்றி ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
StartupTN CEO Recruitment 2026 விண்ணப்பிப்பது எப்படி?
Step 1
முதலில் StartupTN அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள Careers பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
Step 2
Chief Executive Officer பணிக்கான Detailed Notification-ஐ முழுமையாகப் படிக்க வேண்டும்.
Step 3
கல்வித் தகுதி, வயது மற்றும் அனுபவ நிபந்தனைகளைப் பூர்த்தி செய்கிறீர்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Step 4
Online Application இணைப்பைத் திறந்து பெயர், தொடர்பு விவரம், கல்வி மற்றும் பணி அனுபவங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
Step 5
Resume, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் அனுபவச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
Step 6
பதிவு செய்த தகவல்களை மீண்டும் சரிபார்த்து விண்ணப்பத்தை Final Submit செய்ய வேண்டும்.
Step 7
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் நகல் அல்லது Acknowledgement-ஐ எதிர்காலப் பயன்பாட்டிற்காகச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்
தகுதியான விண்ணப்பதாரர்கள் 23 ஜூலை 2026 மாலை 5 மணிக்குள் Online விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நேரத்தில் இணையதளத்தில் Server பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காலக்கெடு நீட்டிப்பு வெளியிடப்படாத வரை, மேற்கண்ட நேரத்திற்குப் பிறகு விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் இருக்கலாம்.
இந்த வேலைவாய்ப்பு ஏன் முக்கியமானது?
தமிழ்நாட்டின் Startup Ecosystem வளர்ச்சியை நேரடியாக வழிநடத்தும் தலைமைப் பதவி என்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
Startup Founder, Investor, Mentor மற்றும் Innovation Ecosystem துறைகளில் நீண்டகால அனுபவம் பெற்றவர்களுக்கு மாநில அளவிலான முக்கிய அமைப்பை வழிநடத்துவதற்கான வாய்ப்பாக இது அமையும்.
இது பொதுவான பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு அல்ல. அதிக Senior Management மற்றும் Startup Ecosystem அனுபவம் பெற்றவர்களுக்கான சிறப்பு நியமனம் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முக்கிய அறிவுறுத்தல்
சமூக ஊடகச் செய்திகளை மட்டும் நம்பி விண்ணப்பிக்க வேண்டாம். கல்வித் தகுதி, அனுபவம், ஒப்பந்த விதிமுறைகள், சம்பளம் மற்றும் தேவையான ஆவணங்கள் தொடர்பான இறுதியான தகவல்களுக்கு StartupTN அதிகாரப்பூர்வ Detailed Notification-ஐ கட்டாயம் படிக்கவும்.
Official Recruitment Announcement: StartupTN அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பதிவுகளிலும் CEO பதவிக்கான விண்ணப்பங்கள் 23 ஜூலை 2026 மாலை 5 மணி வரை பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
Startup மற்றும் Innovation துறையில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தலைமை அனுபவம் பெற்றவர்களுக்கு StartupTN Chief Executive Officer Recruitment 2026 ஒரு முக்கியமான வாய்ப்பாகும்.
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ Notification-ஐ முழுமையாகப் படித்து, தேவையான ஆவணங்களுடன் 23 ஜூலை 2026 மாலை 5 மணிக்குள் Online விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.