கணக்கெடுப்பு!
பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்
Education News, Employment News in tamil
கணக்கெடுப்பு!
பள்ளிகளில் காலி பணியிட ஆசிரியர்கள் விபரங்கள்
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த ஏற்பாடுகள்
ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Central Government Research Centre Apprentice வாய்ப்பு! CSIR-Structural Engineering Research Centre சார்பில் Trade Apprentice மற்றும் Technician Apprentice பணிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SERC Chennai Recruitment 2026 மூலம் மொத்தம் 29 Apprentice காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு online application இல்லாமல், eligible candidates நேரடியாக Walk-in Interview-க்கு செல்லலாம். தேர்வு செய்யப்படும் candidates-க்கு மாதம் ₹10,500 முதல் ₹12,000 வரை stipend வழங்கப்படும்.
கல்வித் தகுதி
Trade Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட trade-ல் ITI முடித்திருக்க வேண்டும்.
Technician Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் candidates, சம்பந்தப்பட்ட துறையில் Diploma முடித்திருக்க வேண்டும்.
Apprentice training வாய்ப்பை தேடும் freshers மற்றும் technical qualification கொண்ட candidates-க்கு இது நல்ல opportunity ஆக இருக்கும்.
இந்த recruitment-க்கு candidates Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேவையான ஆவணங்கள், educational certificates, ID proof, application form போன்றவற்றுடன் candidates நேரடியாக interview venue-க்கு செல்ல வேண்டும்.
இந்த SERC Chennai Apprentice recruitment-க்கு Application Fee இல்லை. Eligible candidates free-ஆ Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.
Walk-in Interview Date: 20.05.2026
Candidates interview date அன்று நேரத்திற்கு முன்பாக venue-க்கு சென்று registration/document verification process-ல் கலந்து கொள்ள வேண்டும்.
CSIR-Structural Engineering Research Centre,
Taramani,
Chennai – 600113.
முதலில் candidates official notification-ஐ download செய்து முழுமையாக படிக்க வேண்டும். அதன் பிறகு application form-ஐ print எடுத்து, தேவையான details-ஐ சரியாக fill செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட application form, original certificates, self-attested copies, ID proof மற்றும் notification-ல் குறிப்பிடப்பட்ட documents உடன் 20.05.2026 அன்று Walk-in Interview venue-க்கு நேரில் செல்ல வேண்டும்.
Official Website: https://www.serc.res.in/
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
👉 இந்த வேலைவாய்ப்பிற்கு Apply செய்ய, 7598 492 290 என்ற எண்ணிற்கு இந்த லிங்கை அனுப்பி “Apply” என்று WhatsApp செய்யவும்.
📲 (Online Apply Option இருக்கும் வேலைவாய்ப்புகள் மட்டும் apply செய்து தரப்படும்)
SERC Chennai Recruitment 2026 என்பது ITI மற்றும் Diploma படித்த candidates-க்கு Chennai-ல் Apprentice training பெற நல்ல வாய்ப்பு. மொத்தம் 29 காலியிடங்கள் உள்ளதால், தகுதியான candidates official notification-ஐ சரிபார்த்து 20.05.2026 அன்று Walk-in Interview-ல் கலந்து கொள்ளலாம்.
டேட்டா சயின்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், ஏரோநாட்டிக்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் 4 ஆண்டு ஆன்லைன் பி.எஸ். பட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் உயர்தரக் கல்வி அளிக்கும் வகையில் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ், எலெக்ட்ரானிக் சிஸ்டம், மேனேஜ்மென்ட் அண்ட் டேட்டா சயின்ஸ், ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜி ஆகிய 4 விதமான பி.எஸ். பட்டப் படிப்புகளை சென்னை ஐஐடி ஆன்லைனில் வழங்கி வருகிறது.
இவை 4 ஆண்டுக்கால படிப்புகள். மாணவர்கள் இதை தனி பட்டப் படிப்பாகவோ, வழக்கமான கல்லூரி பட்டப் படிப்புடன் சேர்ந்தோ படிக்கலாம். இதற்கான வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடத்தப்படும். நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நேரடி தேர்வுகள் நடத்தப்படும்.
மாணவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப படிப்பைத் தொடரலாம். அவர்களது படிப்புக் காலத்துக்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமா, பட்டம், பி.எஸ். பட்டம் என வழங்கப்படும். இப்படிப்புகளில் சேர, பிளஸ்-2 தேர்ச்சி போதும். வயது வரம்பு கிடையாது.
ஜேஇஇ நுழைவுத் தேர்வு தேர்ச்சியும் அவசியம் இல்லை. தகுதிகாண் நடைமுறை மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இதில் சேர விரும்புவோர் https://study.iitm.ac.in என்ற இணையதளம் வாயிலாக மே 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறியலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
CTET 2026 September - notification
PUBLIC NOTICE
The Central Board of Secondary Education will conduct the 22nd Edition of Central Teacher Eligibility Test (CTET) on 06th September, 2026 (Sunday) (Paper- I and Paper-II). The online application process will start from 11.05.2026. The last date for submitting the online application is 10.06.2026 (11:59 PM). The test will be conducted in twenty seven languages in 132 cities all over the country.
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சென்னையில் உள்ள அரசு திரைப்படக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது.
இக்கல்லூரியில் ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதுதல், எடிட்டிங், அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய 6 பாடங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (பேச்சிலர் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்) வழங்கப்படுகிறது.
இப்படிப்புகளில் வரும் கல்வி ஆண்டில் (2026-27) சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மாணவர்கள் இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் கையேட்டை www.filminstitute.tn.gov.in என்ற இணையதளத்தில் மே 12 (இன்று) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேற்கண்ட பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்-2 முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்நிலைபள்ளிகளில் காலியாக உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்கள் சார்ந்த விவரம் கோருதல் - சாரபு.
கண்காணிப்பாளர் பதவியிலிருந்து DEO / JD -ன் நேர்முக உதவியாளர் பதவி உயர்வுக்கு உத்தேச பெயர்ப் பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு பொதுப்பணி - மாவட்டக் கல்வி அலுவலரின் / இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பதவிக்கு 15.03.2026 அன்றுள்ளவாறு கண்காணிப்பாளர்களின் உத்தேச பெயர்ப்பட்டியல் வெளியிடுதல் - சேர்க்கை. நீக்கம், திருத்தம் கோருதல் -சார்ந்து.
DSE - PA Panel Tentative - Proceeding.pdf
👇👇👇👇
அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை அனுப்பக் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் பிரிவு) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு, நகராட்சி, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 31.5.2025 நிலவரப்படி, அனைத்துப் பாட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்களை மே 20-க்குள் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
அவ்வாறு காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025-ல் ஆசிரியர் இல்லாமல் உபரி எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது.
அதேபோல், கூடுதல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், காலிப்பணியிட விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலியிடங்கள் என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் ஐஎப்எச்ஆர்எம்-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்
NTA மற்றும் மத்திய அரசு இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் மீண்டும் NEET தேர்வு நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
📝 மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்
1️⃣ NEET 2026 தேர்வு ரத்து
📌 3 மே 2026 அன்று நடந்த NEET Exam தற்போது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
2️⃣ மீண்டும் தேர்வு நடைபெறும்
📌 Re-NEET (மீண்டும் NEET தேர்வு) நடைபெறும்.
📌 புதிய தேர்வு தேதி பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
3️⃣ புதிய Registration தேவையில்லை
✅ ஏற்கனவே பதிவு செய்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.
✅ பழைய Registration Data பயன்படுத்தப்படும்.
4️⃣ கூடுதல் Exam Fee இல்லை
💰 மீண்டும் தேர்வு எழுத எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என Notice-ல் கூறப்பட்டுள்ளது.
5️⃣ புதிய Hall Ticket வழங்கப்படும்
🎫 புதிய Exam Date அறிவித்த பிறகு புதிய Admit Card / Hall Ticket வெளியிடப்படும்.
6️⃣ CBI விசாரணை
🔍 முறைகேடு குறித்த புகார்களை CBI விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
🌟 மாணவர்களுக்கு முக்கிய ஆலோசனை
❌ பயப்பட வேண்டாம்
❌ Social Media Rumours நம்ப வேண்டாம்
✅ அதிகாரப்பூர்வ Website மட்டும் பார்க்கவும்:
NEET Official Website
NTA Official Website
🎯 இப்போது மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?
✔️ மீண்டும் Revision தொடங்குங்கள்
✔️ Biology NCERT கவனமாக படிக்கவும்
✔️ Mock Tests தொடரவும்
✔️ மனஅழுத்தம் கொள்ள வேண்டாம்
👉 இந்த கூடுதல் நேரம் உங்கள் Rank-ஐ உயர்த்த ஒரு நல்ல வாய்ப்பாக மாறலாம்.
🌸 மாணவர்களே!
ஒரு தேர்வு தள்ளிப்போனது உங்கள் கனவை தள்ளிப்போடாது.
அமைதியாக தயாராகுங்கள். வெற்றி உங்களுக்கே! 💪🎯
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
நீட் தேர்வு ரத்து
மே 3ஆம் தேதி நடைபெற்ற எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
23 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரையடுத்து தேசிய தேர்வு முகமை நடவடிக்கை
ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த தேசிய தேர்வுகள் முகமை பரிந்துரை
மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தகவல்
தமிழகத்தில், மாநில கல்வி கொள்கையை பின்பற்றி, 1, 2, 3ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மத்திய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில கல்விக் கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டது.
அக்குழுவின் பரிந்துரையின்படி, மாநில கல்விக் கொள் கை கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. அதன்படி, எட்டாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க, கல்வி மற்றும் நிர்வாக குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள், மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமையை குறைத்து, ஆளுமைத்திறன், வாழ்க்கை திறன் மற்றும் நேர்மறை சிந்தனையை வளர்க்கும் வகையில், பாடத்திட்டங்களை மாற்ற கருத்துருக்களை வழங்கின. அவை, '
tnschools.gov.in' இணையதளத்தில் வெளியிடப்பட்டு, கல்வியாளர்கள், பெற்றோர், பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
அதன் அடிப் படையில், இந்த கல்வியாண்டில், ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை மாற்றும் பணி தொடங்கியது. அடுத்து படிப்படியாக, ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றம் தொடர உள்ளது. தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: வாழ்க்கை திறன், முதலுதவி, பாதுகாப்பு முறைகள், சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கி, புதிய பாடத்திட்டங்களை, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது.
இந்த புத்தகங்களில், பழையபடி மாணவர்களின் மனப்பாடம் செய்யும் சுமை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, தேவையான புத்தகங்களை, பாடநுால் கழகம் அச்சிட்டு தயாராக வைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
2 மாதங்களுக்கு ஒருமுறை தங்களது வீட்டு மின் பயன்பாட்டை 500 யூனிட்டுகளுக்குள் வைத்திருக்கும் நுகர்வோருக்கு மட்டுமே மொத்தம் 200 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒரு நுகர்வோர் 2 மாதங்களில் 500 யூனிட்டிற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தினால், அவர்களுக்குப் புதிய சலுகை பொருந்தாது. அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள கட்டண முறையே தொடரும்; அதாவது ஏற்கனவே அமலில் உள்ள 100 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமே அவர்களுக்குக் கிடைக்கும். 10.05.2026
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
100% தேர்ச்சி வழங்கிய பள்ளிகள், தலைமையாசிரியர் பெயர் மற்றும் தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
DSE - 100% Result Circular - Download here
இன்று வெளியான செய்திகள் | Latest Education News in Tamil Today
இன்று வெளியான வேலைவாய்ப்பு செய்திகள் | Daily Job News in Tamil| Latest Notification
📢 தினசரி வேலைவாய்ப்பு செய்திகள் WhatsApp-ல் பெற இங்கே Join செய்யுங்கள்
TN Kalvi News WhatsApp Group – கல்விச் செய்திகள் உடனுக்குடன்
TNPSC Study WhatsApp Group – Free Materials & Daily Tests
Miss பண்ணாதீங்க
2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான துணைத் தேர்வு (Supplementary Exam) அட்டவணைகள் வெளியீடு: 11, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள்