வாக்காளர் பட்டியலில் இடம்பெற... எஸ்.ஐ.ஆர். படிவத்தை நிரப்புவது எப்படி?

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தேர்தல் ஆணையம் வழங்கும் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் நவ. 4 முதல் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தாலும் இனி வரும் தேர்தல்களில் வாக்களிக்கவும் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இடம்பெறவும் நீங்கள் இந்த படிவத்தைப் பெற்று கண்டிப்பாக நிரப்பித் தர வேண்டும்.ஏனெனில் தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்வது சிறப்பு சுருக்க திருத்தம்(எஸ்.எஸ்.ஆர்.) இதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்களை மேற்கொள்வது நடக்கும்.

ஆனால் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை 'சிறப்பு தீவிர திருத்தத்தை(எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளும். முன்னதாக கடந்த 2002 ஆம் ஆண்டு சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அறிவித்து அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இது வாக்காளர் பட்டியலை முழுவதுமாக ஒருமுறை சரிபார்ப்பதாகும்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணைய ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வாக்குச்சாவடி அலுவலர்களாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் படிவத்தை வீடுவீடாகச் சென்று வழங்குகின்றனர்.

வருகிற டிச. 4 ஆம் தேதிக்குள் நீங்கள் இந்த படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும்.

dinamani%2F2025-11-06%2F0fqs33fl%2Fform-1

படிவத்தில் என்ன இருக்கிறது? நிரப்புவது எப்படி?

தற்போது இருக்கும் வாக்காளர் பட்டியலின்படி வாக்காளரின் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண், பாகம் எண், வாக்குச்சாவடி பெயர் மற்றும் அமைவிடம், சட்டமன்றத் தொகுதியின் பெயர், க்யூஆர் கோடு, தற்போதைய புகைப்படம் ஆகியன ஏற்கெனவே அச்சிடப்பட்டிருக்கும். தற்போதைய புகைப்படத்திற்கு அருகில் புதிய புகைப்படத்திற்கான இடம் இருக்கும். அதில் உங்களுடைய இப்போதைய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இதன் பிறகு கீழே கேட்கப்பட்டுள்ள விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.

வாக்காளரின் பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். பின்னர் தந்தை//பாதுகாவலர் பெயர், தந்தை/பாதுகாவலர் வாக்காளர் அடையாள அட்டை எண், தாய் பெயர், தாயாரின் வாக்காளர் அடையாள அட்டை எண், கணவன்/மனைவி பெயர் மற்றும் அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இதற்கு கீழே மேலும் ஒரு விவரம் கேட்கப்பட்டிருக்கும்.

2002ல் நீங்கள் வாக்களித்திருந்தால் முந்தைய(2002) சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். உங்களுடைய பெயர், அடையாள அட்டை எண், மாநிலம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

ஒருவேளை நீங்கள் 2002ல் வாக்களிக்கவில்லை என்றால் 2002ல் வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களுடைய தாய் அல்லது தந்தையின் விவரங்களைக் குறிப்பிட வேண்டும். அதாவது தந்தையின் பெயர், அவரின் வாக்காளர் அடையாள அட்டை எண், சட்டமன்றத் தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும்.

இறுதியாக வாக்காளரின் கையொப்பம் என்ற இடத்தில் நீங்கள் கையொப்பம் இட வேண்டும். உங்கள் தொகுதி வாக்குச்சாவடி அலுவலரும் கையெழுத்திடுவார்.

2002 சிறப்பு தீவிர திருத்த பட்டியலில் உங்களுடைய பெயர், தாய் அல்லது தந்தையின் பெயர் இருந்தால் எந்த கூடுதல் ஆவணங்களும் தேவையில்லை. ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் வாக்குச்சாவடி அலுவலர் உங்களுடைய அடையாள ஆவணங்களைக் கேட்கலாம்.

அந்த வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயரும் இல்லை, உங்களுடைய பெற்றோரின் பெயரும் இல்லை என்றால் உங்களுடைய படிவம், அடையாள ஆவணங்களின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். அந்த சமயத்தில் அடையாள ஆவணங்களை கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.

படிவத்தில் வெள்ளை நிற பின்னணி கொண்ட புதிய புகைப்படத்தை ஒட்ட வேண்டும்.

இரு பிரதிகள் வழங்கப்படும் நிலையில் அதனை பூர்த்தி செய்து ஒன்றை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். மற்றொரு பிரதியில் அவரிடம் ஒப்புதல் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும். படிவத்தை ஜெராக்ஸ் எடுத்து வழங்க முடியாது.

அதனால் திருத்தங்கள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். நிரப்பியவுடன் அதை ஒரு பிரதி எடுத்து வைத்துக்கொள்ளலாம் அல்லது ஆவணமாக ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு நிரப்புவதற்கு கடினமாக இருந்தால் அலுவலரிடம் அல்லது அரசியல் கட்சிகளின் சார்பில் உள்ள 2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியைப் பெறலாம். தவறுகள் இன்றி படிவத்தை நிரப்ப வேண்டும்.

படிவம் பூர்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின், படிவத்தில் குறிப்பிட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலரின் கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். படிவத்தில் வாக்குச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் தொடர்பு எண் இருக்கும்.

டிச. 4 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வழங்க வேண்டும். படிவத்துடன் முதலில் எந்த ஆவணங்களையும் வழங்கத் தேவையில்லை எனவும் உங்கள் விண்ணப்பங்களில் சந்தேகங்கள் இருந்தால் தேவைப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலர் உங்களிடம் ஆவணங்களைக் கேட்பார்.

2002 வாக்காளர் பட்டியலில் சரிபார்ப்பது எப்படி?

உங்கள் தொகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர் 2002 சிறப்பு தீவிர திருத்த வாக்காளர் பட்டியலை வைத்திருப்பார். அவரிடம் உங்களுடைய தொகுதி, பாகம் எண் உள்ளிட்ட விவரங்களைக் கூறி கேட்கலாம். https://voters.eci.gov.in/ அல்லது https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்கள் விவரங்களை உள்ளிட்டு கண்டறியலாம்.

கட்சி அங்கீகரிக்கப்பட்ட '2 ஆம் நிலை வாக்குச்சாவடி அலுவலர்'

தேர்தல் ஆணையத்தால் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவார். அவர்களுக்கு உதவியாகவோ அல்லது ஒவ்வொரு தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு அந்தந்த கட்சிகள் ஒரு வாக்குச்சாவடி அலுவலரைத் தயார் செய்து நியமிக்கும்.

அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி வழங்கி நியமித்துள்ளது.

எனவே படிவம் தொடர்பான சந்தேகங்களுக்கு 2002 பட்டியலில் பெயர் இருக்கிறதா என தெரிந்துகொள்ள உங்கள் தொகுதியில் உள்ள கட்சி சார்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களைத் தொடர்புகொள்ளலாம். அவர்கள் உங்களுக்கு படிவத்தை நிரப்பியும் தருவார்கள்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

UGC NET Application

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

UGC NET Application 

👉Application Start Date -October 7, 2025

👉 Last Date to Apply -November 7, 2025

👉Application Correction Window - November 10–12, 2025

👉Exam Dates - December 31, 2025 – January 7, 2026

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் எண்ணிக்கையை குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை

1. பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆவதைக் குறைக்க பள்ளிக்கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

2. இந்த நடவடிக்கை வரும் தேர்வில் (2026 மார்ச்) நிச்சயம் பிரதிபலிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

3. பிளஸ்-2 பொதுத்தேர்வு உயர்கல்விக்கான நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது.

4. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

5. தேர்வு எழுத வராமல் 'ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் எண்ணிக்கை பள்ளிக்கல்வித்துறைக்கு தொடர் தலைவலியை அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு புள்ளிவிவரங்கள்:

1. 2022-23 கல்வியாண்டில் (2024 மார்ச் தேர்வு) 8.51 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தை 50,674 பேர் எழுதவில்லை.

2. இந்த அதிக ஆப்சென்ட்டுக்கு, கொரோனா காலத்தில் யாரையும் நீக்காமல், ஒரு நாள் பள்ளிக்கு வந்திருந்தாலும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டதே காரணம் என்று கல்வித்துறை தெரிவித்தது.

3. 2023-24 கல்வியாண்டில் 7.80 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தில் 12,364 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 12,696 பேரும் ஆப்சென்ட் ஆகினர்.

4. 2024-25 கல்வியாண்டில் 8.02 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், மொழிப் பாடத்தை 11,430 பேர் எழுதவில்லை.

5. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரத்துக்கும் குறையாமல் மாணவர்கள் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆவது தொடர் கதையாகி வருகிறது.

2025-26 கல்வியாண்டுக்கான (2026 மார்ச்) நடவடிக்கைகள்:

1. 8.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

2. முறையாகப் பள்ளிக்கு வந்த மாணவர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஹால் டிக்கெட் வெளியிடுவது.

3. ஆசிரியர்கள், ஆலோசகர்களைக் கொண்டு பொதுத்தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கி, தைரியமாக எதிர்கொள்ள அறிவுரை வழங்குவது.

4. தேர்ச்சி பெற முடியாதோ என நினைக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்குவது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் இடம் & நாட்கள்!!!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

 மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் இடம் & நாட்கள்!!!

IMG-20251107-WA0013

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Special TET பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் - SCERT Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251107_174350_wm

பள்ளிக்கல்வி - அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் ( SLP ) தீர்ப்பாணை பெறப்பட்டது. தற்போது பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் இணையவழி பயிற்சி கட்டகம் உருவாக்குதல் பணிமனை 07.11.2025 முதல் 14.11.2025 முடிய மேற்கொள்ளுதல் வழங்குதல் தொடர்பாக ..

Special TET  பயிற்சிக் கட்டகம் தயாரித்தல் - SCERT Proceedings

👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251107_142534

SMC - இன்றைய பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அறிக்கை .( 07.11.25 வெள்ளி ) - கையால் எழுதப்பட்ட நகல் ( Pdf )

👇👇👇👇

Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
5-1573191324

மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்...

இரண்டு அரசாணைகள் வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 1 முதல் 8 வகுப்பு வரை பாடத்திட்டங்கள் முதல் கட்டமாக மாற்றி அமைக்கப்படும்.

 மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும்.

 இரண்டாம் கட்டமாக 9-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
IMG_20251105_202850

மாநிலக் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்குதல் - கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!

G.O.Ms.No.251 & 252 - New Syllabus - Download here

மாநிலக் கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்...

இரண்டு அரசாணைகள் வெளியிட்டு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

 1 முதல் 8 வகுப்பு வரை பாடத்திட்டங்கள் முதல் கட்டமாக மாற்றி அமைக்கப்படும்.

 மாற்றியமைக்கப்படும் புதிய பாடத்திட்டங்கள் 2027-2028 ஆம் கல்வியாண்டில் அமலுக்கு வரும்.

 இரண்டாம் கட்டமாக 9-12ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

புதிய பாடத்திட்ட வடிவமைப்பு வல்லுநர் குழுவில் இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின்!

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1382260

இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் அஸ்வின், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் அடங்கிய புதிய பாடத்திட்ட வடிவமைப்புக்கான உயர்மட்ட மற்றும் வல்லுநர் குழுக்களை பள்ளிக் கல்வித் துறை நியமனம் செய்துள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை - 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கையை தமிழக அரசு வடிவமைத்து கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிட்டது. அதில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து, பாடத் திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மாற்றம் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதன்படி புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்கான வல்லுநர் குழு மற்றும் அதை மேற்பார்வையிட்டு ஒப்புதல் அளிப்பதற்கான உயர்மட்டக் குழுவை பள்ளிக் கல்வித் துறை தற்போது நியமனம் செய்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: மாநிலக் கல்விக் கொள்கை-2025 அடிப்படையில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றியமைப்பட உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க பாட நிபுணர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட வடிவமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் இருப்பார். மேலும், விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீ.தீலிப், தொல்லியல் நிபுணர் க.ராஜன் உட்பட 13 வல்லுநர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.

இந்த குழுவின் உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும், அலுவல் சாரா உறுப்பினர்களாக பள்ளிக்கல்வித் துறை செயலர் மற்றும் இயக்குநர், தொடக்கக் கல்வி, தேர்வுத் துறை மற்றும் தனியார் பள்ளிகள் துறைகளின் இயக்குநர்களும் இருப்பார்கள்.

வடிவமைப்பு குழுவானது தற்போதைய பாடத்திட்டம், கலைத்திட்டம், மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் அணுகுமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை ஆய்வுசெய்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைப் பெற்று பள்ளிக் கல்வி மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் புதிய பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வழங்கும்.

அவற்றை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான 16 பேர் கொண்ட உயர்மட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து இறுதி செய்யும். இந்தக் குழுவின் தலைவராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், துணைத் தலைவராக செயலரும், உறுப்பினர் செயலராக எஸ்சிஇஆர்டி இயக்குநரும் இருப்பார்கள். இதுதவிர இஸ்ரோ தலைவர் நாராயணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், கணிதவியல் நிபுணர் ராமானுஜம், கல்வியாளர் மாடசாமி, இசைக் கலைஞர் சவுமியா உள்ளிட்ட 14 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்விரு குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகளாகும்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கும், மற்ற வகுப்புகளுக்கு அடுத்தடுத்த வருடங்களில் அமல்படுத்தவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதி: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
1382327

தமிழகத்தில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 4 தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்தவும் பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ‘தொலைதூர கிராமங்கள், மலைப் பகுதிகள், புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்’ என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.

இதையடுத்து,இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.

வேலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 4 தொடக்கப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. புதிய தொடக்கப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 13 தலைமை ஆசிரியர்கள், 13 இடைநிலை ஆசிரியர்களை நியமித்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தரம் உயர்த்தப்பட்ட 4 நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான 12 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பிக் கொள்ளலாம். இந்த பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ரூ.10.87 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

அரசு பள்ளிகளில் குளிர் கூரை திட்டம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகளின் வெப்பத்தை குறைக்க குளிர் கூரை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 300 அரசுப் பள்ளிகளில் குளிர் கூரை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெப்பத்தை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேற்கூரை மீது சூரிய பிரதிபலிப்பான சில்கா குளிர் கூரை வண்ணப்பூச்சு பயன்படுத்தப்பட உள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி ரூ.1,000 கோடி - முதல்வர் நன்றி அறிவிப்பு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி ரூ.1,000 கோடியை தொட்டது; நல்லுள்ளங்களுக்கு நன்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சி உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளோம் என முதல்வர் கூறியுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்:

ஆயிரம் கோடியைத் தொட்டது நம்மஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி; நல்லுள்ளங்களுக்கு நன்றி!

இந்த ஆண்டு மட்டுமே 46,767 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது நமது திராவிட மடல் அரசு. அரசின் முயற்சிகளுக்குப் பக்கபலமாக, 5 லட்ச ரூபாயை முதல் நன்கொடையாக வழங்கி, நான் தொடங்கி வைத்த 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' முன்னெடுப்பில் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் பெறப்பட்டுள்ளது. அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கிலான STEM ஆய்வகங்கள், Smart வகுப்பறைகள், நவீன கழிப்பறைகள், திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பணிகளை அரசுப் பள்ளிகளில் நிறைவேற்றியுள்ளோம்.

நம்மை வளர்த்த சமூகத்துக்கும் பள்ளிக்கும் உதவ வேண்டுமென்ற உயர்ந்த உள்ளத்தோடு பங்களித்த 885 நிறுவனங்கள் & 1,500 நன்கொடையாளர்களுக்கும் நனிநன்றிகள். இத்தனை பேரின் நம்பிக்கையைக் காப்பாற்றும்படி வெளிப்படைத்தன்மையோடும் நேர்மையாகவும் செயல்பட்டு, நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் NSNOP அறக்கட்டளைத் தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோருக்குப் பாராட்டுகள். என கூறியுள்ளார்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

SMC பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மை குழு அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப்பொருள் சேர்க்கை சார்பு

ஆதார் புதுப்பித்தல் ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவித்து தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் BIOMETRIC புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளது உறுதி செய்ய தீர்மான நிறைவேற்றிட வேண்டும்

Click Here to Download - SMC Meeting 07.11.2025 - Agenda_Addendum - Reg - SPD Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெற்ற விவரத்தை EMIS தளத்தில் பதிவு செய்ய உத்தரவு - Director Proceedings

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாடு, மாதிரிப் பள்ளிகள், உறுப்பினர் செயலாளரின் செயல்முறைகள்

உயர்கல்வி வழிகாட்டி - 2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் - 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி வகுப்பிற்கான பாடத் திட்டம் மற்றும் வகுப்பு சார்ந்த விவரங்களை கண்காணிப்பதற்கான முன்னெடுப்பு மற்றும் வகுப்பு நடைபெறுவதனை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து

Click Here to Download - CG Class Tracking Module - Director Proceedings - Pdf