பொதுத்தேர்வு.. 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்ட CBSE

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)
20875646-tn13

2025-26ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்சி 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி முதல் ஜுலை 15ம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் பிப்ரவரி 17 அன்று தொடங்கி ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளன.

பெரும்பாலான பாடங்களுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை தேர்வுகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணையை cbse.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த தேர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 45 லட்சம் மாணவர்கள் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளிலும் பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை 3 இடங்களில் நடைபெறுகிறது - தமிழ்நாடு அரசு

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 3 இடங்களில் நடைபெறுகிறது - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஒரு பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை வருகிற நவம்பர் 10ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2027ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது குறித்து, இந்திய அரசின் அறிவிப்பானது 16.6.2025 தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு, அது 16.7.2025 தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்திய தலைமை பதிவாளர் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் 2027ம் ஆண்டுக்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்-சோதனையை நடத்த இருக்கிறது.

இந்த முன்-சோதனையானது, 2027 ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு முன்பு நடத்தப்படும் ஒரு முக்கிய முன்னோட்டம் மற்றும் ஆயத்தப் பணியாகும். 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பிற்க்கு முன்மொழியப்பட்ட கருத்துகள், நடைமுறைகள், கேள்வித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செயலிகளை மதிப்பிடுவதற்காக இந்த முன்-சோதனை நடைபெற உள்ளது. 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.

இந்த முன்-சோதனையின் முடிவுகள், 2027 ஆண்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, எதிர்நோக்க இருக்கும் செயல்பாட்டு சவால்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உதவும். முதன்முறையாக, முன்-சோதனையின்போது, ​​மொபைல் செயலிகளை பயன்படுத்தி தரவுகள் சேகரிக்கப்படுவதுடன், டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும் வரையப்படும். 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை 10.11.2025 முதல் 30.11.2025 வரை நடைபெற உள்ளது, இதனுடன் 1.11.2025 முதல் 7.11.2025 வரை சுய-கணக்கெடுப்பு செய்வதற்கான முன்-சோதனையும் நடைபெற உள்ளது.

முன்-சோதனைக்காக தமிழ்நாடு மாநில அரசுடன் கலந்தாலோசித்து மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது:

* கிராமப்புற பகுதி - அஞ்செட்டி தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்

* கிராமப்புற பகுதி - ஆர்.கே. பெட் தாலுகாவின் ஒரு பகுதி, திருவள்ளூர் மாவட்டம்

 நகர்ப்புற பகுதி - மாங்காடு நகராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம்

தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம், முன்-சோதனை சுமுகமாக நடைபெறுவதற்கு, தொழில்முறை வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் மேற்பார்வை உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தும். மாநில அரசின் கல்வி, வருவாய், சுகாதாரம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்கள் களப்பணிக்காக கணக்கெடுப்பாளர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும் செயல்படுவார்கள். களப்பணிகளுக்கு முன் கணக்கெடுப்பாளர்களுக்கும் மேற்பார்வையாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி பகுதிகளில் உள்ள பொதுமக்கள், முன்-சோதனையின்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

Thiran - September 2025 - Achievement Report - District Wise

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Thiran - செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் ( மாவட்ட வாரியாக...)

மாநிலத் திட்டக் குழு பிப்ரவரி 2025 இல் மாநில அடைவு ஆய்வு மேற்கொண்டது அதனடிப்படையில் 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் அடிப்படை கற்றல் விளைவுகளை பெற்றிறாத மாணவர்கள் 

அவர்களின் கற்றல் அடைவினைமேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே " திறன் இயக்கமாகும் " . மாதந்தோறும் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் அடிப்டைத்திறன்கள் பெற்றிருப்பது உற்று நோக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பெற்றுள்ள அடைவு விவரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Click Here to Download - THIRAN - September 2025 - Class 6 - 9 - Achievement Report - District Wise - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8th Pay Commission - Level 1 முதல் 10 வரை - ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு? முழு விவரம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது.

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம்.

மத்திய அரசு சமீபத்தில் 8வது ஊதியக்குழுவிற்கான அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய பரிசை வழங்கியது. 8வது ஊதியக்குழுவில் ஊதிய உயர்வும் ஓய்வூதிய உயர்வும் எவ்வளவு இருக்கும்? இது பல காரணிகளை சார்ந்திருக்கும். அவற்றில் முக்கியமனது ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.

7th Pay Commission Fitment Factor

7வது ஊதியக்குழு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை 2.57 ஆக நிரணயித்தது. இதன் மூலம் குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ.7,000 -இலிருந்து ரூ.18,000 ஆக அதிகரித்தது. புதுப்பிக்கப்பட்ட சம்பள மேட்ரிக்ஸின் கீழ் புதிய சம்பளத்தை தீர்மானிக்க ஃபிட்மென்ட் ஃபாக்டர் அப்போதைய அடிப்படை ஊதியத்துடன் பெருகப்படுகின்றது. 

8th Pay Commission Fitment Factor

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படலாம் என்ற ஒரு கணிப்பு உள்ளது. இதன் அடிப்படையில்ம் லெவல் 1 முதல் 10 வரையிலான அரசு ஊழியர்களின் சம்பளவு உயர்வு எவ்வளவு இருக்கும்? அனைத்து ஊழியர்களுக்குமான ஊதிய உயர்வு கணக்கீட்டை இங்கே காணலாம்.

8வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.86 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை ரூ.18,000 -இலிருந்து ரூ.51,480 ஆக உயர்த்தக்கூடும். இது 186% அதிகரிப்பாகும். ஆனால், இது மிக பெரிய உயர்வாக இருக்கும் என்றும், 2.86 -ஐ விட குறைவான ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அரசு தேர்வு செய்யலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். 

2.86 என்ற ஃபிட்மெண்ட் ஃபாக்டர் நிர்ணயிக்கப்பட்டால், பல்வேறு நிலை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்? அதை பற்றி இங்கே காணலாம்.

8th Pay Commission ஊழியர்களுக்கு எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு

Level 1: 

ஊதிய லெவல் 1 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18,000 ஆக உள்ளது. லெவல் 1 அரசு ஊழியர்களுக்கு ரூ.33,480 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.51,480 ஆக உயரும்.

Level 2: 

ஊதிய லெவல் 2 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.19,900 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 2 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.37,014 அதிகரித்து, ரூ.56,914 ஆக உயரும்.

Level 3: 

ஊதிய லெவல் 3 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.21,700 ஆக உள்ளது. லெவல் 3 அரசு ஊழியர்களுக்கு ரூ.40,362 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.62,062 ஆக உயரும்.

Level 4: 

ஊதிய லெவல் 4 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.25,500 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 4 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.47,430 அதிகரித்து, ரூ.72,930 ஆக உயரும்.

Level 5: 

ஊதிய லெவல் 5 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.29,200 ஆக உள்ளது. லெவல் 5 அரசு ஊழியர்களுக்கு ரூ.54,312 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.83,512 ஆக உயரும்.

Level 6: 

ஊதிய லெவல் 6 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.35,400 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை 6 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.65,844 அதிகரித்து, ரூ.1,01,244 ஆக உயரும்.

Level 7: 

ஊதிய லெவல் 7 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.44,900 ஆக உள்ளது. லெவல் 7 அரசு ஊழியர்களுக்கு ரூ.83,514 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,28,414 ஆக உயரும்.

Level 8: 

ஊதிய லெவல் 8 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.47,600 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை  8 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.88,536 அதிகரித்து, ரூ.1,36,136 ஆக உயரும்.

Level 9: 

ஊதிய லெவல் 9 இல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.53,100 ஆக உள்ளது. லெவல் 9 அரசு ஊழியர்களுக்கு ரூ.98,766 சம்பளத் திருத்தம் இருக்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் அடிப்படை ஊதியம் ரூ.1,51,866 ஆக உயரும்.

Level 10: 

ஊதிய லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள் தற்போது ரூ.56,100 அடிப்படை சம்பளத்தைப் பெறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, நிலை  10 அரசு ஊழியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.1,04,346 அதிகரித்து, ரூ.1,60, 446 ஆக உயரும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

8th Pay Commission - என்ன மாற்றங்கள் நடக்கும்? ஊதிய உயர்வு எப்படி அமல் படுத்தப்படும்? - விளக்கம்

    Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது. 

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI அவ்வப்போது மாறுகிறது, இது அகவிலைப்படியிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்பதால், ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும். 

8வது ஊதியக்குழுவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் குழுவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களின் அறிவிப்பு வரும். இதற்குப் பிறகு, ஊழியர்களின் புதிய சம்பள மேட்ரிக்ஸ் குறித்து ஆலோசிக்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் அலவன்சுகளில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு, ஊதியக் குழுவின் பரிந்துரைகள் பொருந்தும். 

ஆனால், 8வது சம்பளக் குழுவின் மிகப்பெரிய தாக்கம் அகவிலைப்படியில் இருக்கும். மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்படும். அதாவது, புதிய ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டவுடன், அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாற்றப்படும்.  

ஜனவரி 2026க்குள், அகவிலைப்படி (DA) 63 சதவீதத்தை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடனேயே அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும் என கூறப்பட்டது. 

ஆனால், அப்படி நடக்கவில்லை. இப்போது புதிய சம்பளக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்போது, ​​ஊழியர்களின் அகவிலைப்படி பூஜ்ஜியமாக (0) மாற்றப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும் என்ற விவாதம் நடந்து வருகிறது. 

இருப்பினும், அப்போதிருக்கும் அகவிலைப்படி (தோராயமாக 63%) அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா அல்லது 50% அகவிலைப்படி மட்டும்தான் அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியைல்லை. 50% தான் இணைக்கப்படும் என்றும் கூடுதலாக உள்ள 13 சதவீதம் இணைக்கப்படாது என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இப்போது அரசாங்கம் இது குறித்து இறுதி முடிவை எடுக்க வேண்டும்.  

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் புதிய அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி கணக்கிடப்படும். இது 0 இலிருந்து தொடங்கப்படும். உதாரணமாக ஒருவரின் அடிப்படை சம்பளம் ரூ.34,200 என்று வைத்துக்கொள்வோம். 

அப்போது ஜனவரி 2026 முதல் அவரது அகவிலைப்படி 0 ஆக இருக்கும். பின்னர் ஜூலை 2026 இல், 3-4 சதவீத அகவிலைப்படி (தோராயமாக) அதனுடன் சேர்க்கப்படும். அப்போதிருந்து, மேலும் கணக்கீடுகள் தொடரும். அகவிலைப்படி பூஜ்ஜியமாக மாறினால், அது மற்ற கொடுப்பனவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அகவிலைப்படி 50% அல்லது அதற்கு மேல் இருந்தால், அதை புதிய ஊதியக் குழுவில் இணைக்க ஒரு ஏற்பாடு உள்ளது. 

நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் அகவிலைப்படி (DA) கணக்கிடப்படுகிறது. CPI அவ்வப்போது மாறுகிறது, இது அகவிலைப்படியிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, தற்போதைய அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும் என்பதால், ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும்.  

தற்போதைய சூழ்நிலையில், ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,000 மற்றும் அகவிலைப்படி 50% என வைத்துக்கொள்வோம். அப்போது அகவிலைப்படி ரூ.9,000 ஆக இருக்கும். 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு, அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி சேர்க்கப்பட்டால் மொத்த அடிப்படை சம்பளம் ரூ.27,000 ஆக உயரும். 

புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்படும் போதெல்லாம், ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். விதிகளின்படி, ஊழியர்களுக்கு வழங்கப்படும் 100% அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்தில் சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது நடக்காது. அப்படி செய்ய நிதி நிலைமை தடையாக இருக்கும். இருப்பினும், 2016 ஆம் ஆண்டில் அப்படி செய்யப்பட்டது

அதற்கு முன், 2006 ஆம் ஆண்டு, ஆறாவது ஊதியக்குழு அறிமுகப்படுத்தப்பட்டபோது,​​டிசம்பர் வரை ஐந்தாவது ஊதிய அளவில் 187 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. முழு அகவிலைப்படியும் அடிப்படை சம்பளத்தில் இணைக்கப்பட்டது. ஆகையால், ஆறாவது ஊதிய அளவின் குணகம் 1.87 ஆக இருந்தது. பின்னர் புதிய சம்பளப் பட்டியல் மற்றும் புதிய தர ஊதியமும் உருவாக்கப்பட்டன. ஆனால், அதை வழங்க மூன்று ஆண்டுகள் ஆனது.  

2026 ஜனவரியில் 8வது சம்பளக் குழு அமல்படுத்தப்படும்போது, ​​அகவிலைப்படி பூஜ்ஜியமாகிவிடும். அத்தகைய சூழ்நிலையில், அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்பட்டு, அது பூஜ்ஜியத்திலிருந்து கணக்கிடப்படும். ஜனவரி முதல் ஜூன் 2026 வரையிலான AICPI குறியீடு, அகவிலைப்படி 3 சதவீதமாக இருக்குமா, 4 சதவீதமாக இருக்குமா அல்லது எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானிக்கும். இந்த நிலைமை தெளிவாகத் தெரிந்தவுடன், ஊழியர்களுக்கு 0 சதவீதத்தில் தொடங்கி அகவிலைப்படி வழங்கப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6 To 10th Std - 2nd Mid Term Test Time Table - Nov 2025

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இரண்டாம் இடைப்பருவ தேர்வு நவம்பர் 2025 - தேர்வுக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

6 To 10th Std - 2nd Mid Term Syllabus 2025 - All Subjects

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

இரண்டாம் இடைப்பருவ தேர்வு நவம்பர் 2025 - ஆறு முதல் பத்தாம் வகுப்புக்கான தேர்வு பாட திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

பாடத்திட்டம் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அனைத்து பாடத்திற்கானதாகும்

Click Here to Download - 6 To 10th Std - 2nd Mid Term Syllabus 2025 - All Subjects - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அரசு அறிவிப்பு!

 ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அரசு அறிவிப்பு!

தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், ஆசிரியர்களின் பிள்ளைகள் பள்ளி, கல்லூரி, தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி கல்வி நிலையங்களில் பயிலும் பட்சத்தில் ஆண்டுதோறும் நிதியுதவி பெறலாம். இதன் மூலம் கல்வி செலவில் ஏற்படும் சுமையை குறைத்து, மாணவர்கள் தங்கள் கல்வியை சிறப்பாக தொடர ஊக்கம் அளிக்கப்படுகிறது.

கல்வித்துறை தெரிவித்ததாவது, உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், தகுதி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி நிறுவன விவரங்களுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த முயற்சி, ஆசிரியர் குடும்பங்களின் கல்வி முன்னேற்றத்துக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என கல்வி வட்டாரங்கள் பாராட்டுகின்றன.

  Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – மூத்த திட்ட உதவியாளர் பணியிடங்கள் | மாதம் ₹18,000 சம்பளம்

   Education News (கல்விச் செய்திகள்)    

Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – மூத்த திட்ட உதவியாளர் பணியிடங்கள் | மாதம் ₹18,000 சம்பளம்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB), திருச்சி 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் Senior Project Assistant (மூத்த திட்ட உதவியாளர்) பணிக்கான 1 இடம் மட்டுமே உள்ளது. விண்ணப்பதாரர்கள் B.Sc அல்லது B.A தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ₹18,000/- வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சல் (E-Mail) மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 07 நவம்பர் 2025 ஆகும்.

காலியிடங்கள்

பதவிகாலியிடங்கள்
Senior Project Assistant01

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட துறைகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்:

  • B.Sc (Agriculture / Life Science / Botany)
    அல்லது

  • B.A (சம்பந்தப்பட்ட துறையில்)

வயது வரம்பு 

விண்ணப்பிக்கும் நாளின் அடிப்படையில்,
குறைந்தபட்சம்: 21 வயது
அதிகபட்சம்: 45 வயது

சம்பள விவரம்

பதவிமாத சம்பளம்
Senior Project Assistant₹18,000/-

விண்ணப்பக் கட்டணம்

❌ எந்தவித கட்டணமும் இல்லை.

தேர்வு செயல்முறை 

Interview (நேர்காணல்) வழியாக தேர்வு செய்யப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 

1️⃣ கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கவும்.
2️⃣ தேவையான அனைத்து ஆவணங்களுடனும் சரியாக நிரப்பவும்.
3️⃣ நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை மற்றும் தேவையான ஆவணங்களை nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
4️⃣ கடைசி நாள்: 07 நவம்பர் 2025.