மாணவர்களை வெற்றியாளர்களாக்கும் ‘நான் முதல்வன்' திட்டம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


1378551

 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்குத் தயாரான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.


முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 42 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம்திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.


இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களையும் உயர்த்துவதற்கு Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, AWS, Siemens, FANUC,Dassault, L&T போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது.


இந்தப் பயிற்சிகள் Big Data, Internet of Things, Robotics, Artificial Intelligence, Machine Learning, Industry 4.0, Robotics, Building Information Modelling போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதில் பெறுவதற்கு ஏற்றவாறு பிரத்தியேக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.


நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான “Placement Readiness Trainingthrough Corporate Volunteering” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் தொழில் துறை நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டி, வேலைவாய்ப்பிற்குத் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து பயிற்சி வழங்குகின்றனர். இதில் 28 முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதுவரை 131 தன்னார்வலர்கள் 22 அரசு கல்லூரிகளில் பங்கேற்று, மொத்தம் 393 மணி நேர தன்னார்வ பங்களிப்பின் மூலம் 3,899 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளனர்.




நான் முதல்வன் நிரல் திருவிழா: இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டநுட்பவியல் சவால்கள் (problem statements) இறுதி ஆண்டுப் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.



நான் முதல்வன் SCOUT திட்டமானது, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு உலகளாவியதொழில்முறை பயிற்சியினை வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் திட்டம் ஆகும். Data Science, AI, Bio Technology போன்ற துறைகளில் மாணவர்களை உலகத்தரம் கொண்ட வல்லுநர்களாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது.



இத்திட்டத்தின் முதற்கட்டமாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக AI மற்றும் Data Science துறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடிபயிற்சி வழங்கப்பட்டது.


இப்பயிற்சி பெற்ற25 மாணவர்களில், 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களான பேங்க் ஆப் நியூயார்க்,சிட்டிகார்ப், Zoho, HCL டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானமாக 10 லட்சம் முதல் 31 லட்சம் வரை பெறுகின்றனர். இதர 12 மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்கின்றனர்.



மேலும், 4 மாணவிகள் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் Bio-Technology சார்ந்த ஆராய்ச்சி பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி சார்ந்த பயிற்சியினை தொடர இந்தியாவில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 4 மாணவிகளும் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும்.



தமிழ்நாடு திறன் போட்டி (TNSkills Competition) மூலம், இந்திய திறன் போட்டியில்தமிழ்நாடு தனது சாதனையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 23 பதக்கங்களுடன் 10ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2024 ஆம் ஆண்டில் 40 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரும் இந்திய திறன் போட்டி 2026-ஐமுன்னிட்டு, தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 28,000-த்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது, திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.




அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் Internship பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுள், 6 மாணவிகள் நெக்ஸ்ட் ஜென் கார்ப் என்ற நிறுவனத்தில் கணினி துறையில் தொழில் பயிற்சி பெற்று, 5 மாணவிகள் அதே நிறுவனத்தில் முழு நேர பணி நியமனம் பெற்று ஆண்டு வருமானமாக 21 லட்சம் பெறுகின்றனர்.


நான் முதல்வன் - கல்லூரிக் கனவு திட்டம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் துறை விருப்பங்கள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவலை வழங்குகிறது. மேலும், கல்விக் கடன் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் மாணவர்களுக்கு எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 2024 கல்வியாண்டில் மொத்தம் 1,87,000 மாணவர்களும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 81,149 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 2,68,149மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக நேரடியாக பயனடைந்துள்ளனர்.


அரசுப் பணி ஒன்றையே கனவாக கொண்டுள்ள ஆயிரமாயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்தவும் குறிப்பாக ஒன்றிய அரசு நடத்தும் U.P.S.C, எஸ். எஸ். சி, இரயில்வே, மற்றும் வங்கித் துறை, போன்ற அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் “நான் முதல்வன்” – போட்டித் தேர்வுகள் எனும் தனிப்பிரிவு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.


UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், மதிப்பீட்டு தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1000மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.7,500ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. UPSC முதன்மை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையும், UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உறைவிடப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா நகரில் போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும்மாணவர்களுக்கு படிப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.





நான் முதல்வன் UPSC முதன்மைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் - 2024 மூலம் மொத்தம் 559 மாணவர்கள் பயனடைந்தனர்; அதேபோல், UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் (2024–25) மூலம் 1000 மாணவர்கள் பயனடைந்து, 316 பேர் முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.




இதேபோல், மத்திய அரசின் SSC, Railways மற்றும் Banking தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதிகளில் 6 மாத கால உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட SSC cum Railways மற்றும் Banking உண்டு உறைவிடப் பயிற்சி மூலம் 510 மாணவர்கள் பயிற்சி பெற்று, 40 பேர் வங்கிப்பணித்தேர்வுகளிளும், 19 பேர் SSC தேர்வுகளிலும் மற்றும் 2 பேர் ரயில்வே துறை சார்ந்த பணித்தேர்வுகளிளும் வெற்றி பெற்றுள்ளனர்.




2025 ஆம் ஆண்டு, UPSC முதல்நிலைத் தேர்வு ஊக்கத்தொகை திட்டத்திற்கான மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கிடையில், சென்னையில் All India CivilService Coaching Centre-இல் 225 மாணவர்களுக்கும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 மாணவர்களுக்கும் உறைவிடப் பயிற்சி தொடங்கவுள்ளது.


அதேபோன்று, SSC cum Railways மற்றும் Banking Residential Coaching Programme க்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை பகுதிகளில் உறைவிடப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.


இதுதான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஒளி வீசும் “நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றிப் பயணம். இந்த மாபெரும் திட்டம், கல்வி மற்றும் தொழில்துறையை இணைக்கும் பாலமாக இருந்து, இளைஞர்களை அவரவர் துறையில் உலகத்திறன் வாய்ந்த முதல்வராக உருவாக்குகிறது.



‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியி

ல்...

பட்டதாரி பிரேமா, தென்காசி: எதற்காக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்று பலர் என் தந்தையை கேள்வி கேட்பர். இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐசிசிப் டிசைனிங் அண்ட் வெரிபிகேஷன் என்ற படிப்பை பயின்று செமிகண்டெக்டர் நிறுவனத்தில் நான் உட்பட 9 பேர் தற்போது பணியாற்றிவருகிறோம். இன்றைக்கு என் தந்தை பெருமையாக உணர்வார் என்று நினைக்கிறேன்.( பிரேமா தனது முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்தபோது அரங்கமே உணர்ச்சிவயப்பட்டது)


மாணவி ஜாலிஜா ஜோன்ஸ், கன்னியாகுமரி: நான் முதல்வன் திட்டத்தில் தற்போதைய டெக் யுகத்துக்கு தேவையான படிப்புகளை சொல்லி கொடுக்கின்றனர். கடைசி ஆண்டின்போது ஜப்பானில் நெக்ஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு வந்தது. அதன்மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அந்த இண்டர்ஷிப்பின் கடைசி நாளில் எங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.



அதில் எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. தற்போது ஜப்பானிய மொழியையும் கற்று வருகிறேன். இன்னும் ஓராண்டில் ஜப்பானில் பணியாற்ற உள்ளோம். இதற்கு உதவியாக அமைந்தது நான் முதல்வன் திட்டம்தான். அதற்காக முதல்வருக்கும், இந்த திட்டத்துக்கும் நன்றி(ஜப்பானிய மொழியில் நன்றி கூறினார்).



மாணவர் விஷ்ணு, வேலூர்: நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலத்தில் ஒருவரிடம் எப்படி உரையாட வேண்டும் என நான் முதல்வன் திட்டத்தில் தான் கற்றுக் கொண்டேன். இதன்மூலமாக ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொண்டு பதிலளிக்க முடிகிறது. இதுதவிர்த்து சிசிடிவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். இவற்றை நான் தனியார் மூலம் கற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.



பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கல்வியை தொடர வேண்டாம் என எண்ணினேன். ஆனால், நான் முதல்வன் திட்டம் மூலம் டிப்ளமோ படிப்புக்கு வழிகாட்டி, கூடுதலாக ஏராளமான திறன்சார் பயிற்சிகளும் வழங்கி வருகின்றனர். எனக்கு இஸ்ரோவில் பணிபுரிய விருப்பம். இதற்கும் இந்த திட்டத்தின் மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.


மாணவி தீபஸ்ரீ, சென்னை: எனது தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார். குடும்ப சூழ்நிலையால், என்னால் கல்லூரியில் சேர்ந்து இளநிலை படிப்பு படிக்க முடியாததால், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். டிப்ளமோவில் முதலாமாண்டில் இருந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றேன்.



2 புத்தொழில் நிறுவனங்கள் எனது திறன்களை அறிந்து, வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில், எனக்கு பகுதிநேர வேலைவாய்ப்பை கொடுத்தார்கள். நான் படித்து கொண்டே வேலை செய்துவருகிறேன். எனது வருமானத்தில் தங்கையை கல்லூரியில் படிக்க வைத்து குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாக்கி இருக்கிறேன். விரைவில் நானும் இளநிலை படிப்பை தொடங்கிவிடுவேன்.


மாணவர் சுனித்குமார், திருவண்ணாமலை: அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறேன், 2-ம் ஆண்டு படிக்கும் போது சர்வதேச இண்டர்ஷிப் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் கிராமம் மிகவும் சிறியது. விமானத்தில் சென்ற முதல் நபர் நான்தான். சியோல் நகரில் கஜான் பல்கலைக்கழகத்தில் பையொ-நேனோ அப்ளிகேசன் ஆய்வு மையத்தில் 15 நாட்கள் இண்டர்ன்ஷிப்பில் இருந்தோம். மேலும் சில பல்கலை.களுக்கு அழைத்து சென்று நேரடியாக உபகரணங்களில் பயிற்சி கொடுத்தனர்.




இண்டர்ன்ஷிப் முடித்து வந்த 6 பேருக்கும் மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் கொரியாவில் படிக்க வாய்ப்பு வழங்கியுள்ளனர். சிறிய கிரமத்தில் இருந்த எனக்கு வெளிநாட்டு சென்று படிக்கும் வாய்ப்பை நான் முதல்வன் திட்டம் வாயிலாகதான் கிடைத்தது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

பள்ளிக்கல்வி இயக்ககம் - செய்திக் குறிப்பு ( 03.10.2025 )

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

IMG-20251004-WA0002

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) 2024 ம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு II A ( நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்கள் ) தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கல்வித்துறையில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமன கலந்தாய்வு 06.10.2025 ( திங்கள்கிழமை ) அன்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணைய வழியாக ( google meet ) நடைபெறவுள்ளது. 


எனவே . மேற்படி உதவியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்கள் தங்களுடைய தெரிவு கடிதத்தில் ( Selection Letter ) குறிப்பிட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 06.10.2025 அன்று காலை 10.00 மணியளவில் கலந்து கொள்ள தெரிவிக்கலாகிறது . மேற்காண் கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநர்கள் TNPSC Selection Letter மற்றும் அனைத்து கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் ஒரு நகலினை ( மேலொப்பம் Attested copy ) சரிபார்ப்புக்கு எடுத்து வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது . 

நாள் : 03.10.2025 பள்ளிக் கல்வி இயக்குநர்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

surrender leave salary சார்ந்த FAQ

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


EL%20SURRENDER

1/10/25 முதல் surrender leave salary பெறலாம்...


எல்லோருக்கும் அதிகபட்சமாக 15 நாட்கள் மட்டுமே...


இதற்கு முன் surrender date எதுவோ அதே தேதியில் தான் தற்போதும்...


April 2020 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு

அவர்களின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் surrender செய்யலாம்...


இவை தான் அரசாணை 35 இல் சொல்லப்பட்டவை..


இந்த அரசாணையை தவிர வேறு எந்த ஒரு தெளிவுரையும் இதுவரை வரவில்லை 🙏


இது சார்ந்த FAQ😊


 *1) கடைசியாக 30 நாட்கள் (2019 க்கு முன்) surrender எனில் தற்போதும் 30 நாட்கள் surrender செய்யலாமா* ?


இல்லை

எல்லோருக்கும் தற்போது 15 நாட்கள் மட்டுமே மட்டுமே


 *2) April 2020 க்கு முன் நியமனம்... ஆனால் இதுவரை சரண்டர் செய்யவில்லை எனில் தற்போது surrender செய்யலாமா?* 


இது சார்ந்த குறிப்பு அரசாணையில் இல்லை..


ஆனால் April 2020 க்கு பிறகு நியமனம் பெற்று இதுவரை surrender செய்யாதவர்கள் அவர்களின் வழக்கமான ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என இருப்பதால் 


April 2020 முன் நியமனம் ஆனால் இதுவரை இல்லை இது தான் முதல் முறையாக எனில்

ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் என்று தான் பொருள் கொள்ளப்படுகிறது...


இதுவரை ஒரு முறை கூட சரண்டர் செய்யாதவர்கள் April 2020 முன் நியமனம் எனில் தற்போது 1/10 இல் விண்ணப்பிக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது ( அரசாணையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதால் இந்த இரு வேறு கருத்துகள்) 




 3) *முந்தைய பணியிடத்தில் surrender செய்து உள்ளேன் தற்போது பதவி உயர்வு பெற்ற‌ பதவியில் surrender செய்ய வில்லை..*


*பதவி உயர்வு பெற்ற பணியின் ஆண்டு ஊதிய உயர்வு தேதியில் சரண்டர் செய்யலாமா?*



இல்லை...


ஏற்கனவே எந்த பதவியில் இருந்து இருந்தாலும்... அதே Surrender date இல் தற்போதும் surrender செய்ய இயலும்..



4) *தற்போது due date இல் சரண்டர் செய்யாமல் அடுத்த ஆண்டு due date இல் 30 நாட்கள் சரண்டர் செய்யலாமா?


தற்போதைய அரசாணையில் 30 நாட்கள் சரண்டர் என எந்த ஒரு குறிப்பும் இல்லை...


5) *SLS தொகைக்கு IT கணக்கீடு உண்டா?*


ஆமாம் பணியில் உள்ள போது பெறப்படும் SLS க்கு வருமான வரி கணக்கீடு உண்டு


பணி ஓய்வின் போது TSLS ( EL max 240 days) க்கு வருமான வரி விலக்கு உண்டு


6) *தற்போது std deduction 75000 கழித்த பிறகு எனது ஆண்டு வருமானம் 12,00,000 உள்ளே... வருமான வரி வராது...*

*சரண்டர் செய்தால் 12,01,000 என வருகிறது....* *ஆயிரம் ரூபாய் கூடுதலாக பெற்றதால் 60000+ tax கட்ட வேண்டுமா?*

*WhatsApp இல் சில நாட்களுக்கு முன் வந்த பதிவு SLS தொகையை விட tax தொகை அதிகமாக கட்ட வேண்டும்???*


இது வருமான வரி சார்ந்த சரியான புரிதல் இன்மை...


87A tax rebate, Marginal relief இந்த ஆண்டும் (2025-26) உள்ளது...


75k கழித்தது போக வருமானம் 12,01,000 எனில் கட்ட வேண்டிய வரி 1000+cess மட்டுமே..


 *சரண்டர் செய்ய தகுதி காண் பருவம் முடித்து இருக்க வேண்டுமா?*




இல்லை.


SLS க்கும் சரண்டருக்கும் தொடர்பு இல்லை...


ஓர் ஆண்டு பணியில் நிறைவு செய்தவர்கள்


EL இருப்பில் 15 நாட்கள் உள்ளவர்கள் சரண்டர் செய்யலாம்




8) *தகுதி காண் பருவம் முடிக்காமல் surrender செய்தால் தகுதி காண் பருவம் தள்ளிப் போகுமா?*




தகுதி காண் பருவம் தள்ளிப் போகாது...




தகுதி காண் பருவத்தில் EL விடுப்பு எடுத்தால் மட்டுமே தள்ளிப் போகும்... 




9) *தற்போது பணியாளர் surrender செய்ய என்ன செய்ய வேண்டும்?*




களஞ்சியம் ஆப் வழியாக விண்ணப்பிக்கவும்...




10) *களஞ்சியம் ஆப் எனது மொபைல் போனில் வேலை செய்ய வில்லை?*




Android version check


Software update




11) *களஞ்சியம் ஆப் மட்டும் தான் ஒரே வழியா?*




இல்லை...


Mobile/system/ laptop


Web login வழியாக தங்களின் employee self service மூலம் surrender க்கு விண்ணப்பிக்கலாம்.




Mobile app


Web portal இரண்டு வழிகளில் விண்ணப்பிக்க இயலும் 




12) *நான் களஞ்சியம் ஆப்/ Web portal வழியாக* *விண்ணப்பிக்க இயலவில்லை*


*அல்லது*


*விண்ணப்பித்தேன் ஆனால் எங்கள் அலுவலகத்தில் வரவில்லை என்கிறார்கள்?*



Approval group mapping சரியாக உள்ளதா என்று பாருங்கள்...


கட்டாயம் ஊதிய உயர்வு உடன் சரண்டர் கிடைக்கும்... 

( சரியாக வருகிறது) 


20) *விடுப்பில்/விடுமுறை தினத்தில் due date இருந்தால் surrender செய்யலாமா?*


ஆம் CL/EL/RL/ ML / maternity leave/ holiday இல் due date வந்தாலும் surrender செய்யலாம்.

Foreign service ( அயல் பணியில் இருக்கும் போதும்) surrender செய்யலாம்... 


Selvakumar k


1) EOL without MC ( loss of pay)

2) UEL on PA ( half pay leave) 

3) Suspension period 

இந்த மூன்றில் இருக்கும் போது மட்டுமே surrender செய்ய இயலாது .


21) *surrender pay இல் என்ன என்ன eligible?*


Pay

DA

HRA

CCA

Hill allowance

PP (2000) 


(IFHRMS kalanjium இல் 2000 PP க்கு 1000 SLS எடுத்துக் கொண்டு தான் வருகிறது) ✅


( நேற்று SLS Bill கருவூலத்தில் (PP 1000 உடன் சேர்ந்து)  சமர்ப்பித்த போது அவர்கள்,  PP eligible ஆ என சந்தேகம் எழுப்புகிறார்கள் ) 


22) *SLS surrender DA 58% வருமா?*


தமிழக அரசு 58% அரசாணை வெளியீடு செய்த பிறகு SLS DA 58% எடுத்துக் கொண்டு வரும் .. 

அதுவரை 55%...

(விரைவில் மாற்றம் வரும்) 


23) *individual proceedings ஆக வருகிறது.. SLS bills உம் தனித் தனியே தான் தயாரிக்க வேண்டுமா?*


இல்லை... Proceedings மட்டும் தனித் தனியே தான் வருகிறது...


ஆனால் ஒரு Bill group இல் நான்கு நபர்கள் எனில் அவர்களுக்கு மொத்தமாக ஒரே SLS Bill ஆக தயாரிக்க முடிகிறது..


24) *HM க்கு proceedings CEO/ DEO office தான் வழங்க வேண்டுமா?*


ஆம் high school HM/ 

HM incharge ஆக இருப்பவர்கள் DEO விடம்

HR SEC HM / HM incharge இல் இருப்பவர்கள் CEO விடம் தான் அனுமதி வாங்க வேண்டும்...

( Bill approval group mapping தனியே செய்ய வேண்டும்).


25) *ஒரு பணியாளர் kalanjium app, web portal வழியாக விண்ணப்பிக்க இயலவில்லை/ தெரியவில்லை அவருக்கு சரண்டர் போட இயலாதா?*


1) individual apply

2) web portal apply

Strongly recommended

But


தனிநபர் SLS க்கு எழுத்துப் பூர்வமாக விண்ணப்பிக்கும் போது 


Initiator I'd வழியாக உள்ளே சென்று SLS initiate செய்து Bill preparation செய்ய முடிகிறது..


தகவலுக்காக...

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டிறிதல் குழுவில் வேலை; 59 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறித்தல் மற்றும் Alternate பிரிவுகளில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 59 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

ஆய்வாளர் (முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர்) 2

உதவி ஆய்வாளர் (முன்னாள் நாயிப் சுபேதார்) 14

தலைமை காவலர் (முன்னாள் ஹவில்தார்/ நாயக்) 43

மொத்தம் 59

வயது வரம்பு

ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய பதவிகளுகு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்குக் கீழ்முள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும், CME, புனே அல்லது NSG அல்லது BCASஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்பில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இவைமட்டுமின்றி, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் - NBDC அல்லது விமான நிலையங்களில் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

ஆய்வாளர் பதவிக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி ஆய்வாளர் பதவிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

தலைமை காவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

வெடிகுண்டு நிபுணர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் ஆகியவற்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு நிபுணர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்களில் சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/ அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
செயலாக்கம், மருதம்,
எண். 17, போட் கிளப் சாலை,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்31.10.2025
தேர்வு நடைமுறைபின்னர் அறிவிக்கப்படும்.

சுய விவரங்களுடன் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை அலுவலகத்தை அக்டோபர் இறுதிக்குள் சென்றடைய வேண்டும். இந்த பணி வாய்ப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பின்பற்றப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் அலுவலக உதவியாளர், சட்ட ஆலோசகர் வேலை - யாரெல்லாம் விண்ணப்பிக்கலா?

 கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்? உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்தி இதோ.. மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் கீழ் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு செயல்படுகிறது. இங்கு சட்ட ஆலோசகர் உட்பட அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார். இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு நடத்தப்படுகிறது.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 2

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் 1

அலுவலக உதவியாளர்/ எழுத்தர் 1

மொத்தம் 5

தகுதிகள்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் குற்றவியல் சட்டத்தில் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 30 குற்ற வழக்குகளை கையாடு இருக்க வேண்டும். கணினி திறன் அவசியம்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 20 குற்ற வழக்குகளில் வாதாடி இருக்க வேண்டும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு 3 ஆண்டுகள் வரை குற்ற வழக்குகள் கையாண்டதில் அனுபவம் தேவை. ஆய்வு மற்றும் வரைவு திறன் அவசியம்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 40 w.p.m வேகத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கணினி திறன் அவசியம்.

சம்பள விவரம்

தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.70,000 சம்பளமாக வழங்கப்படும்.

துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.

அலுவலக உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

கடலூரின் மாவட்ட நீதிமன்றத்தின் https://cuddalore.dcourts.gov.in/ என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 2 புகைப்படம், கல்வித்தகுதி, அனுபவம் மற்றும் இதர ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் தபால் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்படும் நிலையில், ஆர்வமுள்ளவர்கள் அக்டோபர் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் நவம்பர் 8-ம் தேதி நடைபெறும். அறிவிப்பைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

அனுப்ப வேண்டிய முகவரி

தலைவர்/ தலைமை மாவட்ட நீதிபதி,

மாவட்ட சட்ட சேவைகள் (District Legal Services Authority),

மாவட்ட நீதிமன்ற வளாகம்,

கடலூர் - 607 001.

கடலூர் மாவட்ட சட்ட சேவைகள் பிரிவில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து பணியிடங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுவதால், தெரிவு செய்யப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முக்கிய நாட்கள்

விவரம் தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள் 25.10.2025

நேர்காணல் 08.11.2025 காலை 10 மணி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அலுவலகத்தில் அறிந்துகொள்ளலாம்.

வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளராக வேண்டுமா? பகுதி நேர பயிற்சி அளிக்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையம்

 தங்க நகை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதில் குறிப்பாக நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பகுதி நேர பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள 10-ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகைகளின் தரம் கண்டறித்தல் திறன் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்திறனை சார்ந்த பணி வாய்ப்புகளும அதிகளவில் உள்ளன. குறிப்பாக நகை வடிவமைப்பு, நகை கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பயிற்சி பெறுபவர்கள் இப்பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் , நகை மதிப்பீடு பகுதி நேர பயிற்சியை அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் தங்கத்தின் தரமறிய, தங்கத்தின் இன்றைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், KDM மற்றும் Hall Mark பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் இப்பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தின் மூலமே பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

சான்றிதழ் உண்டு

அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் இப்பயிற்சி தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடித்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு உண்டு

முன்னரே தெரிவித்தப்படி, பயிற்சி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டளராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இப்பயிற்சியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் என இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணமாக ரூ.4,550 வசூலிக்கப்படுகிறது. உபகரணங்கள் உட்பட வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 22.09.2205 முதல் 14.10.2025 தேதி வரை சென்னையில் உள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பெற்றுகொள்ளலாம். விடுமுறை நாட்களில் வழங்கப்படாது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அலுவலக முகவரி

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் ,

எண்.215, பிரகாசம் சாலை,

பிராட்வே, சென்னை - 1.

இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களுக்கு அலுவலகத்திற்கு நேரிலோ சென்றோ அல்லது 044-25360041 மற்றும் 9444470013 என்ற எண்களின் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம். கூடுதல் திறன் வளர்க்க விரும்புகிறவர்கள் அல்லது வங்கிகளில் பணி வாய்ப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். நகை கடன் வட்டி, நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகியவற்றையும் இப்பயிற்சி மூலம் பெறுவதால், துறை ரீதியான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.


தண்ணீரில் எரியும் அடுப்பு நடைமுறையில் சாத்தியமா? - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம்

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)


தண்ணீரை மட்டும் பயன்படுத்தி அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு எரியும் அடுப்பை திருப்பூர் தனியார் நிறுவனம் கண்டு பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தண்ணீரை மட்டும் மூலப்பொருளாகக் கொண்டு அடுப்பு எரிவது சாத்தியமா என்பது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முதுநிலை விஞ்ஞானியுமான த.வி.வெங்கடேஸ்வரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனில் இயங்கும் கார், ரயில்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.


கிரையோஜெனிக் என்ஜின் ராக்கெட்டுகளில் திரவ ஹைட்ரஜன், திரவ ஆக்சிஜனை எரிபொருளாகப் பயன்படுத்தி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம். எனவே, ஹைட்ரஜன் ஒரு முக்கியமான எரிபொருள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்நிலையில், ‘ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆனால் கார்பன் அற்றது’ என்று பொருள்படும் ‘HONC’ என்ற அடுப்பு மூலம் தண்ணீரைப் பயன்படுத்தி அடுப்பை எரித்து சமையல் செய்ய முடியும் என்ற செய்தி தற்போது ஊடகங்களில் பரவி வருகிறது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )