தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டிறிதல் குழுவில் வேலை; 59 காலிப்பணியிடங்கள் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

      Employment News (வேலைவாய்ப்பு செய்திகள்)

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறித்தல் மற்றும் Alternate பிரிவுகளில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 59 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

பணியின் விவரங்கள்

பதவியின் பெயர் காலிப்பணியிடங்கள்

ஆய்வாளர் (முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர்) 2

உதவி ஆய்வாளர் (முன்னாள் நாயிப் சுபேதார்) 14

தலைமை காவலர் (முன்னாள் ஹவில்தார்/ நாயக்) 43

மொத்தம் 59

வயது வரம்பு

ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய பதவிகளுகு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்குக் கீழ்முள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும், CME, புனே அல்லது NSG அல்லது BCASஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்பில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இவைமட்டுமின்றி, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் - NBDC அல்லது விமான நிலையங்களில் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்

ஆய்வாளர் பதவிக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

உதவி ஆய்வாளர் பதவிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும்.

தலைமை காவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

வெடிகுண்டு நிபுணர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் ஆகியவற்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு காவல்துறையில் வெடிகுண்டு நிபுணர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்களில் சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/ அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கூடுதல் காவல்துறை இயக்குநர்,
செயலாக்கம், மருதம்,
எண். 17, போட் கிளப் சாலை,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

முக்கிய நாட்கள்

விவரம்தேதிகள்
விண்ணப்பிக்க கடைசி நாள்31.10.2025
தேர்வு நடைமுறைபின்னர் அறிவிக்கப்படும்.

சுய விவரங்களுடன் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை அலுவலகத்தை அக்டோபர் இறுதிக்குள் சென்றடைய வேண்டும். இந்த பணி வாய்ப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பின்பற்றப்படும்.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilanadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  

0 Comments:

Post a Comment