வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளராக வேண்டுமா? பகுதி நேர பயிற்சி அளிக்கும் கூட்டுறவு மேலாண்மை நிலையம்

 தங்க நகை சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. அதில் குறிப்பாக நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பகுதி நேர பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள 10-ம் வகுப்பு தகுதி போதுமானது. ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம்.

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

தங்க நகைகளின் தரம் கண்டறித்தல் திறன் மிக அவசியமான ஒன்றாக உள்ளது. இத்திறனை சார்ந்த பணி வாய்ப்புகளும அதிகளவில் உள்ளன. குறிப்பாக நகை வடிவமைப்பு, நகை கடைகள், வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளர் பணி வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பயிற்சி பெறுபவர்கள் இப்பணி வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்நிலையில், சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் , நகை மதிப்பீடு பகுதி நேர பயிற்சியை அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் தங்கத்தின் தரமறிய, தங்கத்தின் இன்றைய நவீன தொழில்நுட்பம், நகைக்கடன் வட்டி கணக்கிடுதல், KDM மற்றும் Hall Mark பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் இப்பயிற்சிக்கான உபகரணங்கள் பயிற்சி நிலையத்தின் மூலமே பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.

சான்றிதழ் உண்டு

அக்டோபர் மாதம் 15-ம் தேதி முதல் இப்பயிற்சி தொடங்குகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இப்பயிற்சியை முழுமையாக முடித்து தேர்ச்சி பெறும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

வேலைவாய்ப்பு உண்டு

முன்னரே தெரிவித்தப்படி, பயிற்சி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தங்க நகை மதிப்பீட்டளராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?

இப்பயிற்சியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண், பெண் என இருபாலரும் கலந்துகொள்ளலாம். வயது வரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணமாக ரூ.4,550 வசூலிக்கப்படுகிறது. உபகரணங்கள் உட்பட வழங்கப்படும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 22.09.2205 முதல் 14.10.2025 தேதி வரை சென்னையில் உள்ள சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பெற்றுகொள்ளலாம். விடுமுறை நாட்களில் வழங்கப்படாது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

அலுவலக முகவரி

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம் ,

எண்.215, பிரகாசம் சாலை,

பிராட்வே, சென்னை - 1.

இப்பயிற்சி குறித்த மேலும் தகவல்களுக்கு அலுவலகத்திற்கு நேரிலோ சென்றோ அல்லது 044-25360041 மற்றும் 9444470013 என்ற எண்களின் மூலமாகவோ தொடர்புகொள்ளலாம். கூடுதல் திறன் வளர்க்க விரும்புகிறவர்கள் அல்லது வங்கிகளில் பணி வாய்ப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். நகை கடன் வட்டி, நவீன தொழில்நுட்ப நுணுக்கங்கள் ஆகியவற்றையும் இப்பயிற்சி மூலம் பெறுவதால், துறை ரீதியான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.


0 Comments:

Post a Comment