பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க சிபிஎஸ்இ உத்தரவு..

   Education News (கல்விச் செய்திகள்)

உடல் மற்றும் மன ரீதியான துஷ்பிரயோகங்களைப் பாதுகாக்க பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க சிபிஎஸ்இ உத்தரவு...

👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽

IMG-20250721-WA0023

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

School Morning Prayer Activities - 22.07.2025

        Education News (கல்விச் செய்திகள்) 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2025

திருக்குறள் 

குறள் 121: 

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை 

ஆரிருள் உய்த்து விடும். 

விளக்கம் : 

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

பழமொழி :

Small efforts every day add up to big results.

 தினசரி சிறு முயற்சிகள் பெரிய வெற்றிகளை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.எனது பள்ளியின் வளர்ச்சிக்கான பணிகளில் எனது பெற்றோர்களும் ஈடுபட வலியுறுத்துவேன்.

2.ஊர் கூடி செய்யும் செயல்கள் அதிக நன்மை பயக்கும் என்பதால் அனைவரோடு சேர்ந்து எங்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

பொன்மொழி :

நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ.  பிறருடைய முதுகில் ஏறி பயணம் செய்ய நினைக்காதே -நியேட்சே.

பொது அறிவு : 

01.நெப்டியூன் கிரகம் சூரியனை சுற்றிவர எத்தனை ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது?

            165  புவி ஆண்டுகள்

(165 Earth years)

02.தேசிய சுற்றுலா தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?        

               25 ஜனவரி (25 January)

English words :

avian – related to a bird.பறவை சம்பந்தப் பட்ட. aspire – to have a strong desire to do something. அழுத்தமான விருப்பம் 

Grammar Tips: 

 The bridge rule 

When u hear /j/ sound at the end of the words use

-dge after short vowels otherwise -ge only 

Ex short vowel 

Ju*dge*, bri*dge*

Pa*ge*, ca*ge*

அறிவியல் களஞ்சியம் :

 பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்குழந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்குழந்தைகளைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால்தான்! சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.

ஜூலை 22

பை-தோராய-நாள்

பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் உள்ள விகிதமாகும். பை (π) என்பது 3.14 என்ற தசம மதிப்பைக் கொண்டுள்ளது. 1706 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கணிதவியலாளர் வில்லியம் ஜோன்ஸ் இந்த விகிதத்தைக் குறிக்க π குறியீட்டை உருவாக்கினார், பின்னர் இது சுவிஸ் கணிதவியலாளர் லியோன்ஹார்ட் யூலரால் பிரபலப்படுத்தப்பட்டது.

பை தோராய நாள் ஜூலை 22 அன்று கொண்டாடப்படுகிறது மற்றும் பை நாள் மார்ச் 14 அன்று கொண்டாடப்படுகிறது. 

நீதிக்கதை

 எல்லா உயிர்களுக்கும் உதவி செய்

ஒரு நாட்டு  ராஜாவிடம் முத்தன்  வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை தெரியும். முத்தனுக்கு ஒரேய ஆச்சரியம், எப்படி ராஜா விலங்குகள் பேசுவதை அறிந்து கொள்கிறார் என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது, முத்தன்  தான் அந்த ராஜாவுக்கு தினமும்  உணவு கொண்டு கொடுப்பான்.  ராஜாவின் உணவில் ஒரு பகுதி மட்டும் தனியாக தனிப் பெட்டியில் ராணியே சமைத்துத் தருவாள்.  ஒரு நாள்  முத்தன் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தான். அந்த பெட்டிக்குள்  ஏதோ  துண்டு தூண்களாக  சமைத்து வைக்கப்பட்டிருந்தன. இது என்னவாக இருக்கும் என்று  ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுப் பார்க்கிறான். அதைச் சாப்பிட்டதும் முத்தனுக்கு பறவை மிருகங்களின் பேசும் பாஷை புரிய ஆரம்பிக்கிறது. புதிய  சக்தி கிடைத்ததும் அவன் அரண்மனையில் இருந்து அப்படியே புறப்பட்டு கிளம்பி விடுகிறான். 

அவன் குதிரையில்  கிளம்பிச் செல்லும் வழியில் எறும்புகள்  சாரை சாரையாக போவதை பார்த்தான்,  எறும்பின்  தலைவன் இவனிடம் குதிரையை எறும்புகளை மிதிக்காத வண்ணம் செலுத்தும் படி வேண்டிக் கொண்டது. அவனும் அப்படியே செய்தான். எறும்புகள் நன்றி தெரிவித்து, என்றேனும் உங்களுக்கு  உதவுவேன் என்று கூறியது.

அடுத்து, அவன் செல்லும் வழியில் குளம் இருந்தது அங்கு மூன்று மீன்கள் அழும் குரல் கேட்டது. அவை புதருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. குளத்தில் தாவிக் குதிக்கும் போது அவை தவறிப் புதரில் விழுந்திருந்தன. அத்தனையும் காப்பாற்றி தண்ணீருக்குள் மீண்டும் எடுத்துவிட்டு கிளம்பினான். மீன்களும் நன்றி தெரிவித்தது.

அவன் கொஞ்ச தூரம் ஒரு காட்டைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தான். சின்னஞ்சிறு காகங்களின் குரல் கேட்டது. தாய் காக்கை அவைகளிடம் “நீங்களே உங்கள் உணவைத் தேடிக் கொள்ளுங்கள் ” என்று கூறி மரத்தில் இருந்து கீழே தள்ளி விட்டிருந்தது. அவைகளுக்கு தானியங்களை உணவாக கொடுத்துவிட்டு கிளம்பினான். அவை மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி கூறின. அதன் பின் காட்டைக் கடந்து அவன் வேறு ஒரு நாட்டுக்குள் நுழைந்தான். ஊரே கோலாகலமாக இருந்தது. 

அந்த நாட்டு இளவரசி தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தாள். வேலைக்காரனுக்கு ஆசை, எப்படியும் இந்தப்போட்டியில் கலந்துகொண்டு நாம் இந்த நாட்டின் அரசனாக வேண்டும் என ஆசைப்பட்டான். போட்டியில் கலந்து கொண்டான். போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால்   சிறையில் தள்ளிவிடுவார்கள்.   போட்டி ஆரம்பம் ஆனது, அவனை ஒரு குளத்திற்குக் கூட்டிப் போனார்கள். குளத்திற்குள் ஒரு மோதிரத்தை போட்டு அதனை  எடுக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள் . அவன் பயந்து மலைத்து நின்றான். குளத்திற்குள் நீந்த ஆரம்பித்த அவனுக்கு ஆச்சரியம்....! “இதோ உங்கள் மோதிரம்” என்று ஒரு குரல் கேட்டது. ஒரு மீன் தன் வாயில் மோதிரத்தைக் கவ்விக்கொண்டு வந்திருந்தது. அது அவன் புதலிருந்து காப்பாற்றிய மீன். இளவரசி அடுத்த போட்டி வைத்தாள். ஒரு மூட்டை அரிசி முழுவதும் தோட்டத்தில் கொட்டப்பட்டு   விடிவதற்குள் ஒரு அரிசி விடாமல் சேகரிக்க  வேண்டும். ஆகா இது நடக்கவே நடக்காது நமக்கு சிறை தான்  என்று முடிவு செய்து அவன் தூங்கி விட்டான். அவன் உதவி இருந்த எறும்புகள் ஒவொன்றாக பொருக்கி ஒரு மூட்டையில் வைத்திருந்தது. அதனால் அதிலும் ஜெயித்து விட்டான். இறுதியான போட்டி ஒரு தங்க ஆப்பிள் காய்க்கும் மரம் காட்டில் இருக்கிறது- அதைக் கண்டுபிடித்து ஆப்பிளை எடுத்து வர வேண்டும். அவன்  இருட்டும் வரை தேடினான் பசுமை மரங்கள் மட்டுமே இருந்தன. தங்க மரத்தைக் காணவே இல்லை. கவலையுடன் இருட்டியபிறகு தூங்கிவிட்டான். காலையில் எழுந்து பார்க்கிறான்  அவன் அருகில் தங்க ஆப்பிள் இருந்தது. அவனிடம் உதவி பெற்ற காகங்கள் அந்த ஆப்பிளைத் தேடிக் கொண்டு வந்து அவனிடம் போட்டிருந்தன. அவன் அவைகளுக்கு நன்றி தெரிவித்தான். எல்லா போட்டியிலும் ஜெயித்ததால் அவனை இளவரசி மணந்து கொண்டாள். அவன் ராஜாவாக அவளுடன் அந்த நாட்டை மகிழ்ச்சியுடன் வெகு நாள் ஆட்சி செய்தான்.

நாம் செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும்.  ‘‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’’  மிக மிக அவசியமான நேரத்தில் செய்யப் படும் உதவி இந்த உலகை விட மிகப் பெரியது. அரபுக் கதை. குழந்தைகளுக்கான கதை தமிழாக்கம்: ஆல்பர்ட் ” ஏப்ரல்-ஜூன் 2015 இதழ் சிறுவர் இலக்கியச் சிறப்பிதழாக வந்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல எந்த வயதினருக்கும் வாசிக்க இனிமையானவையே.

இன்றைய செய்திகள் - 22.07.2025

⭐சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவி ஏற்பு

⭐இந்திய எல்லைக்கு அருகே திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ரூ.14.46 லட்சம் கோடியில் சீனா பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது.

⭐இந்தோனேசியாவில் சொகுசு கப்பல் தீ விபத்து: 5 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் செஸ் உலக கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை ஹம்பி

🏀வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி

🏀2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு

Today's Headlines

 ⭐New Chief Justice of Chennai  High Court  takes Oath .

⭐China has started building a huge dam worth Rs. 14.46 lakh crore on the Brahmaputra River, which flows in Tibet near the Indian border.

⭐5 died  in luxury cruise ship fire in Indonesia 

 *SPORTS NEWS* 

🏀Indian player Humpy advances to semifinals of Women's Chess World Cup

🏀Australia wins first T20 against West Indies 

🏀2025 Chess World Cup to be held in India, announced.

Covai women ICT_போதிமரம்

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

School Level Literary Clubs & Quiz Competitions - Topics & Guidelines - DSE Proceedings

       Education News (கல்விச் செய்திகள்)

2025-2026 : தமிழ் இலக்கிய மன்றம், English Literary Club மற்றும் வினாடி வினாப் போட்டிகள் - தலைப்புகள் & வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் , நாள் : 17-07-2025

பள்ளியில் பயிலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளியளவிலான இலக்கிய மன்றப் போட்டிகள் மற்றும் வினாடிவினா மன்றப் போட்டிகள் - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - சார்ந்து.

அனைத்து அரசு நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மன்றச் செயல்பாடுகளை மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக ஒவ்வொரு மாதமும் நடைமுறைப்படுத்துதல் சார்ந்து

 தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், 

ந.க.எண்.34784/எம்1/இ1/2025 நாள்: 17.07.2025

Click Here to Download - DSE - Literacy Club & Quiz Club - Topics & Guidelines - Director Proceedings - Pdf

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

8th Pay Commission - DA, TA, HRA சம்பளத்துடன் அலவன்சுகளிலும் அதிரடி ஏற்றம், எவ்வளவு தெரியுமா?

        Education News (கல்விச் செய்திகள்)

இன்னும் சில மாதங்களில் 8வது ஊதியக்குழு அமலுக்கு வரவுள்ளது. இதன் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளமும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் பெரிய அளவில் அதிகரிக்கவுள்ளன. இதற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மட்டுமல்லாமல் அவர்களது அலவன்சுகளிலும் ஏற்றம் இருக்கும். இது அவர்களது மொத்த சம்பளத்தை இன்னும் கணிசமாக அதிகரிக்கும். 8வது ஊதியக்குழுவின் அலவன்சுகளில் எவ்வளவு ஏற்றம் இருக்கும்? இந்தியாவில் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? அலவன்சுகளின் விவரம் என்ன? இவற்றை பற்றி தெரிந்துகொள்ளலாம்.

அரசு ஊழியர்களின் சம்பளம் எப்படி பிரிக்கப்படுகின்றது?

அரசு ஊழியர்களின் சம்பளம் பல பகுதிகளைக் கொண்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் அடிப்படை ஊதியம் (Basic Pay), அகவிலைப்படி (Dearness Allowance), வீட்டு வாடகைப் படி (House Rent Allowance), பயணப் படி (Travel Allowance) மற்றும் பிற படிகள் அடங்கும். மேலும், ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் சம்பள கட்டமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகக இருக்கும்.

அடிப்படை ஊதியம்

- இது ஒரு அரசு ஊழியரின் சம்பளத்தின் முக்கிய மற்றும் நிலையான பகுதியாகும். இது ஊழியரின் பதவி உயர்வு மற்றும் பணிக்காலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. 

- மீதமுள்ள படிகள் அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன. 

- முன்னர் அடிப்படை ஊதியம் மொத்த சம்பளத்தில் சுமார் 65% ஆக இருந்தது, ஆனால் இப்போது அது சுமார் 50% ஆக உள்ளது. 

- 8வது ஊதியக்குழுவில் தீர்மானிக்கப்படும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போதுள்ள அடிப்படை ஊதியத்துடன் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

அகவிலைப்படி (DA)

பணவீக்கத்தைச் சமாளிக்க ஊழியர்களுக்கு உதவ அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இது அடிப்படை ஊதியத்தின் ஒரு சதவீதமாகும். 

- மேலும் இது நுகர்வோர் விலைக் குறியீட்டை (CPI) பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது. 

- ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் வருடத்திற்கு இரண்டு முறை DA திருத்தப்படும். 

- உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதத்திற்கு ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50% ஆகவும் இருந்தால், டிஏ தொகை மாதம் ரூ.9,000 ஆக இருக்கும். எனவே, மொத்த சம்பளம் ரூ.27,000 ஆக இருக்கும்.

- 8வது ஊதியக்குழுவில் தற்போதுள்ள அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி கணக்கீடும் 1%, 2%, 3% என தொடங்கும் என கூறப்படுகின்றது.

வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA)

வாடகை வீட்டில் வசிப்பதற்கான வாடகையை செலுத்த ஊழியர்களுக்கு HRA வழங்கப்படுகிறது. 

- இது அடிப்படை ஊதியத்தில் 27%, 18% அல்லது 9% ஆக இருக்கலாம். 

- இந்த விகிதம் X, Y அல்லது Z வகை என பணியாளர் பணிபுரியும் நகரத்தைப் பொறுத்தது. 

- பெருநகர நகரங்களில் அதிக HRA விகிதங்கள் உள்ளன. 

- 8வது ஊதியக் குழுவில் இந்த கொடுப்பனவில் ஏற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பயண கொடுப்பனவு (TA)

- இந்த கொடுப்பனவு பயணம் அல்லது பயணச் செலவுகளை உள்ளடக்கியது. 

- இது ஒரு நிலையான தொகை. 

- இது பணியாளரின் சம்பள நிலை மற்றும் நகரத்தின் வகையைப் பொறுத்தது. 

ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?

- ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். 

- ஒரு ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.20,000 ஆகவும், அகவிலைப்படி 55% (தற்போதைய அகவிலைப்படி) ஆகவும் இருந்தால், அகவிலைப்படி மாதத்திற்கு ரூ.11,000 ஆக இருக்கும். 

- 8வது ஊதியக் குழுவில், முதலில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்படும். 

- இது நேரடியாக சம்பளத்தை உயர்த்தும்.

- ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 இலிருந்து 3 ஆக அதிகரித்தால், புதிய சம்பளம் சுமார் ரூ.29,000 ஆக இருக்கும். 

- அதாவது, பணியாளரின் மொத்த சம்பளம் புதிய அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உட்பட மாதத்திற்கு ரூ.31,000 இலிருந்து ரூ.60,000 ஆக உயர வாய்ப்புள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

        Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250717_164155

e2025-2026ஆம் கல்வியாண்டில் வானவில் மன்ற செயல்பாடுகள் தொடங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

மாநில அளவில் பயிற்சி பெற்ற முதன்மைக் கருத்தாளர்களால் மாவட்ட அளவிலான பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் உள்ள வானவில் மன்ற கருத்தாளர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் , வானவில் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளரின் மேற்பார்வையில் ஜூலை 18 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. வானவில் மன்ற கருத்தாளர்கள் ஜூலை 21 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்குச் செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது .

DSE - Vaanavil Mandram Instructions - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

பள்ளி கல்வித்துறையில் முன்னோடி திட்டங்கள்: தமிழக அரசுக்கு அமெரிக்க குழு பாராட்டு

       Education News (கல்விச் செய்திகள்)

 1369829

தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை செயல்​படுத்​தும் முன்​னோடி திட்​டங்​களுக்கு அமெரிக்க குழு​வினர் பாராட்டு தெரிவித்தனர். அமெரிக்​கா​வில் இருந்து இந்​தியா வந்​துள்ள புகழ்​பெற்ற நிபுணர் குழு​வினர், தமிழகத்​துக்கு வருகை புரிந்​தனர். நேற்று முன்​தினம் தலை​மைச் செயல​கத்​தில் பள்​ளிக் கல்​வித்​துறை செய​லா​ளர் சந்​திரமோகனை இந்​த குழு​வினர் சந்​தித்​தனர்.

இந்த குழு​வில் பிலடெல்​பியா செவன்டி குழு தலைமை நிர்​வாக அதி​காரி லாரன் கிறிஸ்​டெல்​லா, கிளீவ்​லேண்ட், கேஸ் வெஸ்​டர்ன் ரிசர்வ் பல்​கலைக்​கழக சட்​டப் பள்​ளி​யின் பேராசிரியர் ஜூலியட் கோஸ்ட்​ரிட்​ஸ்​கி, கொலம்​பஸ் ஓகியோ பிர​தி​நி​தி​கள் சபை​யின் சட்ட உதவி​யாளர் பிரி​யாமெய்ஸ் இடம் பெற்​றிருந்​தனர்.

இந்த சந்​திப்​பின்​போது தமிழக பள்​ளிக்​கல்​வித் துறை​யில் செயல்​படுத்​தப்​படும் காலை உணவுத் திட்​டம், பள்​ளி​களில் இருந்து குழந்தைகள் இடைநிற்​றலை குறைத்​தல், அடிப்​படை எழுத்​தறிவு மற்​றும் எண்​ணறி​வு, சமத்​து​வம் மற்​றும் சமூக உணர்​வு​களை உள்ளடக்​கிய பாடத்​திட்ட சீர்​திருத்​தம் ஆகியவை குறித்து செய​லா​ளர் விளக்​கி​னார்.

அப்​போது, ஆதா​ரம் சார்ந்த கொள்​கைகள் மற்​றும் குழந்​தைகளை மையப்​படுத்​திய உத்​தி​கள் மூலம் பொதுக்​கல்​வியை மாணவர்களுக்கு வழங்​கும், பள்​ளிக்​கல்​வித் துறை​யின் உறு​திப்​பாட்டை அமெரிக்க பிர​தி​நி​தி​கள் பாராட்​டினர். மேலும், உள்​ளூர் பாரம்​பரி​யத்தை ஒருங்​கிணைப்​ப​தற்​கும், சமூகத்தை மையப்​படுத்​திய கற்​றலை ஊக்​கு​விப்​ப​தற்​கும், அனைத்து மட்​டங்​களி​லும் பள்ளி மாணவர்​களின் தலை​மைப் பண்பை வலுப்​படுத்​து​வதற்கு அரசு மேற்​கொள்​ளும் முயற்​சிகளை குழு​வினர் மிக​வும் பாராட்டினர்.

கல்​வி​யில் தொழில்​முறை பரி​மாற்​றம் மற்​றும் சர்​வ​தேச ஒத்​துழைப்​பு, பரஸ்பர புரிதல் மற்​றும் புது​மை​யான நடை​முறை​களை பகிர்வது ஆகிய​வற்​றின் உணர்வை இந்​த பயணம் வலுப்​படுத்​தி​ய​தாக அக்​குழு​வினர் தெரி​வித்​தனர். இத்​தகவல் பள்​ளிக்​கல்​வித் துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

பொது வருங்கால வைப்பு நிதி - வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

       Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250718_221708

பொது வருங்கால வைப்பு நிதி - 01.07.2025 முதல் 30.09.2025 வரையிலான காலத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

G.O.Ms.No.163 - Download here

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal, kalviseithi, School News, Latest news on education in tamil, Kalvi (கல்வி) )  பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் - ஜூலை 15ஆம் நாள் கல்வி வளர்ச்சி நாள் குறித்து DSE செயல்முறைகள்!

SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள்` தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!

     Education News (கல்விச் செய்திகள்)

IMG_20250718_154308

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பெயர் / பிறந்த தேதி / பெற்றோர் பெயர் திருத்தம் மேற்கொள்ள தங்கள் அலுவலகங்களில் பெறப்படும் விண்ணப்பங்களுடன் கீழ்க்காண் இணைப்புகள் இணைக்கப்பட்டால் மட்டுமே அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது . அவ்வாறு கீழ்க்காண் இணைப்புகள் இல்லாத பட்சத்தில் , தங்கள் அலுவலக அளவிலேயே விண்ணப்பங்களை நிராகரித்து , சரியான ஆவணங்களை இணைத்து வழங்கும்படி மாணவர்களை அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . மேலும் , இவ்விவரங்களை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து கீழ்க்காணும் இணைப்புகளுடன் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்களை பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSLC மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் மேற்கொள்ள `இணைக்க வேண்டிய ஆவணங்கள்` தொடர்பாக அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள்!

DGE - SSLC Correction.pdf

👇👇👇👇

Download here