காற்று மாசுபாடு உங்கள் மன நலனை பாதிக்குமா...? தெரிஞ்சுக்கலாம் வாங்க.

 இன்றைய நவீன காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு என்பது மிக முக்கியமான சுகாதார அபாயங்களில் ஒன்றாகும். மாசுபட்ட காற்று ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது கடுமையான நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. காற்று மாசுபாடு நுரையீரல் மற்றும் சுவாசத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் காற்று மாசுபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அவை மனநலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா?

ஆம், காற்று மாசுபாட்டின் விளைவுகளைக் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வில், மனநலத்திலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது உங்கள் மனநிலையை மாற்றுகிறது மற்றும் மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

இது தவிர மனச்சோர்வு, டிமென்ஷியா மற்றும் அல்சைமர் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நீங்கள் ஏற்கனவே இந்தப் பிரச்சனைகளுக்கு ஆளாகியிருந்தால், காற்று மாசுபாடு அவற்றை மோசமாக்கும். மாசுபடுத்திகள் மற்றும் அசுத்தமான காற்றை தொடர்ந்து வெளிப்படுத்துவது மன அழுத்த ஹார்மோன்களின் வெளியீட்டை அதிகரிக்கிறது. இது மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், பல வகையான உடல் உபாதைகளுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அதிகரித்து வரும் மாசுபாடு நமது உடல் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, மனநலத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சுற்றுச்சூழலில் உள்ள சிறிய மாசுபடுத்திகள் இரத்த ஓட்டத்தில் நுழைந்து பின்னர் மூளையை அடையலாம். இது வீக்கத்தையும், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸையும் ஏற்படுத்துகிறது. இது அறிவாற்றல் வீழ்ச்சி மற்றும் மனநல கோளாறுகளின் அபாயத்துடன் தொடர்புடையது. இது தவிர, அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அமைதியின்மை பிரச்சனையையும் ஏற்படுத்தும்.

மேலும், காற்று மாசுபாடு ஆரம்பகால வாழ்க்கையில் மூளையின் வளர்ச்சியை பாதிக்கிறது. இது குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில், சுற்றுச்சூழல் மற்றும் வளிமண்டல மாசுபாட்டின் வெளிப்பாட்டின் மூலம் நரம்பியல் வளர்ச்சி எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. காற்று மாசுபாட்டால் வெளிப்படும் குழந்தைகளுக்கு மன அழுத்தம், பதற்றம், நடத்தையில் பிரச்சனைகள், தூக்கக் கலக்கம் மற்றும் ADHD போன்ற அறிகுறிகள் அதிக அளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

காற்று மாசுபாட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை குறைப்பதற்கான உதவிக் குறிப்புகள்:

1. காற்றின் தரத்தைக் கண்காணிக்க, ஏர் பொல்லுஷன் மானிட்டர்களை பயன்படுத்தவும் அல்லது ஆன்லைனில் ஏர் குவாலிட்டி இன்டெக்ஸ்களைப் பார்க்கவும். காற்று மாசுபாடு அளவு அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் இடங்களில் வெளியில் செல்வதையோ அல்லது உடற்பயிற்சி செய்வதையோ தவிர்க்கவும்.

2. தீங்கு விளைவிக்கக்கூடிய காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டைக் குறைக்க N95 மாஸ்க்குகள் அல்லது சுவாசக் கருவிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தவும்.

3. குறிப்பாக காற்று மாசுபாடு அளவு அதிகமாக இருக்கும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே இருங்கள். ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைப்பதன் மூலம் வீட்டின் உட்புற காற்று மாசுபாட்டைக் குறைக்க முடியும்.

4. தினமும் உடற்பயிற்சி, சீரான உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகின்றன.

5. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது காற்று மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகளை உங்கள் உடல் சமாளிக்க உதவுகிறது.

6. மன அழுத்தமானது காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய சில உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கலாம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது யோகா போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.


Engineering தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

 

Engineering தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Cognizant Technology Solutions ஆனது Sr. UI React Developer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது  கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Sr. UI React Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Sr. UI React Developer கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Sr. UI React Developer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test  மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!

 EPFO அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு –  ஓய்வூதியம் குறித்த பல அறிவிப்பு!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அந்த நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்து வருகிறது. இந்த தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணி காலம் நிறைவடைந்த பின் மொத்தமாக நமக்கு திரும்ப கிடைக்கும். தற்போது தேவைக்கேற்ப தொகையை பணி காலத்திலேயே எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.


குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை தற்போது இருக்கும் ரூ.1,000 -லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊதிய வரம்பை ரூ.15,000-லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. EPF Account-ல் இருந்து அவசர காலங்களில் எடுக்கப்படும் தொகைக்கான வரம்பை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக அதிகரித்தது. மேலும் பணத்தை எடுக்க ஊழியர்கள் 6 மாத சேவை காலத்தை முடித்திருக்க வேண்டும் என்ற விதியும் தளர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

ECHS ஆணையத்தில் Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.22,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

ECHS ஆணையத்தில் Clerk வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.22,500/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Clerk, Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

ECHS காலிப்பணியிடங்கள்:

Clerk, Data Entry Operator பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Clerk கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ECHS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Clerk ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.22,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECHS தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

 

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் Research Associate காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Research Associate, Young Professional-II, Lab Assistant பணிக்கான காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ICAR -IARI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Associate, Young Professional-II, Lab Assistant பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / M.Sc / PhD தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ICAR -IARI வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ. 67,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து cpp.iari@gmail.com, viromeacpy@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

 

மாவட்ட சுகாதார சங்கத்தில் புதிய வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Nurse, Pharmacist, Radiologist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Pharmacist, Radiologist பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / Diploma / MD / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் மாதம் - வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியீடு.

 

IMG_20241202_224041

பள்ளி மன்ற செயல்பாடுகள் சிறார் திரைப்படம் திரையிடுதல் 202425 - அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் . சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் மாதம் - வழிகாட்டும் நெறிமுறைகள் 

December Movie Screening Circular 2024-25 - Download here


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு!!!

 

IMG_20241203_071748

உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு!!!


Click this link👇👇👇

 
https://elearn.tnschools.gov.in/cwsn/QJWMN?fbclid=IwY2xjawG6tX9leHRuA2FlbQIxMQABHZohceWWss51lImZpq41ozi5iqXfQ-8i6I8WwM-3EKQ4Sl9sxLeR9mS1Fw_aem_toWG6AUKi6eFDJ2Y16otyA&sfnsn=wiwspwa


சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - SPD Proceedings 2.12.2024

 

IMG_20241203_095035

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கோயமுத்தூர் மாவட்டம் - கல்வி சாரா செயல்பாடுகள் 2024 -25 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ( 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு " கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - சார்பு SPD Proceedings 

KT Route Map 2_merged spd Proceedings - Download here

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

Tamil Nadu Chief Minister's Talent Search Examination - January 2025 Application Form

 .com/

Tamil Nadu Chief Minister's Talent Search Examination - January 2025 Application Form

👇👇👇

Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

 

1341783

இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.


தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் விரும்பினால் இளநிலை பட்டப் படிப்பை முன்கூட்டியே முடிக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது’’ என்று தெரிவித்தார்


இந்நிலையில், இந்த திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 3 அல்லது 4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விரும்பினால், அதற்கான கிரெடிட் பெற்று படிப்பை முன்னரே முடிக்கலாம். தேவைப்பட்டால், பட்டப் படிப்பின் காலத்தை அதிகரிக்கவும் செய்யலாம்.


இதன்படி, இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு முன்னதாக முடிக்கலாம். அதேபோல, நீட்டிப்பு தேவைப்படுவோர் 6 மாதம் அல்லது ஓராண்டு கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். பொருளாதார நிலை அல்லது தனிப்பட்ட காரணங்களால் கல்லூரி படிப்பை தொடர முடியாவிட்டால், கூடுதலாக 2 பருவங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம்.


இது துரிதப்படுத்தப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட பட்டப் படிப்பு திட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டப் படிப்புக்கு நிகராகவே இது ஏற்கப்படும். இந்த வசதியை பெற, முதல் அல்லது 2-வது பருவத்திலேயே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் இத்திட்டம் விரைவில் இது அமல்படுத்தப்பட உள்ளது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group 

சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் - `மிஷன் இயற்கை` - செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

 

IMG_20241202_140531

சுற்றுச்சூழல் மன்ற செயல்பாடுகள் - `மிஷன் இயற்கை` - செயல்திட்ட அட்டவணை - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

DSE - Mission Iyarkai Proceedings - Download here



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group