பலன்களை அள்ளித் தரும் சீரகம்… உணவில் எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா?

 சமீபகாலமாக மசாலாப் பொருட்களின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளது. இதற்குப் பின்னால் இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன - ஒன்று, அவற்றின் உற்பத்தி கணிசமாக அதிகரிக்கவில்லை, இரண்டாவது, மக்களிடையே அவற்றின் தேவை வேகமாக அதிகரித்தது. குறிப்பாக, உடல் நலன்களை அறிந்து மக்கள் அதிக அளவில் அவற்றை வாங்கத் தொடங்கியுள்ளனர். பொதுவாக மசாலாப் பொருட்கள் விலை அதிகம் என்பதால் சிறிய பாக்கெட்டுகளில் வாங்குவார்கள்.

செரிமானத்தில் சீரகத்தின் பங்களிப்பு: சீரகம் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது, இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வீக்கம், வாயு மற்றும் அமிலத்தன்மையைக் குறைக்கிறது. வயிற்றுப்போக்கு பிரச்சனையிலும் இது நன்மை தரும். சீரகத்தில் உள்ள சிறப்பு ஃபிளாவனாய்டுகள் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குகிறது. இது மார்பு வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, தினசரி உணவில் ஒரு ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: சீரகத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது. குறிப்பாக பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை பிரச்சனையை நீக்குகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் சி நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. சீரகத்தை அதிகமாக வறுக்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனெனில் இது அதன் பண்புகளை குறைக்கிறது.

எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்: சீரகம் உடலில் இருந்து கெட்ட கொழுப்பைக் குறைத்து, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். அதன் சுவை கசப்பாகத் தோன்றினாலும், அதன் வழக்கமான நுகர்வு இரண்டு வாரங்களில் எடை குறைவதற்கு வழிவகுக்கிறது. சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நன்மை பயக்கும். மேலும், கொலஸ்ட்ராலை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

தோல் மற்றும் இதர நன்மைகள்: சீரகம் சருமத்தில் உள்ள கறைகளை நீக்கி தொண்டை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது கல்லீரலை சிறப்பாக செயல்பட உதவுகிறது மற்றும் பெண்களுக்கு மாதவிடாய்களை ஒழுங்குபடுத்துகிறது. சீரகத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். இதை தண்ணீரில் சேர்த்து குடிக்கலாம். வறுத்து அரைத்த பின் மோர் அல்லது தயிர் கலந்து சாப்பிடலாம். சீரக எண்ணெய் மசாஜ் செய்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். இஞ்சி மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து வேகவைத்து அதன் சாறு குடிப்பது அதிக நன்மை தரும்.

முன்னெச்சரிக்கை: சீரகத்தில் பல நன்மைகள் இருந்தாலும், அதன் அதிகப்படியான நுகர்வு தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான பயன்பாடு நெஞ்செரிச்சல் மற்றும் இரத்த சர்க்கரையின் அதிகப்படியான வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே, அதை குறைந்த அளவில் உட்கொள்ளுங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்கு மருத்துவரை அணுகவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவில் படுக்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன..?

 நம்மால் தண்ணீர் இன்றி வாழ முடியாது, எனவே நாம் ஒரு நாளைக்கு பல முறை போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஒரு நாளின் பல்வேறு நேரங்களில் நாம் தண்ணீர் குடித்தாலும், இரவில் தூங்க செல்வதற்கு முன் ஏன் தண்ணீர் குடிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இது ஏன் என்று தெரிந்து கொள்வோம்…

தண்ணீர் நம் வாழ்வில் மற்றும் உடலில் ஒரு முக்கிய அங்கம் ஆகும். நம் உடலில் தண்ணீரின் அளவு மிக அதிகமாக உள்ளது, எனவே உடலில் உள்ள நீரின் அளவு ஒரு போதும் குறைய கூடாது. நாம் அனைவரும் நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கிறோம், ஆனால் இரவில் படுக்க செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா? இங்கே தெரிந்து கொள்வோம் வாருங்கள்…

தூங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

தூங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த பழக்கம் பாக்டீரியா மற்றும் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் நம் உடலின் திறனை அதிகரிக்கிறது. இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

News18

வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது:

இரவு தூங்க செல்லும் சில நிமிடங்களுக்கு முன் தண்ணீர் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, இது உங்கள் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தும். எனவே இரவில் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை கண்டிப்பாக பின்பற்றவும்.

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்கும்:

இரவில் தூங்க செல்லும் முன் தண்ணீர் குடிப்பது உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த பழக்கம் நமது சிறுநீரகங்களை சுத்தப்படுத்தி சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

முழங்கால் வலியை போக்கும்:

இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் உங்கள் முழங்கால் மூட்டுகள் ஆரோக்கியமாக இருக்கும். இது அப்பகுதியில் இருக்கும் வலியைக் குறைத்து, உங்கள் நாளை சீராக தொடங்க உதவி செய்யும். அடிக்கடி முழங்கால் வலியால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக இரவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது:சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது:இரவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது நம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, இது நம் சருமத்தை தெளிவாக மற்றும் அழகாகவும் வைத்திருக்கும். குறிப்பாக தோல் பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த பழக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கனமழை எதிரொலி: இன்று (27.11.2024) விடுமுறை அறிவிப்பு. ( Update...

 கனமழை - இன்று (27.11.2024) விடுமுறை :


திண்டுக்கல் - கொடைக்கானல் பகுதி ( பள்ளிகளுக்கு மட்டும்...)

அரியலூர் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

ராமநாதபுரம் ( பள்ளி,  கல்லூரி )

திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

சிவகங்கை ( பள்ளிகளுக்கு
 மட்டும்...)

புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

காஞ்சிபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்...)

விழுப்புரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு)

* தஞ்சை ( பள்ளி,  கல்லூரி )

சென்னை ( பள்ளிகளுக்கு மட்டும்...)

செங்கல்பட்டு  ( பள்ளிகளுக்கு மட்டும்...)

திருவாரூர் ( பள்ளி,  கல்லூரி )

நாகை ( பள்ளி,  கல்லூரி )

மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி )

கடலூர் ( பள்ளி,  கல்லூரி )

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

EMIS - New Update - DEE School Infrastructure Details Upload ( Video )

 IMG_20241127_081421

DEE SCHOOL INFRASTRUCTURE DETAILS SUBMIT | SUBMIT CFSIDS FORM | TNEMIS NEW UPDATE | CIVIL UPLOAD - VIDEO

 TNEMIS


The CFSIDS Assessment of Infrastructure Needs...


அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம். 


பள்ளி உட்கட்ட அமைப்பு வசதிகள் பற்றிய தகவல்களை EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்வதற்கான Option தற்பொழுது enable செய்யப்பட்டுள்ளது. 


அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் School login ➡️Dashboard ➡️ Approval ➡️SIDS என்ற தலைப்பில் ➡️ DEE SCHOOL INFRASTRUCTURE என்ற தலைப்பின் கீழ் விவரங்களை எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்வது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

👇👇👇👇👇

https://youtu.be/WIVdNY-t6Fw?si=Yi9CuqaO_5OKiadb



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || உடனே விண்ணப்பியுங்கள்!

 

தமிழக அரசில் ரூ.18,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Case Worker, Security Guard, Multi-purpose Helper பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker, Security Guard, Multi-purpose Helper பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

தமிழக அரசில் Lab Technician வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

தமிழக அரசில் Lab Technician வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician, Pharmacist பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Lab Technician, Pharmacist பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Pharm / D.Pharm / Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

ரூ.55,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

ரூ.55,000/- ஊதியத்தில் NIT திருச்சி வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி ஆனது Temporary Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Temporary Medical Officer பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

🔻🔻🔻

Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/-ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/-ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

GATE அல்லது NET தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Pondicherry University வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Project Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- முதல் ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(29.11.2024) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் seshadrirajeswari@pondiuni.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

Cognizant நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Cognizant Technology Solutions ஆனது Incident manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Cognizant பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Incident manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Incident manager கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 6 முதல் 10 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Cognizant வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Incident manager ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Cognizant-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cognizant தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Skill Test  மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

IIT Madras- ல் Senior Executive காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

IIT Madras- ல் Senior Executive காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIT Madras ஆனது Senior Executive பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Executive பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

கனமழை எதிரொலி: நாளை (27.11.2024) விடுமுறை அறிவிப்பு.

 கனமழை - நாளை (27.11.2024) விடுமுறை :

நாகை ( பள்ளி,  கல்லூரி )

மயிலாடுதுறை ( பள்ளி,  கல்லூரி )

கடலூர் ( பள்ளி,  கல்லூரி )

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - புதுச்சேரி அரசு.


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024 - 2025

IMG_20241126_094209

பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024 - 2025

👇👇👇👇

School Safety Module - Download here



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - இன்று ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - இன்று ( 26.11.2024 ) பள்ளிகளில் எடுக்க வேண்டிய உறுதிமொழி



CM Breakfast Scheme - TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறை

 CM BREAKFAST SCHEME TNSED SCHOOLS APP

முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் விவரங்களை


TNSED SCHOOLS செயலியில் UPDATE செய்வதற்கான வழிமுறை

👇👇👇👇

https://youtube.com/shorts/CnLWXUQ0p8Y?feature=share

நவ. 26ல் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பின் முகப்புரையை வாசிக்க வேண்டும்: முதல்வர் உத்தரவு

 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆம் ஆண்டை முன்னிட்டு, நவ. 26ம் தேதி அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு: மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள் / கருத்தரங்குகள் / வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ed


🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news

Click here to join TNkalvinews whatsapp group

Click here to join TNPSC STUDY whatsapp group