கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு; விண்வெளி தொடர்பாக பயிற்சி பெற இஸ்ரோ அழைப்பு

 இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை மற்றும் முதுகலை (UG/PG) படிப்புகளை வழங்கும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)-2024 நடத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) திட்டமிட்டுள்ளது.

START-2024 திட்டம், ஏப்ரல்-மே, 2024 இல் நடத்தப்படும், இது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்கும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு அறிமுக நிலை ஆன்லைன் பயிற்சியாகும்.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ கல்வி நிறுவனங்களில் இயற்பியல் அறிவியல் (இயற்பியல் மற்றும் வேதியியல்) மற்றும் தொழில்நுட்பம் அதாவது மின்னணுவியல், கணினி அறிவியல், இயந்திரவியல், பயன்பாட்டு இயற்பியல், ரேடியோபிசிக்ஸ், ஒளியியல் மற்றும் ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ், கருவியியல் மற்றும் பிற தொடர்புடைய பாடங்களைப் படிக்கும் முதுகலை மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள் இந்தப் பயிற்சியில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.

நிறுவனங்களில் படிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களை, அவர்களின் திறன், தகுதி/கல்வி செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை ISRO/DoS க்கு ISRO பரிந்துரைத்தபடி ஒரு வடிவத்தில் அனுப்ப வேண்டும்.

இஸ்ரோ முன்முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க ஆர்வமுள்ள கல்வி நிறுவனங்கள், ஏப்ரல் 2, 2024க்குள் jigyasa.iirs.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலம் START-2024 பயிற்சியை நடத்த தங்கள் ஆர்வத்தை அனுப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை மாணவர்கள் மற்றும் பிற நபர்கள் ஜிக்யாசா போர்ட்டல் மூலம் ஏப்ரல் 8 மற்றும் 12, 2024க்குள் ஆன்லைனில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். START திட்டம் ISRO E-CLASS தளமான https://eclass.iirs.gov.in என்ற இணையப் பக்கம் மூலம் நடத்தப்படும்

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் ISRO START திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஒரு மூத்த ஆசிரியர்களை அடையாளம் காண, நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் (இணைப்பு-1) பொருத்தமான நியமனக் கடிதத்தின் இணைப்புடன் தங்கள் நிறுவனத்தை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இஸ்ரோ START- நடத்துவதற்கு நிறுவனத்தில் உள்ள வசதிகள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும்.

 

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news

 


பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

JRF கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


Junior Research Fellow ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Short List செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.04.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது baluchamy@yahoo.comஎன்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download notification 2024 Pdf



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 Wipro நிறுவனம் ஆனது Administrator பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Administrator பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Administrator கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Administrator ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தென் மாவட்ட இளைஞர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஐடி வேலை உங்கள் ஊரில்!

 தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரபல ஐடி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

ஐடி நிறுவனம்

சென்னை பெங்களூர் போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் தென் தமிழகத்தில் மதுரையிலும் ஐடி நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மக்கள் வர்த்தகம் செய்யும் ஐடி சேவை நிறுவனமான Happiest minds நிறுவனம் மதுரையில் தன்னுடைய கிளையை மேம்படுத்த இருக்கிறது.


இந்த நிறுவனம் மதுரையில் தயா சைபர் பார்க்கில் புதிய டெவலப்மெண்ட் சென்டரை திறந்துள்ளது. இந்த புதிய டெவலப்மெண்ட் சென்டரில் 250 பேரை பணியில் அமர்ந்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே 550 ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய ஐடி நிறுவனம் மேம்படுவது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news