Search

சீக்கிரமா உடல் எடையை குறைக்க நினைத்தால் உங்களுக்கு இந்த 6 ஆபத்துகள் வரலாம்..!

 இன்றைய காலத்தில் எதிலும் விரைவான முடிவை எதிர்பார்க்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றாலும் அல்லது அதை குறைக்க வேண்டுமென்றாலும், அடுத்த நொடியே அவர்கள் நினைத்தபடி நடக்க வேண்டும். பலரது எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. தொடர்ச்சியான உடற்பயிற்சி அல்லது ஒரு நாளைக்கு 800 கலோரிகளுக்கும் குறைவாக உணவை எடுத்துக் கொண்டால் விரைவாக உடல் எடையை குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இப்படி உடல் எடையை வேகமாக குறைப்பதால், உங்கள் உடல்நலனில் பல மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் உடல் கலோரிகளை எரிக்கும் அளவை விட நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொண்டால், உங்கள் உடல் க்ளைக்கோஜென் ஆற்றலை பயன்படுத்த தொடங்குகிறது. உங்கள் உடலில் உள்ள இந்த க்ளைக்கோஜென் தண்ணீரோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த ஆற்றல் வீணாகும் போது, உங்கள் உடலில் நீரின் அளவும் குறையத் தொடங்குகிறது.

உங்களுடைய உடல் எடை வேகமாக குறைவதால் ஏற்படக்கூடிய 6 பக்க விளைவுகள் :

தசைகள் சுருங்கிப் போதல் : உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கும் உடல் எடை குறைவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குறைவான கலோரி கொண்ட உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு, உங்களின் எடையும் வேகமாக குறைந்தால், உங்கள் தசைகள் சுருங்கிப் போவதே முக்கிய காரணமாகும்.

மெடபாலிஸம் குறைதல்: குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு, குறைவான கலோரி உணவுகள் மற்றும் தசைகள் சுருங்கிப் போவதால் நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மெடபாலிஸத்தை குறைக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு : குறைவான கலோரி கொண்ட உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குறைவான கலோரிகளை எடுப்பதால், ஃபோலேட், இரும்புச்சத்து, விட்டமின் பி12 போன்ற சத்துகளும் உங்களுக்கு குறைவாக கிடைக்கின்றன. இதன் காரணமாக முடி உதிர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், அதிகப்படியான சோர்வு ஆகியவை ஏற்படும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு : திடீரென்று உங்கள் கலோரிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அலவையும் குறைக்கும் போது, நம்முடைய ஹார்மோனில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற தேவை நமக்கு அதிகரிக்கிரது.

பித்தப்பை கற்கள்: நாம் உண்ணும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கரைக்க உதவும் செரிமானச் சாறுகளை பித்தப்பைகளே சுரக்கின்றன. நீங்கள் நிறைய உணவுகளை சாப்பிடாத போது, உங்களுடைய பித்தப்பையில் செரிமானச் சாறுகள் காலியாகாமல் அப்படியே தேங்கிவிடுகின்றன. இது நாளடைவில் பித்தப்பை கற்களாக உருவாகின்றன. ஆகையால் வேகமாக உடல் எடையை குறைப்பதால் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நீர்ச்சத்து குறைதல்: உடல் எடை வேகமாக குறையும் போது, உடலில் உள்ள நீரின் அளவும் குறைவாகவே இருக்கும். இதனால் உங்கள் உடலில் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிரது.

உங்கல் உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளீர்களா? அப்படியென்றால் அதை நீண்டகால நோக்கில் செயல்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைமுறையில் போதுமான மாற்றங்களை கொண்டு வாருங்கள். உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் சில அடிப்படையான விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அது என்னவென்றால்,

  • லீன் புரொட்டீனை உட்கொள்ளுங்கள்
  • சர்க்கரை மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • நன்றாக தூங்குங்கள்
  • மன அழுத்தத்தை குறையுங்கள்
  • உடலை வலுப்படுத்தக் கூடிய தீவிர உடற்பயிற்சி செய்யுங்கள்
  • நீண்டகால நோக்கில் ஒரு பழக்கத்தை சரிவிகிதமாக கடைபிடிப்பதன் மூலமே உடல் எடையை வெற்றிகரமாக குறைக்க முடியும். ஆகையால் உடனடி எடை குறைப்பை உண்டாக்கும் டயட்டிற்கு இன்றே முடிவுரை எழுதுங்கள்.-


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

0 Comments:

Post a Comment